Wednesday, December 1, 2021

தலைமை செயலகத்தில் வாடகை திடீர் உயர்வு

தலைமை செயலகத்தில் வாடகை திடீர் உயர்வு

Added : நவ 30, 2021 21:47

சென்னை:தலைமை செயலகத்தில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டங்களில் இயங்கும் கடைகளுக்கு, வாடகை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தலைமை செயலகம் வளாகத்தில், பெரும்பாலான கட்டடங்கள், ராணுவத்தின் கட்டுப் பாட்டில் உள்ளன. இவற்றில், ஓட்டல்கள், டீக்கடைகள், வங்கிகள் போன்றவை இயங்கி வருகின்றன. இவற்றுக்கு, சதுர அடிக்கு, 25 முதல் 30 ரூபாய் வரை வாடகை நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

தற்போது, ஒரு சதுர அடிக்கான வாடகை, 60 முதல் 66 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது. இதன் காரணமாக, மாதம், 6,000 வாடகை கொடுத்தவர்கள், 18 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாதம், 25 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தியவர், 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை செயலகம் பழைய கட்டடமும், ராணுவத்திற்கு சொந்தமானது. அதில், அரசு அலுவலகங்கள் இயங்குவதால், வாடகை உயர்த்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024