Friday, December 9, 2016

ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்?

jaya_with_sasi

ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்?

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 06th December 2016 04:17 PM 

80 களில் ஜெயலலிதா அ.தி.மு.க வுக்கு தமிழகம் முழுதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் முதன்முறையாக சசிகலாவின் அறிமுகம் கிடைக்கிறது. மைலாப்பூரில் ஒரு சாதாரண வீடியோ கவரேஜ்& லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த சசிகலா நடராஜனுக்கு அந்த தேர்தல் பயணம் முழுக்க ஜெயலலிதாவின் உடனிருந்து அவரது பிரச்சாரப் பேச்சுகளை கவரேஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படித்தான் ஆரம்பமானது இவர்களது நட்பு. பின்னர் அது விருட்சமாக வளர்ந்து சின்னம்மா இல்லாமல் ‘அம்மா’ இல்லை எனும் நிலையை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தது.

ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கையில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததைப் போல ‘பெற்ற தாய் இல்லை, தகப்பனார் இல்லை, உடன் பிறந்த அண்ணன் இல்லை, தனக்கான ஆதரவென்று எம்.ஜி.ஆர் அளித்த அரசியல் அறிமுகத்தைத் தவிர வேறு எந்த விதமான உதவிகளும், உறுதுணைகளும் இன்றி தன்னை மட்டுமே நம்பி தனியொரு பெண்ணாக அரசியலில் ஜெயலலிதா சாதித்தது மிக அதிகம்.’

அப்படி சாதித்தவரின் நம்பிக்கைக்குரியவராவதும் அப்படி ஒன்றும் எளிதான காரியமில்லை. சசிகலா நட்பான அந்த தேர்தல் பிரச்சார விடியோ கவரேஜ்களில் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை உருவகப்படுத்தக் கூடிய வகையிலான அத்தனை சாத்தியங்களையும் ‘சசிகலா அண்ட் கோ’ செய்திருந்தது. ஜெயலலிதாவே கூறியதைப் போல ‘தனது தாயின் இடத்தை எடுத்துக் கொண்டவராகவே’ சசிகலா ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்டார். ஜெயலலிதா தான் இழந்து விட்டதாக நினைத்த தாயின் கவனிப்பையும், அரவணைப்பையும் சசிகலா மூலமாகப் பெற்றதாக நம்பினார். சசிகலா ஜெயலலிதாவின் வாழ்வில் நுழைய அவரது அம்மா சந்தியாவின் மறைவு ஓரு முக்கிய காரணமானதை விட ஜெயலலிதாவுக்கு அதற்கு முன் அத்யந்த நட்புகள் என எதுவும் இல்லாமல் போன வெற்றிடமும் பெருங்காரணமாக இருந்தது எனலாம்.
திரையுலகுக்கு வந்த சில வருடங்களில் நடிகை ஷீலா ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக சில காலம் அடையாளம் காணப்பட்டார். பின்பு இந்த நட்பிற்கு ஆயுள் குறைந்து ஜெயலலிதாவின் வாழ்விலிருந்து அவர் முற்றாக மறைந்து போனார். எழுத்தாளர் சிவசங்கரி, நடன இயக்குனர் ரகுராம் எனச் சிலரை தன்னது நட்பு வட்டத்தில் எப்போதும் வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனாலும் எந்த ஒரு நட்புக்கும் சசிகலாவுக்கு கிடைத்த இந்த மாபெரும் அங்கீகாரமோ, அதிகாரமோ கிடைக்கவில்லை. எல்லோருமே ஒரு கால கட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்விலிருந்து தூரமாகிக் கொண்டே சென்றார்கள். இவர்களில் அறிமுகமான நாட்கள் தொட்டு ஜெயலலிதாவின் அனைத்து வெற்றிகளிலும், தோல்விகளிலும் அவரை விட்டு நீங்காத துணையாக இருந்தவர் சசிகலா மட்டுமே!

ஒருமுறை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் குறிப்பிட்டதாக ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது; ராஜம் கிருஷ்ணன் தமிழில் அன்றும் இன்றும் என்றும் மறக்க இயலாத இலக்கிய ஆளுமை, அவர் சந்தியாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார். ஒரு முறை ராஜம் கிருஷ்ணனை சந்திக்கப் போன சந்தியா சில மணி நேரங்களில் கடிகாரத்தைப் பார்த்து பரபரப்படைந்து ‘அடடா! இத்தனை நேரமாகி விட்டதே... அம்மு ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுவாளே, அவ வரும் போது நான் வீட்ல இல்லைன்னா கோவிச்சுப்பாளே! அவ வீட்டுக்கு வரும் போது நான் வீட்ல இருக்கணும்’ என்று உடனடியாக விடை பெற்றுச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இது ஒரு அம்மாவுக்கு மகளின் மீதிருந்த பாசம் என்பதைத் தாண்டி ஜெயலலிதா தன் அம்மாவை எத்தனை தூரம் சார்ந்திருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

அப்பேர்ப்பட்ட அம்மாவின் இழப்பின் பின் அவரது இடத்தைத் தான் ஜெயலலிதா சசிகலாவுக்கு தந்திருந்தார். இப்படித்தான் வேதா இல்லமாக இருந்து போயஸ் கார்டனாக மாறிய ஜெயலலிதாவின் மாளிகையில் சசிகலா கால் வைத்தார். முதலில் தம்பதி சமேதராக உள்ளே வந்தார்கள். பிறகு தன்ன்னை டாமினேட் செய்யப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டி நடராஜன் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார். ஆனால் சசிகலா தனது உடன்பிறவா அக்காவான ஜெயலலிதாவை விட்டு அகலவில்லை. கணவன் வெளியேற்றப் பட்டபோதும் ஜெயலலிதாவுடனேயே சசிகலாவை நீடிக்க செய்தது எதுவோ அதுவே ஜெயலலிதாவையும் சசிகலாவை விட்டுப் பிரியாதிருக்கச் செய்திருந்தது.

96 ஆம் வருட இறுதியில் ஜெயலலிதா பல ஊழல் வழக்குகளில் சிக்கி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது நலம் விரும்பிகள் பலரும். ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலமே சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் அதிகார துஷ் பிரயோகத்தால் அஸ்தமனமாகி விடும், எனவே உடனே அவரை போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றுங்கள் என அறிவுறுத்தினார்கள். அப்போது தனது பத்திரிகைப் பேட்டி ஒன்றின் மூலம் ஜெயலலிதா அளித்த பதில்;
‘எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, அண்ணன் இல்லை, உறவினர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களில் யாரும்ம் அவரவர் சொந்தக் குடும்பங்களை விட்டு விட்டு என்னுடன் வந்து தங்கி என்னையும் எனது வாழ்வையும் கவனிக்கத் தயாராக இல்லை. சசிகலா ஒருவர் மட்டுமே தன் குடும்பம் , தனது கணவர் என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து என்னுடனேயே தங்கி எனக்கொரு உடன்பிறவா சகோதரியாக என் மீது அக்கறை காட்டினார். உண்மையாகச் சொல்லப் போனால் என்னுடன் இருப்பதனால் மட்டுமே தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட ஒரு பெண் அவர். அவர் எனது அரசியல் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை.’ என்பதே. சசிகலா அரசியல் விவகாரங்களில் தலையிட்டாரா? இல்லையா? என்பதில் அவரவர்க்கு ஆயிரமாயிரம் விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் ஜெயலலிதாவின் மறுக்க முடியாத உறவுப் பட்டியலில் இருந்தார் என்பதற்கு யாருக்கும் எந்த விதமான விமரிசனங்களும் இருக்க வாய்ப்பே இல்லை.

இறுதியாக ஒரு வார்த்தை...

ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நேர்காணலில் ஜெயலலிதா தெரிவித்ததைப் போல ’ஒரு வேளை தனக்குத் திருமணம் ஆகியிருந்தால் அப்போதைய 70 களின் வழக்கபபடி தானும் ஒரு அரசாங்க அதிகாரியாக உயர் பொறுப்பில் இருந்து கொண்டு நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கடமையைச் செய்து கொண்டிருந்திருக்கக் கூடும். என்று சொன்னதற்கிணங்க, அப்படி ஏதாவது நடந்திருந்தால் நமக்கு இப்போதைய இந்த இரும்புப் பெண்மணி கிடைத்திருக்க மாட்டார்.

இதுவரை ஜெயலலிதாவுடனான சசிகலாவை, ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவைத் தான் நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இனி ஜெயா இல்லாத சசி என்ன செய்வார்?

234 நாட்களில் ஒரு ஸ்டேடியம்... ஜெயலலிதாவால் மட்டுமே இது சாத்தியம்!


மறைந்த முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுப் பிரியர். விளையாட்டுத் துறைக்கு அவர் எப்போதும் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வந்தார். அவர் புண்ணியத்தில்தான் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் உள்கட்டமைப்பு ஓஹோவென இருந்தது. நேரு ஸ்டேடியம் அதற்கு ஒரு சான்று.

முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறியதும், 1993ல் கார்ப்பரேஷன் பூங்கா இருந்த இடத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டினார். நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ரூ. 44 கோடி மதிப்பிலான அந்த ஸ்டேடியம் வெறும் 234 நாட்களில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் உந்துதலால் மட்டுமே இது சாத்தியமானது. வேகமாக கட்டினாலும், சர்வதேச தரத்திலும் அமைந்தது கூடுதல் பெருமை. இதற்கான எல்லா பெருமையும் அவரையே சாரும்.

சென்னையில் சர்வதேச தரத்தில் ஒரு ஸ்டேடியம் அமைய வேண்டும் என்ற, தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் செயலர் சி.ஆர்.விஸ்வநாதன் கனவு நனவானது அப்போதுதான். புதிதாக கட்டப்பட்ட இந்த மைதானத்தில்தான் நேரு கோல்டு கப் கால்பந்து தொடர் நடந்தது.

அதன்பின், ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த 2013ல் சின்தெடிக் டிராக், ஃபுட்பால் டர்ஃப், ஃப்ளட் லைட், வார்ம் அப் கிரவுண்ட் என மொத்தம் ரூ. 33 கோடி செலவில் நேரு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. அன்று முதல் நேரு மைதானத்தில் இரவு - பகல் என எப்போது வேண்டுமானாலும் போட்டிகளை நடத்தலாம், பயிற்சி செய்யலாம் என்ற சூழல் உருவானது. இப்போது ஐ.எஸ்.எல். போட்டிகள் நேரு மைதானத்தில் ஜெகஜ்ஜோதியாக நடந்து வருகிறது.

பல்நோக்கு காரணங்களுக்காக கட்டப்பட்ட சென்னை நேரு மைதானம் இந்தியாவில் உள்ள சிறந்த மைதானங்களில் ஒன்று. விளையாட்டு தவிர்த்து, கலை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடப்பது உண்டு. தவிர, வாலிபால், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் ஆடுவதற்கேற்ப, 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கவல்ல உள் விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் ஜெயலலிதாவையே சாரும். பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு அரங்கங்கள், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அமைத்தது என, அவர் ஏற்படுத்தித் தந்த உள் கட்டமைப்பு வசதிகள் ஏராளம்.

சென்னையில் 1995ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா. கிட்டத்தட்ட சென்னையில் நடந்த பெரிய சர்வதேச அளவிலான முதல் போட்டி இதுவே. அப்போதுதான் ஹாக்கி ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இந்தியாவின் தன்ராஜ் பிள்ளை, பாகிஸ்தானின் ஷபாஸ் அகமது இருவரும் உச்சத்தில் இருந்த சமயம் அது. எனவே அந்த போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.



சென்னையில் 2013ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. உள்ளூரில் விளையாடியது ஆனந்துக்கு நெருக்கடியை கொடுத்தது என்றாலும், அந்த தொடரை இங்கு கொண்டு வந்ததும், அதற்கு 30 கோடி செலவு செய்ததும், பாராட்ட வேண்டிய விஷயம். சமீபத்தில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில், சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சனுக்கு, அந்தளவு பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது.

கடந்த 2012ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இதற்கு விமர்சனம் எழுந்தபோது, ‛ஒலிம்பிக்கில் வெல்லும் தங்கத்தை விட இந்த சாதனை பெரிது. அதனால் ஒலிம்பிக் தங்கத்துக்கு நிகரான பரிசு வழங்கப்படுகிறது’ என காரணம் சொன்னார். அதோடு, செஸ்ஸை பள்ளி அளவில் மேம்படுத்த ஆனந்திடம் அறிவுறுத்தியிருந்தார்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரித்தது ஜெயலலிதாவின் பெருமை பேசும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 2 கோடி, காமன்வெல்த், ஏசியன் கேம்ஸில் தங்கம் வென்றால் ரூ.50 லட்சம் என, அள்ளி வழங்கினார். அதை விட, நேஷனல் கேம்ஸில் முதலிடம் பிடித்தால் ரூ.5 லட்சம் என அறிவித்தது பாராட்ட வேண்டிய விஷயம்.

இன்ஜினனீரிங் கல்லூரிகளில் விளையாட்டுத் துறைக்கான இட ஒதுக்கீட்டை 100ல் இருந்து 500 ஆக உயர்த்தியதும் அவரது சாதனையே. ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து வெளியேறுவதாக இருந்த ஏ.டி.பி. டென்னிஸ் தொடரை, இங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து, ஸ்பான்சர் அளித்ததற்கும் ஜெயலலிதாவே காரணம் என்கின்றனர் டென்னிஸ் பிரியர்கள்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களைக் கண்டறித்து, ஆண்டுதோறும் ஐந்து வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் செலவில், போதிய வசதி வாய்ப்புகளை செய்து தருவதற்காக, உருவாக்கப்பட்ட எலைட் பேனல்’ திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அதில் பயன்பெற்ற யாரும் ஒலிம்பிக் செல்லவில்லை என்பது வேறு விஷயம்.

சி.எம்.டிராபி. இதுதான் விளையாட்டுத் துறைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் அல்டிமேட். ஏதோ ஒரு கணத்தில் அவர் கற்பனையில் உதித்த ‘முதல் அமைச்சர் கோப்பை’ உண்மையிலேயே நல்ல விஷயம். முதலிடம் பிடித்தால் ஒரு லட்சம், குழு விளையாட்டு எனில் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் ஆயிரக் கணக்கில் பரிசு என, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு பரிசு கொடுத்ததில்லை. பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.



சில குறைகளும் உண்டு. 2014ல் செஸ் ஒலிம்பியாட்டில் 2014 வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. வாழ்த்து கூட சொல்லவில்லை. ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வீரர்களுக்கும் வாழ்த்து இல்லை. ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனே வழங்குவது போல, நேஷனல் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனடியாக பரிசுத் தொகை வழங்குவதில்லை. 2014ல் ஜெயித்தவர்களுக்கு இன்னமும் பணம் கிடைத்தபாடில்லை.

ஜெயலலிதாவை எளிதில் அணுக முடியாத காரணத்தினால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அண்டர் -17 வேர்ல்ட் ஃபுட்பால் கப் சென்னையில் இருந்து நழுவி விட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மெம்பர் செகரட்டரியை மாற்றிக் கொண்டே இருப்பதும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதிகாரமே இல்லாமல் இருப்பதும் அவர் மீதான குறைகள்.

