Wednesday, December 1, 2021

அரசு பஸ்சில், கோழிக்கும் அரை டிக்கெட் வாங்கி பயணித்த விவசாயி


அரசு பஸ்சில், கோழிக்கும் அரை டிக்கெட் வாங்கி பயணித்த விவசாயி

Updated : டிச 01, 2021 04:24 | Added : நவ 30, 2021 22:04





கொப்பால்: விவசாயி ஒருவர் அரசு பஸ்சில்,கோழிக்கும் அரை டிக்கெட் வாங்கி பயணித்தார்.

கொப்பாலை சேர்ந்தவர் ராமப்பா, 45. விவசாயியான இவர், கடந்த 28ல் ஹைதராபாத்தில் இருந்து கொப்பால் கங்காவதிக்கு அரசு பஸ்சில் கோழியுடன் பயணித்தார்.அப்போது டிரைவர், 'கோழிக்கும் அரை டிக்கெட் வாங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.அதன்படி, 463 ரூபாய் கொடுத்து கோழிக்கும் தனியாக டிக்கெட் பெற்று பயணித்தார்.

ஒரு கோழியின் விலையை 300 ரூபாய் முதல் 400 ரூபாய் மட்டுமே இருக்கும். ஆனால் 463 ரூபாய் கொடுத்து பயணித்துள்ள இந்த கோழி, சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கண்டக்டர் அனிஷ் கூறுகையில், “ஹைதராபாத்தில் இருந்து கொப்பாலுக்கு வந்த ஒருவர், கோழியுடன் பஸ்சில் ஏறினார். கோழிக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என கூறியதால் அவர் வாங்கி பயணித்தார். இது வழக்கமாக உள்ளது தான்,” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024