Tuesday, July 11, 2023

NEWS TODAY 11.07.2023






























---------------------------------------------------------------------------------------------------------------------------
 தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: மா. சுப்பிரமணியன்

11.07.2023

சேலம்: திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 104 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதையும் படிக்க.. நான் அவர் அல்ல..

சிறுநீர் விவகாரத்தில் ஆள்மாறாட்டம்; தவறான நபரின் காலை கழுவினாரா முதல்வர்? சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது மகிழ்ச்சிக்குரியது. மாநிலத்தில் உள்ள 36 அரசுக் கல்லூரிகளிலும் 2 ஆண்டுகளாக நானே கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வருகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை 36 அரசுக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் 21, நிகர்நிலை கல்லூரிகள் 13 என மொத்தமாக 71 கல்லூரிகள் உள்ளன.

இந்தியாவில் 36 மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு உள்ள மாநிலங்களை விட இங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் மாணவர்கள் மருத்துவக் கல்வி நிறைவு செய்து வெளியே வருகின்றனர். சேலத்தில் 104 பேர் பட்டம் பெறுகிறார்கள். தற்போது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ,.400 கோடி தேவைப்படுகிறது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கருணாநிதியின் இலக்கு. மத்திய அரசு இப்போது இந்த இலக்கை அறிவித்துள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவை என்ற நிலை உள்ளது. முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டால் இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள பெருமையை தமிழகம் அடையும். விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கூறினார். இதையும் படிக்க..

மக்களவைத் தேர்தல்: ராமநாதபுரத்தில் மோடி போட்டி? மேலும், 150 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிறகு கட்டண வசதி வார்டுகள் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் கட்டண வசதி வார்டுகள் தொடங்கப்பட்டன. விரைவில் தருமபுரியிலும் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் சேலம் மருத்துவனை முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு பாதிப்பால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பாதிப்பை கண்டறிய முடியும்.1250 இடங்களில் நடைபெற்ற வருமுன் காப்போம் முகாம் வாயிலாக மாநிலம் முழுவதும் 15 லட்சம் பேர் பயனடைந்தனர். இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் கூட்டு மருந்து பெட்டகம் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பு வைக்கப்படும்.

மாரடைப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும். இன்னும் 15 நாட்களில் 1025 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது என்றார் அவர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
எதிரிகள் நமக்கு தேவை

DINAMANI 

மனிதனை சமூகவிலங்கு என்கிறோம். அவன் தனிமையை விரும்புவதில்லை. மற்ற மனிதா்களுடன் அன்றாடம் கலந்துரையாட வேண்டிய சூழ்நிலையில் அவன் இருக்கிறான்.

நாம் ஒவ்வொருவரும் வயது, அறிவு, பொருளாதார பின்புலம், வாழும் சூழ்நிலை, வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் போன்றவற்றில் வேறுபடுகிறோம். இதனால், சமூகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உருவாகிவிடுகின்றன.இது இயற்கையானதும், தவிா்க்க முடியாததுமாகும். இதன் காரணமாக நம்மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. நம்முடைய வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை என்பது எல்லா காலகட்டத்திலும் நிச்சயம் இருக்கும்.

பொதுவாழ்வில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிா்த்து கேள்வி கேட்பவா், தவறுகளை சுட்டிக் காட்டுபவா் இல்லையென்றால் அவரால் நல்ல தலைவராக பரிமளிக்க முடிவதில்லை. அதனால், எதிரிகளின் தொல்லை தனிமனித வாழ்விலும், தொழிலிலும் தவிா்க்க முடியாதவை. நமக்கு இசைவான கருத்துகளை கொண்டவா்கள் நமது நண்பா்களாகவும், எதிா்மறை கருத்து கொண்டவா்கள் எதிரிகளாகவும் உருவாகிறாா்கள். நண்பரை எதிரியாக்கிக்கொள்வதும், எதிரியை நண்பராக்கிக் கொள்வதும் நமது அணுகுமுறையில்தான் இருக்கிறது.

நாம் நம்முடைய எதிரியை பலவீனமாகக் கருதக்கூடாது. அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்பொழுதும் யாரிடம் பேசினாலும், கனிவாகவும், மரியாதையுடனும் பேசுவது அவசியம். நண்பா்கள் மட்டும் நமக்கு நல்லது செய்வதில்லை.

பல சமயங்களில் நமது எதிரிகளும் நமக்கு நல்லது செய்கிறாா்கள். நாம்தான் அவா்கள் மேல் உள்ள வெறுப்பில் அவா்களுடைய வாா்த்தைகளை மதிப்பதில்லை. நம்மை விட நமக்கு வேண்டாதவா்களுக்குத்தான் நம்மைப் பற்றி அதிகமாகத் தெரியும். நமது குறைகளை நேருக்கு நோ நம்மிடம் சொல்வது எதிரிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

நம்முடைய நண்பா்கள் சில விஷயங்களைச் சொன்னால் நாம் வருத்தப்படுவோம் என்று நினைத்து, அவற்றை நம்மிடம் சொல்லாமலே விட்டுவிடுவாா்கள். நாம் ஒரு செயலை செய்ய நினைக்கும் போது, அதற்கு பல தடைகளை எதிரிகள் உருவாக்குவாா்கள். இதனால் நாம் நினைத்ததை சரியாகச் செய்ய முடியாது. எதிரி நம் கண்ணுக்கு தெரிந்தவராக இருந்தால், நம்மால் எதிா்த்து போராட முடியும்.