இலங்கைக்கு விளையாட சென்ற இரண்டு வாலிபால் வீரர்களை திரும்ப வரவழைத்தது, ஒரு ஸ்டேடியம் ஆஃபீசரை சஸ்பெண்ட் செய்தது, நேரு மைதானத்தில் உள்ள வாலிபால் அலுவலகத்துக்கு சீ்ல் வைத்தது எல்லாம், அவருக்கு நெகட்டிவ் மார்க் பெற்றுத் தந்தன.

ஆனாலும், நேரு மைதானம் அவர் பெருமையை நின்று பேசும்.

அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? - காய் நகர்த்தும் தலைவர்கள் எம்.சரவணன்

கோப்பு படம்

Return to frontpage

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் 75 நாட்களாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். அவரது மரண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 31 அமைச் சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது.

செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிகார மாற்றம் சுமுகமாக நடந்தாலும் அதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் அடுத்து வரப்போகும் மாற்றங்கள், குழப்பங்களுக்கு கட்டியம் கூறுவதுபோல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் சென்னை வந்து, இங்கேயே முகாமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத் துக்கு காலை 7 மணிக்கே வந்த வெங்கய்ய நாயுடு, உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து அனைத்தையும் கவ னித்து வந்தார். அவரது ஆலோசனையின்படியே ஓ.பன்னீர் செல்வம் புதிய முதல்வராக பதவியேற் றுள்ளார்.

இன்னும் 7 மாதங்களில் குடியரசுத் தலை வர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வுள்ளது. இத்தேர்தலில் 50 எம்.பி.க்கள், 136 எம்எல்ஏக்களை கொண்டுள்ள அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மூலம் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக காய் நகர்த்துகிறது. இதற்காக சசிகலா உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளும் ஆயுதமாக பயன் படுத்தப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை உறுதிப்படுத்துவதுபோல ஜெய லலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார். சசிகலாவின் கணவர் நடராஜனை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் மோடியிடம் அறிமுகப்படுத்தினார். அதை மோடி கவனிக்காதபோதும் தொடர்ந்து மூன்று, நான்கு முறை நடராஜனை அறிமுகப்படுத்த இல.கணேசன் முயற்சித்தார். அந்த முயற்சி, ஏதோ நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அதிமுகவை தன் வசப் படுத்த காங்கிரஸும் முயற்சித்து வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதிமுகவை விமர்சிக்காமல் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். நடராஜன் மூலம் திருநாவுக்கரசர் செய்த ஏற்பாட்டின் பேரிலேயே ராகுல் காந்தி திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, அவரது இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி, திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திருநாவுக்கரசர் தனது இரு கைகளிலும் பூக்களை எடுத்துக் கொடுக்க ஜெயலலிதாவுக்கு நடராஜன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “1967-ல் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் 50 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி, கடந்த 2014 தேர்தலில் 4.3 சதவீத வாக்குகளையே பெற்றது. எனவே, தற்போதைய சூழலில் அதிமுகவை வசப்படுத்தினால் 39 எம்.பி.க்களைக் கொண்ட தமிழகம் 2019-ல் காங்கிரஸுக்கு கை கொடுக்கும் என ராகுல் காந்தி திட்டமிடுகிறார். அதற்கான வேலைகளை நடராஜன் மூலம் திருநாவுக்கரசர் மேற்கொள் ளவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு பல் வேறு போராட்டங்களை நடத்தி, பலரின் எதிர்ப்புகளை மீறி முதல்வர் பதவியை பிடித் தவர் ஜெயலலிதா. கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். அவரது மறைவால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பதை தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் உணர்ந்துள்ளன. எனவேதான் அதிமுகவை வசப்படுத்த இரு கட்சிகளும் போட்டி போட்டு காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் காங்கிரஸ், பாஜகவுக்கு வெற்றி கிடைக்குமா அல்லது ஜெயலலிதாபோல யாராவது ஒருவர் தோன்றி அதிமுகவின் தனித் தன்மையை காப்பாற்றுவாரா? என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிய வரலாம்.

அப்போலோ செவிலியர்களிடம், ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன்!



ஜெயலலிதாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் பரபரப்பானது மருத்துவமனை மட்டுமல்ல அங்கிருந்த ஊழியர்களும்தான். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்த செவிலியர்கள்.

அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் மூன்று ஷிப்ட்டில் பணியாற்றி வருகின்றனர். காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையும் அவர்கள் பணி தொடர்கிறது. மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள MDCCU வார்டில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். பணி நேரத்தில் மூன்று செவிலியர்கள் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளனர். இரண்டு செவிலியர்கள், ஜெயலலிதா அருகில் நின்று கொண்டே கவனித்து வந்தனர். ஒரு செவிலியர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் குறிப்பு எடுத்துக் கொள்வார்.

இரவுப் பணி முடிந்து செல்லும் செவிலியர்கள், காலை பணிக்கு வரும் செவிலியர்களிடம், ஜெயலலிதாவுக்கு இந்த வகையான சிகிச்சையும், மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இனி அவருக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை, மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துச் செல்வார்கள். அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் ஜெயலலிதா சற்றே கடுமையாக நடந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் செவிலியர்கள் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது, ஜெயலலிதா வலியால் துடித்துள்ளார். இதனால் பதறிப் போன செவிலியர்கள், பணிவிடை செய்வதை நிறுத்தி விட்டனர். "வலி தாங்க முடியவில்லை. ஏதேனும் செய்யுங்கள்!" என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஒருமுறை காலை பணியில் இருக்கும் செவிலியர்கள், அன்று கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், பணிவிடைகள் குறித்து ஜெயலலிதாவிடம் கூறியுள்ளனர். அப்போது, Don't disturb me. I want to take rest என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கையால் சில நேரங்களில் ஜெயலலிதா மருந்துகள் கூட எடுக்காமல் இருந்துள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம், செவிலியர்கள் கூறியுள்ளனர். அவருக்கு மருந்து கொடுக்க வேண்டியது உங்களது கடமை என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்!'' என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்!

எஸ்.சாராள்

ஒன்றுகூடிய மன்னார்குடி... விரட்டப்பட்ட தீபா!

vikatan.com

முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி 75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், மிக அதிகமான பதட்டத்தை உண்டாக்கியது டிசம்பர் 4-ம் தேதிதான். 75 நாட்களில், முதல் 30 நாட்கள் மட்டும்தான் அப்போலோ பரபரப்பாக இருந்தது. அதன்பிறகு, காவிரி, ரூபாய் நோட்டுப் பிரச்னைகளால் மக்களின் மனதில் இருந்து அப்போலோ மெள்ள மறையத் தொடங்கியது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மீண்டும் பரபரப்புச் செய்தியானது. ‘நீர்ச்சத்துக்குறைவு’ என ஜெயலலிதா அட்மிட் ஆனபோது என்ன பரபரப்பு நிலவியதோ, அதைக்காட்டிலும் பல மடங்கு பரபரப்பும் பதற்றமும் அப்போலோவைச் சூழ்ந்தன.



