Wednesday, December 1, 2021

ராஜஸ்தானுக்கு விமான சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

ராஜஸ்தானுக்கு விமான சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : நவ 30, 2021 21:30

சென்னை:ராஜஸ்தானுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., பாரம்பரிய கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்குவதுடன், விமான சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்து வருகிறது.வரும் 12ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்கு, ஏழு நாட்கள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயணத்தில் ஜெய்ப்பூர், அஜ்மீர், புஷ்கர், ஜோத்பூர், ஜெய்சல்மார் மற்றும் பிகானீர் சென்று வரலாம். ஒருவருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை அலுவலகம் - 90031 40682; மதுரை அலுவலகம் - 82879 31977; திருச்சி அலுவலகம் - 82879 31974 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஷீரடிக்கு ரயில்

மதுரையில் இருந்து ஷீரடிக்கு, வரும் 24ம் தேதி யாத்திரை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஷீரடிக்கு செல்லும்.இப்பயணத்தில், ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் மற்றும் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்று வரலாம்.

ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 7,060 ரூபாய் கட்டணம்.ஷீரடியில், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் தகவலுக்கு, சென்னை அலுவலகத்தை, 90031 40680 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இணையதளத்தில் www.irctctourism.com முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...