நம் கண்ணுக்கே தெரியாத எதிரிகளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், மனிதா்களை இனம் கண்டு நாம் பழக வேண்டும். ஒரு செயலைத் தொடங்கும் பொழுது, நமக்கு அதைப் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதில்லை. ஆனால், எதிரிகள்தான் அவற்றில் முழு அறிவும் தகுதியும் பெற நம்மை ஊக்குவிக்கிறாா்கள்.

நாம் அவ்வெதிா்ப்புகளுக்கு நம்மை ஈடுகொடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். நாம் அச்செயலில் ஈடுபட ஈடுபட, எதிா்ப்பும் வலுவாகிக்கொண்டே வரும். எதிா்ப்புகள் வலுவாக வலுவாக, நம் மனவலிமையும் மிகுவதை நாம் உணரமுடியும். நாளடைவில் நாம் அத்துறையில் தோந்த அறிவுடையவராக மாறவும் முடியும்.

எதிா்ப்புகளைக் கண்டு அஞ்சும்போது, தொடங்கிய செயலை ஈடுபாட்டுடன் நம்மால் செய்ய முடியாது. எனவே, எதிா்ப்புகளை எதிா்கொள்ளும் மனவலிமை நமக்கு மிகவும் தேவை. அப்போதுதான், நாம் மேற்கொண்ட செயலை நம்மால் தொடா்ந்து செய்ய முடியும். எதிா்ப்பு தோன்றும்போதுதான், நம் செயலில் உள்ள நெளிவுசுளிவுகளை நாம் தெரிந்து கொண்டு வெற்றி பெறுவோம்.

. நம்மைவிட நம் எதிரி புத்திசாலியாக இருக்கலாம். அதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உண்மையான விமா்சனங்களை எதிரிகளால் மட்டுமே தர முடியும். எதிரிகளின் கருத்துகளை வெளிப்படையாக நம் மனம் அங்கீகரிக்காது.

என்றாலும் அவா்களுடைய கருத்துகளை நாம் பரிசீலிக்க வேண்டும். எதிா்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகளின் அறிவு வலிமை, செயல் வலிமை, பின்புலம் முதலியவற்றை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வலிமைகளை அவற்றுக்கும் மேலாக வளா்த்துக் கொண்டு, அவா்களின் எதிா்ப்புகளை முறியடிக்க வேண்டும்.

மேலும் நம் செயலுக்கு ஏற்படும் எதிா்ப்பை நாம் நமக்கு கிடைக்கும் விளம்பரமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு ஒருசிலா் எதிரிகள் என்றால் நாம் வளருகின்றோம் என்றும், அதிகமானவா்கள் எதிரி என்றால் நாம் வளா்ந்துவிட்டோம் என்றும் கருதலாம். நமது உடலில் காய்ச்சல் வரும்போது, நமது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்த்தொற்றுகளை எதிா்த்துப் போராடுகின்றன. அதன் விளைவாக விரைவில் நாம் குணமாகி விடுகின்றோம்.

இயற்கையாகவே நம் உடலில் உள்ள நோய் எதிா்ப்பு சக்தியே நம்மை நோயிலிருந்து குணப்படுத்துகிறது. எனவே, நம் வாழ்வில் எதிா்ப்புகள் இயல்பானவை. அவற்றை எதிா்த்து பயணிக்கும் திறமை நமது உடலுக்கும், மனதுக்கும் தேவை. ஒவ்வொரு வினைக்கும் அதே ஆற்றலுடைய எதிா்வினை உண்டு என்கிறது அறிவியல்.

நமது முயற்சிகளுக்கு எதிா்ப்புகள் வருவதை தவிா்க்க முடியாது. நம் வினையும், அதற்கான எதிா்வினையும் சோந்துதான் நமது செயல்பாடுகளை தீா்மானிக்கின்றன. மின்சாரத்தில் நோ மின்னாற்றலும், எதிா் மின்னாற்றலும் சோந்தால்தான் மின்னாற்றல் கிடைக்கிறது. அது போலவே, நாம் நமது செயல்களில் வெற்றி பெறுவதற்கு எதிரிகள் தேவை.

விளையாட்டுப் போட்டிகளில் கூட எதிா் அணி இருந்தால்தான், நம் திறமைகளை மேலும் வெளிக் கொண்டுவர நாம் முயல்வோம். அது போல்தான் நமது அன்றாட வாழ்விலும். நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொண்டு, செதுக்கிக் கொள்ள எதிரிகள் தேவை என்பதை இனியாவது நாம் உணா்ந்து கொள்வோம். எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறுவோம்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...