மாலை 5.30 மணியில் இருந்து அப்போலோ ஏரியாவில் சந்தேகத்துக்குரிய சில அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தமிழகத்தின் அரசுத் துறை செயலாளர்கள் அனைவரும் அப்போலோவை நோக்கி வர ஆரம்பித்தனர். சென்னையிலும் வெளியூரிலும் இருந்த அமைச்சர்கள் பதறியடித்துக்கொண்டு அப்போலோ வந்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அப்போலோவை முற்றுகையிட்டனர். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் அப்போலோவில் மையம் கொண்டது. இவ்வளவு பரபரப்புகள் அரங்கேறியபோதும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல், அப்பாவியாக இருந்தனர் அ.தி.மு.க தொண்டர்கள். அவர்களில் சிலர், கடந்த 75 நாட்களாக அங்கு காத்துக் கிடப்பவர்கள். அரசுத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, வழக்கம்போல் அதிகாரிகள் வருகின்றனர், அமைச்சர்கள் வருகின்றனர் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

மாலை 6.30 மணி அளவில், மெதுவாக ஒரு தகவல் வெளியானது. `முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்பதுதான் அந்தத் தகவல். ஆனால், மாரடைப்பில் இருந்து முதலமைச்சர் மீண்டுவிட்டாரா? அல்லது விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. அந்த நேரத்தில், அரசு இயந்திரம் அசுரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என்ற தகவல் போனது. அதனால், தமிழகம் பரபரப்பு அடை வதற்கு முன்பே டெல்லி பரபரத்தது. டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். உள்துறை அமைச்சகம் அவசர அவசரமாக சில உத்தரவு களைப் பிறப்பித்தது. அவர்கள் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், ராகுல் காந்திக்கும் தகவல் போனது. அதையடுத்து, “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்” என்று டெல்லியில் இருந்து தலைவர்களின் அறிக்கைகள் 9 மணியில் இருந்து அடுத்தடுத்து வெளியாகின. அதன் பிறகுதான், அப்போலோ மருத்துவ மனையின் அறிக்கை வெளியானது.

அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியான அந்த மருத்துவ அறிக்கை ‘இறுக்கமாக’ இருந்தது. முன்பு வெளியான அறிக்கைகளில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்; உடல்நிலை தேறிவருகிறார்” என்பது போன்ற வாசகங்கள் இருக்கும். ஆனால், 4-ம் தேதி வெளியான அறிக்கையில், அப்படி எந்த வாசகமும் இல்லை. மாறாக, ‘முதலமைச்சருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. இது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நேரத்தில், அங்கு வந்த டி.டி.வி.தினகரன் அப்போலோவுக்குள் சென்றார். இவர், இதற்குமுன் ஒரே ஒருமுறை அப்போலோவுக்கு வந்து, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றவர். இந்த முறை அவரைத் தடுக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை.



ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனே, அப்போலோ மருத்துவமனை முன்பு கொந்தளிப்பு மிகுந்த சூழல் உருவானது. அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனையை நோக்கி சாரை சாரையாகப் படையெடுத்து வரத் தொடங்கினார்கள். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களை ஏக வசனத்தில் திட்டிவிட்டு, இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு அப்போலோ முன்பு குவிந்தனர். அங்கு, கவரேஜ் செய்து கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமரா மேன்களையும் அவர்கள் திட்டித் தீர்த்தனர். இந்த பரபரப்பான சூழலில், ஓரமாக நடந்துவந்த டாக்டர் வெங்கடேஷ், சத்தமில்லாமல் அப்போலோவுக்குள் போனார். முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் அப்போலோவுக்குள் இருந்தனர். அப்போலோவுக்கு வெளியே அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் யாரும் இல்லை. அதனால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட்’ என்ற செய்தியை அறிந்ததும், ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் அலர்ட் ஆனது. உளவுத் துறை உயர் அதிகாரிகளோடு, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர், மத்திய உள்துறையின் உதவியும் கோரப்பட்டது. மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 30 கம்பெனி போலீஸை உடனடியாக அனுப்பி வைத்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் பிரிவுகள் அலர்ட் செய்யப்பட்டன. சென்னையில் விடுமுறையில் இருந்த காவலர்கள் அனைவரும் மறுநாள் (5-ம் தேதி) காலையில் வந்துவிட வேண்டும் என உத்தரவுகள் பறந்தன. இந்த உத்தரவுகள் எல்லாம் கன்ட்ரோல் ரூம் மூலமாகவே சென்றன.

மகாராஷ்டிராவில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், அவசர அவசரமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்போலோவுக்கு கவர்னர் வந்தபோது, அவருடைய காரை அ.தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். அதனால், அப்போலோ முன்பு கவர்னரின் கார் சிறிதுநேரம் நின்றது. அதன்பிறகு, கூட்டத்தைக் கட்டுப்படுத்திய போலீஸ்காரர்கள், கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அப்போலோவுக்குள் கவர்னர் நுழைந்தபோது, நள்ளிரவு 12 மணி. உள்ளே சென்ற கவர்னர், 12.15 மணிக்கு வெளியே வந்தார். கவர்னரின் கார் வெளியே வந்தபோது, அதற்குப் பின்னால், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் காரும் வந்தது. இருவருடைய கார்களையும் சூழ்ந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர்கள், கார்களை விட்டு வெளியே தலைகாட்டவில்லை.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அப்போலோவில் இருந்து துரத்தப்பட்ட அதே நேரத்தில், மன்னார்குடி உறவுகள் அனைத்தும் அப்போலோவில் ஒன்றுகூடின. திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் எல்லாம் அப்போ லோவில் இருந்தனர். ஆனால், சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போலோ பக்கம் வரவில்லை. அவர் பெசன்ட் நகர் வீட்டிலும் இல்லை. மாறாக, ரகசியமான இடத்தில் இருந்து சில முக்கியமான வேலைகளுக்கு காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.



அப்போலோ மருத்துவமனை ஏரியாவில் நிலவிய கொந்தளிப்பான சூழல், நள்ளிரவு 2 மணிக்கு மேல் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கிளம்பிப் போனார், சசிகலா. அவரையடுத்து டி.டி.வி.தினகரனும் வெளியே சென்றார். அதன் பிறகு, என்ன மாயமோ தெரியவில்லை, அப்போலோவில் ஏரியாவில் அமைதி திரும்பத் தொடங்கியது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டதால், அங்கிருந்து தொண்டர்கள் கலையத் தொடங்கினார்கள்.

- ஜோ.ஸ்டாலின், பிரம்மா

படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்

``என்னிடம் நேரில் சொல்லட்டும்!’’

அப்போலோவைச் சுற்றி சோகமும் கொந்தளிப்பும் இருந்த நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையைப் பார்க்க வந்தார். ஆனால், யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை, தீபாவை அப்போலோவின் கேட் அருகில்கூட நெருங்கவிடவில்லை. “தயவுசெய்து போய்விடுங்கள். இங்கே பிரச்னை செய்யாதீர்கள். உங்களை உள்ளேவிடக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவு” என்று தீபாவை போலீஸ்காரர்கள் மிரட்டினர். அதனால், பத்திரிகையாளர்களிடம் தீபா பேச முயன்றார். ஆனால், அதற்கும் போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பத்திரிகையாளர்கள் விடாமல் தீபாவை துரத்திச் சென்று பேசினர். அப்போது, “என்னை உள்ளே விடக்கூடாது என்று சொல்ல அவர்கள் யார்? அவர்களை வெளியே வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் நேரில் சொல்லட்டும்” என்று கொந்தளித்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள், “மேடம், உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொன்னவர்கள் யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “என் அத்தை கூடவே இருப்பவர்கள்தான் சொல்லி இருப்பார்கள்” என்று தீபா சொன்னார். போலீஸார் கடும் கெடுபிடி காட்டவே, தீபா தன் கணவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மீடியாவினர் படம் எடுக்கவிடாமல் போலீஸ் தடுத்தது.

‘அந்த கடைசிப் பார்வையில் எந்த அசைவுமில்லை..!’ #ஜெயலலிதா பாதுகாவலர் பெருமாள்சாமி

பெருமாள்சாமி
vikatan.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அதைத் தவிர மாநில போலீசார் என 36 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சுற்றியே எப்போதும் வலம் வருவார்கள். இவர்களை மீறி யாரும் அவரை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. ஒவ்வொரு முதல்வரும், தங்களுக்கு பிடித்த பாதுகாவலர்களேயே தேர்வு செய்வார்கள். பொதுக் கூட்டம் நடந்தால் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் கூட சற்றுத் தள்ளிதான் நிற்பார்கள். மேடையை சுற்றிலும்தான் அவர்களது கண்காணிப்பு இருக்கும். ஆனால் மேடையில் முதல்வரின் இருபுறமும் சாதாரண சபாரி உடையில் கையில் ஆயுதம் ஏதுமில்லாத பாதுகாவலர்கள் இருவர் நிற்பார்கள். இவர்கள்தான் ஆந்தை போல அதீத விழிப்புடன் செயல்படுவார்கள்.

சமயத்திற்கு ஏற்ப சமயோசிதமாக அதீத புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிது இவர்களது பொறுப்பு. முக்கியமாக தேர்தல் பிரசாரக் காலக்கட்டங்களில் தலைவர்களை பாதுகாப்பதில் இவர்களது பங்கு அளப்பறியது. நீண்ட நாள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக இருந்தவர் பெருமாள்சாமி.

சில நேரங்களில் முதல்வர் கான்வாயை நிறுத்தி விட்டு, ரோட்டில் நிற்பவர்களிடம் மனு வாங்க ஆரம்பித்து விடுவார். அடுத்த விநாடி பெருமாள்சாமி மின்னல்வேகத்தில் முதல்வரின் இருக்கை அருகே ஆஜராகி விடுவார். அந்த சமயத்தில் இவரது கண்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன்தான் நோக்கும். முதல்வர் முகத்தை பார்த்தே எதிரே நிற்பவர்களை அப்புறப்படுத்தி விடுவார். எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் பெருமாள்சாமியின் ஒரு கண் முதல்வரின் மீதும் மற்றொரு கண் எதிரில் நிற்பவர்கள் மீது இருக்கும். முதல்வரின் குறிப்பறிந்து பெருமாள்சாமி செயல்பட்டால், இவரது குறிப்பறிந்து இவருக்கு கீழ் பணியாற்றும் பாதுகாவலர்களும் செயல்படுவார்கள்.



பெருமாள்சாமி முதல்வரை பாதுகாத்த சம்பவங்களுக்கு உதராணமாக ஒன்றை சொல்லலாம். ஜெயலலிதாவுக்கு யானைகள் மீதான பாசம் அதிகம். யானைகளுக்கு மிகவும் பிடித்த சீதோஷ்ண நிலை நிலவும் முதுமலையில் கோயில் யானைகளுக்கும் முகாம் நடத்தி வெக்கையில் கிடந்த அவற்றை ஓரளவுக்கு குதூகலிக்க வைத்தவர் ஜெயலலிதா. முதுமலையில் வளர்ப்பு யானைகள் முகாமும் இருக்கிறது. அங்கு, காவிரி என்ற குட்டி யானை இருந்தது. முதுமலைக்கு ஒரு முறை சென்ற ஜெயலலிதா காவிரி யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார். முதல்வரை சுற்றி கூடியக் கூட்டதைப் பார்த்து மிரண்ட குட்டி யானை, தும்பிக்கையால் முதல்வரை தள்ளி விட முயன்றது. ஜெயலலிதா திணறி விட, அருகில் நின்ற பெருமாள்சாமிதான் அரணவணைத்து முதல்வரை குட்டியானையிடம் இருந்து பாதுகாத்தார்.

அத்தனை விசுவாசம் மிகுந்த பெருமாள்சாமி மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வரின் மறைவு சொல்ல முடியாத துயரத்தை தந்திருக்க வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலக்கட்சியின் தலைவியின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக விளங்கிய அவரால், அவரின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் ராணுவ பயிற்சி பெற்ற இதயம். எந்த வேதனையையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. முதல்வர் உயிருடன் இருந்தால் எப்படி யாரும் அவரை நெருங்க விடாமல் பாதுகாப்பாரோ அதைப் போலவே ஜெயலலிதா உடலுக்கும் பாதுகாவலை பெருமாள்சாமியின் டீம் வழங்கியது. அப்பலோவில் இருந்து போயஸ் கார்டன். பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹால். தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி வரை பெருமாள்சாமிக் குழுவினர் பாதுகாப்பு வழங்கினார்.

ஜெயலலிதாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படுவதற்கு முன்பாக, சந்தனபேழையில் வைத்து மூடப்படும் கடைசிக் கட்டத்தில் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள்சாமி.அந்தப் பெட்டியின் மீது கையை வைத்து கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக முதல்வரின் கண் அசைவைக் கண்டு பெருமாள் சாமி செயல்படுவார். அந்தக் கடைசிப் பார்வையில், முதல்வரின் கண்களில் எந்த அசைவுமில்லை!

எப்படி இருக்கிறது போயஸ் கார்டன்?  அதிரும் அடுத்தடுத்த காட்சிகள் 


பரபரப்புடன் காணப்படும் போயஸ் கார்டன் இப்போது கூடுதல் பரபரப்பாகி உள்ளது. இதுவரை நடந்திராத வகையில் போர்டிகோவில் சசிகலாவின் பென்ஸ் எம்.எல் என்ற வகை கார் புதியதாக இடம்பிடித்துள்ளது.

வி.வி.ஐ.பிக்கள் வாழும் பகுதி போயஸ் கார்டன். இதில் 81, வேதா நிலையத்தில் கெடுபிடிகளுக்கு பஞ்சமிருக்காது. அவ்வழியாக செல்பவர்களிடம் கூட பல கேள்விகளை கேட்டு துளைக்கும் காவல்துறை. அந்தளவுக்கு பல பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டதுதான் வேதாநிலையம் என்றழைக்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டபிறகே யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுவர்.

ஜெயலலிதாவைப் பார்க்க கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் கட்டுக்கடங்காது. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையாவது நம்மீது பட்டுவிடாதா என்ற தவிப்பில் காத்திருக்கும் தொண்டர்கள் கூட்டம். காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்து தொண்டர்களையும், மக்களையும் கைகளை கூப்பியபடி மெல்லிய புன்னகையோடு ஜெயலலிதாவைப் பார்த்து புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும். ஆனால் அந்த கோஷங்கள் இப்போது போயஸ் கார்டனில் இல்லை.

கவலைதோய்ந்த முகத்துடன் கரைவேட்டிகளோடு காட்சியளிக்கும் தொண்டர்களின் கூட்டம் குறைந்துள்ளது. வேதா நிலையத்திலிருந்து என்ன தகவல் வரும், யாரெல்லாம் உள்ளே, வெளியே செல்கிறார்கள் என்ற கண்காணிப்போடு மீடியாக்களும் காத்திருக்கின்றனர்.

ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் வீடு இப்போது எப்படி இருக்கிறது என்று உள்விவரம் தெரிந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அதே பாதுகாப்பு, கெடுபிடி இப்போதும் அங்கு இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் அம்மா இன்னும் அங்கேதான் இருக்கிறார் என்ற நினைவுகளை சுமந்தபடி இருக்கின்றனர். முதல்தளத்தில் ஜெயலலிதாவின் அறை. அதன் அருகில்தான் கட்சியினரை சந்திக்கும் அறை. இப்போது காலியாக காட்சியளிக்கின்றன. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், நந்தகுமாரை தற்போது பார்க்க முடியவில்லை. அடுத்து உதவியாளரான ஹரி மட்டும் கவலையுடன் இருக்கிறார். மேலும், ஜெயலலிதாவின் கார் மட்டுமே முன்பு போர்டிகோவில் நிறுத்தப்படும். தற்போது அந்த இடத்தில் டி.என். 1111 என்ற வாகன பதிவுடன் கூடிய சசிகலாவின் பென்ஸ் எம் எல் என்ற வகை கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறைக்கு சசிகலா சென்று வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அந்த அறை பூட்டியே இருந்துள்ளது. சசிகலாவும், இளவரசியும் தங்களது அறைகளை விட்டு அவ்வளவாக வெளியே வருவதில்லையாம். ஆக மொத்தத்தில் வேதா நிலையத்தில் முழுஅமைதி நிலவுகிறது" என்றார்

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று காலை போயஸ் கார்டனுக்கு சென்றனர். அவர்களுடன் சசிகலா, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அந்த முடிவுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அடுத்து யார் பொதுச் செயலாளர், கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும், ஜெயலலிதா இல்லாத இந்த சமயத்தில் எதிர்கொள்ளப் போகும் சவால்களை எப்படி சமாளிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க.வின் அதிகார மையம் சசிகலாவை நோக்கியே செல்லத் தொடங்கி உள்ளது.

ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? - கௌதமியின் கடிதம்

December 8, 2016

TRAGEDY AND UNANSWERED QUESTIONS

The Honourable Prime Minister of India,

Shri Narendra Modiji

Dear Sir,

I write this letter to you today as an ordinary citizen of India. I am a homemaker, a mother and a working woman. My concerns and priorities in my life are those that are shared by many of my fellow countrymen, primarily to build a safe and nurturing environment for my family that will allow them to live a safe and fulfilled life.

I am also one among the crores who are mourning the recent shocking demise of our late Chief Minister, Selvi Dr. J Jayalalithaa ji. She was a towering personality in Indian politics and was a great inspiration for women from all walks of life. Her leadership of Tamil Nadu, over several terms in office, has brought us to the forefront in many spheres of development. Selvi Dr. Jayalalithaa ji’s undeniable strength and determination to persevere against all odds are a lasting legacy that will continue to inspire individuals of every gender to persist in pursuit of their dreams in life.

Her demise is all the more tragic and unsettling because of the circumstances over the past few months and the sheer volume of unanswered questions about our late Chief Minister’s hospitalisation, treatment, reported recovery and very sudden passing. There has been a near total blanketing of information regarding these matters. Nobody had been allowed access to her and many dignitaries who visited her with deep concern were denied an opportunity to convey their wishes in person. Why this secrecy and isolation of a beloved public leader and the head of the Tamil Nadu government? What/whose authority restricted access to the late Chief Minister? Who were the concerned persons who were making the decisions about Selvi Dr. J Jayalalithaa ji’s treatment and care when her health was apparently in such a delicate state? And who is responsible for these answers to the people? These and many other burning questions are being asked by the people of Tamil Nadu and I echo their voice in bringing them to your ears, sir.

No doubt some might say that it is a moot point because it has happened as it has, but that, sir, is precisely my fear. I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? The confidence of every Indian in the democratic process that makes our nation so great is precious and must be protected against all odds.

I am writing to you now, sir, with the complete confidence that you share my anxiety and determination to uphold the rights of every Indian to be aware and informed of any factor that impacts our day to day life. You have proven yourself in many ways to be a leader who is unafraid to stand up for the rights of the common man and I am confident that you will heed the call of your fellow countrymen.

With my deepest respects and trust

Jai Hind!

Gautami Tadimalla

08.12.2016

4/472, Kapaleeswarar Nagar

Neelankarai, Chennai 600041

+917338713979

சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா...? : முழுப் பின்னணி

சசிகலா

vikatan.com

தமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது?

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தபோது எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்குவார். ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் தொடர்பு மூலம் ரயில்வேயில் சிறுசிறு கான்ட்ராக்ட்களை எடுத்துச் செய்தார்.

அப்படித்தான் சேகர் ரெட்டி சென்னையில் கால்பதித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தன் நண்பர் பிரேம் என்பவருக்குச் சொந்தமான விடுதியில் தங்கி, கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்கள் தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து வந்தார்.

எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறையப் பணிகள் நடைபெறும். அது தொடர்பான கான்ட்ராக்ட்களைப் பெற, சட்டமன்ற விடுதியில் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துப் பேசுவார். டெண்டர் சிபாரிசுக்காக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்தபோது, ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டன. அதன்மூலம், 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

திருப்பதி செல்வாக்கு!

திருப்பதி கோயிலில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. திருப்பதி கோயில் உயர் அதிகாரிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது சேகர் ரெட்டிதான். திருப்பதி கோயில் பிரசாதம் மற்றும் லட்டுகளை வாராவாரம் வாங்கித் தந்து, பல வி.ஐ.பி-க்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். வேலூர் கலெக்டராக இருந்த ஒருவருக்கு, திருப்பதியில் வேண்டிய உதவிகளைச் செய்தார் சேகர் ரெட்டி. அதன்மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் நுழைந்தார்.

‘நம்பிக்கை’ என்றால் ரெட்டி!

அரசியல் வட்டாரத்தில் நெருங்கியபோதுதான் டாக்டர் விஜயபாஸ்கரின் நட்பு கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். தனியார் மருத்துவமனையில் விஜயபாஸ்கர் டாக்டராகப் பணியாற்றிய நேரத்தில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை சேகர் ரெட்டிக்கும் அறிமுகம் செய்துவைத்தார் விஜயபாஸ்கர். யாருடன் பழகினாலும் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடுவது சேகர் ரெட்டியின் ப்ளஸ். இது, எல்லோருக்கும் பிடித்துவிட வி.ஐ.பி-க்கள் வட்டாரத்தில் உலவ ஆரம்பித்தார்.

தி.மு.க ஆட்சியின்போதும் அதிகாரிகள் துணையுடன் சகல காரியங்களையும் செய்து வந்தார். அந்த ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை எடுத்து கைமாற்றிவிட்டு, பணம் சம்பாதித்து வந்தார். அ.தி.மு.க ஆட்சி வந்ததும், அவருக்கு மீண்டும் ராஜயோகம் அடித்தது.

அதிகாரி ஆசி!

கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவருடன் சேகர் ரெட்டிக்கு நெருக்கம் அதிகம் ஆனது. இருவரும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள். இப்போது, அந்த அதிகாரி... அதிகார மையத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அந்த அதிகாரியின் ஆசி இப்போதும் அவருக்கு உண்டு. அவருடைய மகள் திருமணம் நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேகர் ரெட்டிதான் பார்த்தார். அவரின் ஆதரவோடு அரசின் பெரிய கான்ட்ராக்ட்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன. அவருக்குப் போகத்தான், மற்றவர்களுக்கு கான்டராக்ட்கள் கிடைக்கும் என்கிற நிலை உருவானது. ஒரு கட்டத்தில், ஆறுமுகசாமியிடம் இருந்து மணல் கான்ட்ராக்ட் பறிபோனதற்கு... அந்த அதிகாரிகளும் சில அமைச்சர்கர்களும் சேர்ந்த கூட்டணிதான் காரணம்! புதுக்கோட்டை ராமச்சந்திரன், சேகர் ரெட்டி வசம் இன்று மணல் பிசினஸ் போய்விட்டது!

செல்வாக்கு!

ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. மொத்த கேபினெட்டும் அம்மாவுக்காக பூஜை புனஷ்காரங்களில் இருந்தபோது... இந்த ஃபைல் மட்டும் மூவ் ஆனது என்றால், சேகர் செல்வாக்கைக் கவனியுங்கள். திருப்பதியில் மொட்டை போட போனபோது, ஓ.பன்னீர்செல்வத்துடன் போகும் அளவுக்கு நெருக்கம். பன்னீர்செல்வத்தின் அந்தப் பயண ஏற்பாட்டைச் செய்தவர் அவர்தான்.

கார்டனில் ஒலிக்கும் பெயர்!

அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல வளையங்களைத் தாண்டி கார்டனுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் சேகர் ரெட்டி. காலப்போக்கில் டாக்டர் வெங்​கடேஷ் உள்ளிட்டோர் கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டபோதும் விசுவாசத்தின் விளைவாக கார்டனுக்குள் நிலைத்து நின்றார். கார்டனில் அதிகமாக ஒலிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது சேகர் ரெட்டியின் பெயர். கார்டனுக்குத் தேவையான எதையுமே இவர்தான் செய்து முடிக்கிறார். இப்போது, அ.தி.மு.க-வில் சேகர் ரெட்டி அசைக்க முடியாத ஆள். தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், கலியமூர்த்தி, ‘மிடாஸ்’ மோகன் போன்றவர்கள் கண் அசைவுக்கு அ.தி.மு.க-வினர் தவம் கிடந்ததுபோல, சேகர் ரெட்டியைப் பார்க்கக் காத்துக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். சேகர் ரெட்டி போன் என்றால், அமைச்சர்கள் பலர் எழுந்து நின்றுதான் பேசுவதாகக் கிண்டல் அடிக்கிறார்கள். இவ்வளவு அதிகாரத்தோடு வலம் வந்தாலும்... அவர், அ.தி.மு.க-வில் வெறும் உறுப்பினர் மட்டுமே!

வளைக்கும் பி.ஜே.பி.!

இன்று (8-12-16), சேகர் ரெட்டியின் தி.நகர், அண்ணா நகர் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது பி.ஜே.பி பிரமுகர் ஒருவர், பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பி.ஜே.பி அதற்கான முதல்கட்ட வேட்டையை தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு, பி.ஹெச்.பாண்டியனையோ அல்லது செங்கோட்டையனையோ நியமிக்க வேண்டும் என்றும், தம்பித்துரையை மத்திய அமைச்சர் ஆக்கும் யோசனையும் இருப்பதாக சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துமனையில், சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டனர். அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு, அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த பைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன், அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, விமானத்தைவிட்டு 20 நிமிடங்கள் கழித்தே வெளியே வந்தார். விமானத்தில்... அவர், ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தார். வரும் காலங்களில் யாரிடம் பேசுவது, என்ன செய்வது என்கிற உத்தரவுகளை பிரதமர், அவர்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில்... தம்பித்துரை மட்டுமே தொடர்பாக இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அப்போது, இன்னும் பல விஷயங்கள் நடக்கும். அதற்குள், சசிகலா குடும்பத்தை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவரவே இன்று சேகர் ரெட்டி வீடுகளிலும், ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை இன்று நடத்தியுள்ளனர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

திடீர் தாக்குதல்!

இவ்வளவு அறிவுரைக்குப் பிறகும், சசிகலா சார்பில் வேறு சிலரிடம் உதவி கேட்கப்பட்டு இருக்கிறது. இதுவே இந்தத் திடீர் ரெய்டுக்கு காரணம். மேலும், நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் நடராஜனும் சசிகலாவும் சந்தித்து பேசி உள்ளனர். இது, டெல்லிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சேகர் ரெட்டியிடம், சசிகலா மற்றும் அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளின் பணம் இருப்பதால் அவரை வளைத்தால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு இருக்கும் என்பதால்... முதலில் அவரை, தேர்ந்து எடுத்துள்ளனர்.

ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு வருவதற்கு முன், போயஸ் கார்டனில் என்ன நடந்தது? 

#VikatanExclusive


"முதல்வர் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமை. அவருடைய இறப்பு அறிவிப்பு வருவதற்கு முன் மாலை போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அடுத்தடுத்து கார்கள் வந்தன. அந்த நேரத்தில் ஜெயலலிதா அப்போலோவில் சீரியஸாக இருந்தார் என்றுதான் எங்களுக்கு தகவல். காரை எட்டிப் பார்த்தோம். சசிகலாவின் உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள் என பலர் ஒன்றன்பின் ஒன்றாக வந்தனர். இவர்களை உள்ளே விடலாமா? என்கிற குழப்பம். அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம் தொடர்புகொண்டு எங்கள் உயர் அதிகாரி பேசினார். ’அனுமதியுங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் உள்ளே நுழையவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டவர்கள் பலரும் இருந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவர்கள் டூரிஸ்ட் ஸ்பாட் போல வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மன்னார்குடியில் இருந்து வந்திருந்த பெண்கள் பட்டாளம், ' ஒ...இதுதான் பெரியம்மா அறையா? இதுதான் சின்னம்மா அறையா? இதுதான் பூஜை அறையா?' என்றெல்லாம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர். தஞ்சாவூர் பக்கத்திலிருந்து ஒரு வயதான பெண்மணி வந்திருந்தார். அவர் நேராக மேக்கப் அறையில் போய் தன்னை அலங்கரிக்க ஆரம்பித்தார். அவர் சில வருடங்களுக்கு முன்பு, அம்மாவின் கோபத்துக்கு ஆளானவர். அவர்கள் அனைவருக்கும் உணவு தயாரானது. இஷ்டப்பட்ட உணவை சமைக்கச் சொல்லி சாப்பிட்டனர்.

போயஸ் கார்டனில் சமையல் செய்துவந்த 66 வயது பெண்மணி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். சிவகங்கையைச் சேர்ந்தவர். கடந்த பல வருடங்களாக, போயஸ் கார்டனில் தங்கி உணவு தயாரித்துக் கொடுத்து ஜெயலலிதாவை அசர வைத்தவர். ஜெயலலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். சசிகலா உறவினர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி பேசிக்கொள்வதை சமையல்அறை ஒரத்தில் நின்று பதற்றத்துடன் கேட்டார். கண்ணீர் விட்டார். அவர் அன்று முழுக்க சாப்பிட வில்லை. ஆனால், சசிகலாவின் உறவினர்களுக்கு சமைத்துப்போட்டார். மாலை 7 மணி இருக்கும். அப்போலோவில் இருந்து போன் வந்தது. வீட்டில் இருந்த பணிப்பெண்களுடன் சசிகலா பேசினார்.

மடிசார் பட்டுப்புடவை, கைக்கடிகாரம், வைரம் பதித்த டாலர் செயின், மோதிரம்... இதையெல்லாம் எடுத்துக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எங்களுக்குப் புரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாகிவிட்டது என்று! வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தோம். 'இது தெரியாதா?...பெரியம்மா உடல்நிலை ரொம்பவும் மோசமாகிவிட்டது. எந்த நேரமும் காலமானார் நியூஸ் வெளியாகலாம். அதுமாதிரி அறிவிக்கப்பட்டவுடன், அவரது உடலைப் போர்த்த அவர் விரும்பி அணியும் மடிசார் புடவையை கேட்டார்கள். அவரை அலங்கரித்துவிட்டு இங்கே கொண்டு வருவார்கள். சிறிதுநேரம் வைத்திருந்துவிட்டு ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுபோக திட்டமிட்டிருக்கிறார்கள்' என்றார்கள். வாசலில் காவலுக்கு நின்ற எங்களின் கண்களில் நீர் பனித்தன. வெளியே காட்டிக்கொள்ளமுடியாத நிலைமை!


மாவிலை, சந்தனக்கட்டைகள்... இப்படி ஒவ்வொன்றாக வீட்டுக்கு வந்தன. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வருவதற்கு முன்பே, அவருக்கான இறுதிச் சடங்குப் பொருட்கள் போயஸ் கார்டனை வந்தடைந்தன. இரவு 11.30 மணி இருக்கும். எங்கள் வயர்லெஸ் அலறியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்போலோ நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தகவல் வந்தது. அதிர்ந்துபோனோம். போயஸ் கார்டனில் இருந்த பணிப்பெண்கள், சமையல்காரர், வீட்டு வேலை செய்கிறவர்கள் என அனைவரும் கதறி அழுதனர். டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை ஜெயலலிதாவின் உடலுடன் ஆம்புலன்ஸ் வந்தது. ஜெயலலிதாவின் உடலை இறக்கி நடு ஹாலில் டைனிங் டேபிள் இருந்த இடத்தில் வைத்தார்கள். எங்கிருந்தோ ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை அழைத்துவந்தார்கள். பிறந்த வீட்டு கோடி என்கிற முறையில் புதிய புடவை ஒன்றை ஜெயலலிதாவின் உடல் மீது சசிகலா போர்த்தினார். உடன் தீபக்கும் நின்றார். 'இவர்தானே...ரத்த உறவு. சசிகலா போடுகிறாரே?' என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்.




அந்த நேரத்தில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், செக்யூரிட்டிகள்..என்று அந்த தெருவில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். துக்கம் அனுஷ்டிப்பதற்காக அவர்களை உள்ளே அனுமதித்தோம். அப்போது மடிசார் புடவை, நகைகள் அணிவிக்கப்பட்டு தூங்குவது போல காட்சியளித்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். அவர் அருகில் தீபக் நின்றிருந்தார். சசிகலா குடும்பத்தினர் வந்து முன்னால் நின்றனர். அர்ச்சகர் முதலில் மாவிளையில் தண்ணீர் தெளித்தார். மஞ்சள் சந்தனத்தை ஜெயலலிதாவின் கைகளில் பூசினார் சசிகலா. அதன் பின் சில சம்பிரதாயங்களை திவாகரனில் ஆரம்பித்து ஆண், பெண்... என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்த எங்களைப்போன்ற பணியாளர்களும் ஜெயலலிதாவின் உடலை வணங்கினோம். எல்லாம் முடிய காலை 5.30 மணி ஆகிவிட்டது. பிறகு, ஜெயலலிதாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்றனர். வேதா இல்லத்தில் சிங்கம் போல வளைய வந்த ஜெயலலிதாவை அந்த நிலைமையில் பார்த்த எவருக்கும் கண்கள் குளமாகி இருக்கும்!” என்று கலக்கமான குரலில் சொல்லி முடித்தார்.

- ஆர்.பி.

என்னிடம் உத்தரவை எதிர்பார்க்க வேண்டாம்!’  -அமைச்சர்களுக்கு கட்டளையிட்ட சசிகலா

vikatan.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, இன்று காலையில் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர் அமைச்சர்கள். ‘ அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யுங்கள். என்னுடைய உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டாம்’ எனத் தெரிவித்ததாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க விரும்பினர். நேற்று காலை முதலே, ‘அவரிடம் இருந்து அழைப்பு வரும்’ எனக் காத்திருந்தனர். எந்த உத்தரவும் கார்டனில் இருந்து வரவில்லை. “ நேற்று மதியம் பத்திரிகையாளர் சோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பினார் சசிகலா. ‘ அம்மா மறைந்து மறுநாளே செல்ல வேண்டுமா?’ என உறவினர்கள் கேட்கவும், ‘ அவர் இருந்திருந்தால் அடுத்த நிமிடமே சென்றிருப்பார். எனவே, நான் செல்கிறேன்’ எனப் பதில் கொடுத்தார். இன்று காலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி உள்பட சில அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களிடம், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்பட சில விஷயங்களை விவாதித்தார்” என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர்,

“ நேற்று முழுக்கவே எந்த அமைச்சருக்கும் போயஸ் கார்டனில் இருந்து போன் செல்லவில்லை. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் இருந்ததால், சற்று ஓய்வெடுக்கவே விரும்புகிறார். முதல்வராக ஓ.பி.எஸ் நியமிக்கப்படும் முடிவை எடுத்தபோதும், உறவுகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் கொடுத்தவர், ‘ அம்மா இருந்திருந்தால், அவருடைய சாய்ஸாக அவர்தான் இருந்திருப்பார். அவரே முதலமைச்சர் பதவியில் தொடரட்டும்’ என்றார். இன்று அவரிடம் ஆலோசிப்பதற்காக கார்டன் வந்தார் பன்னீர்செல்வம். அவரிடம் பேசியவர், ‘ நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன். விவாதிக்கும் அளவுக்கு எனக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. என்னிடம் இருந்து உத்தரவு வரட்டும் என நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அம்மா இருந்திருந்தால் என்ன சொல்வாரோ, அதன்படியே நினைத்துச் செயல்படுங்கள். கட்சியின் பொதுக் குழுவுக்குப் பிறகு அனைத்தையும் முடிவு செய்வோம். அதுவரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்’ என்றார். இந்த நிமிடம் வரையில், பன்னீர்செல்வத்தின் பணிகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை. இப்படியே தொடருமா அல்லது பொதுக் குழுவுக்குப் பிறகு நிலைமை மாறுமா என்ற கேள்விதான் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்றார் விரிவாக.


“ ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறார். சோ மறைவுக்கு வந்தபோது, அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் மேனரிசத்தை ஒட்டியே இருந்தன. தொண்டர்கள் மத்தியில் தீவிரமாக வலம் வரத் திட்டமிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களையும் அவர் பக்கம் தக்க வைப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழு நாள் துக்கம் முடிந்த பிறகு, பொதுக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. கட்சியின் முழு அதிகாரம் நிரம்பிய பொதுச் செயலாளர் பதவி தேர்வுக்குப் பிறகே, ஆட்சியின் லகானை தன் பிடிக்குள் கொண்டு வருவார் சசிகலா” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

UGC say in principal fresh term

Now access academic certificates online


Pune: In a move to go digital, the University Grants Commission (UGC) published a notification on the formation of a National Academic Depository (NAD), which will serve as an online storehouse of academic awards such as degrees, diplomas, certificates and mark sheets issued by the academic institution, boards and eligibility assessment bodies in a digital format.

NAD will be available online 24x7 and will help in validating the document’s authenticity, their safe storage and easy retrieval.

Speaking about the initiative, Dhanashree Kumbhar, a first-year postgraduate student from the city, said that it will ease the burden of keeping the physical copy of the certificate safe.

“This will help us access all our certificates from anywhere in the world. It will also help the institutes to send the certificates as soon as they are ready. Till now, we had to stand in queue and fill numerous forms to get our degrees. It will also be easier to retrieve any document if misplaced,” said Kumbhar.

Echoing similar sentiments, MD Lawrence, Principal of Marathwada Mitra Mandal College of Commerce (MMCC), said the approach is holistic for every stakeholder. “This depository will help the employers, students and institutes in accessing the necessary and relevant documents,” he said.

UGC: Universities must go cashless

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
Chennai: With demonetisation having affected people in all spectrums of society, the University Grants Commission (UGC) has asked all the universities to involve students in a campaign for promoting digital economy. MHRD has launched the Vittiya Saksharata Abhiyan (Visaka), a campaign for promoting digital economy through youth volunteers from the higher educational institutions of the country. The campaign may be run for a month between December 12, 2016, and January 12, 2017.

In a circular to the vice-chancellors of all affiliating universities, UGC secretary Jaspal S. Sandhu said, “The participation of youths in the higher educational institutions in the campaign is highly relevant because they would be the main beneficiaries in creating a digital economy — free of corruption, black money, completely transparent.” “It is, therefore, essential that the heads of all institutions educate and train their students in the various modes of digital payments and encourage them to join as volunteers in this campaign,” he urged the universities.


An important component of this campaign is to ensure that every campus becomes completely cashless by adopting digital payment systems in all its receipts, payments and transactions within the campus.

But, the top universities in the state said they have gone for cashless operations two to three years back. “Anna University has introduced online transactions for all its payments in 2013. We are collecting the exam fees and tuition fees in online mode only. We also plan to introduce an online mode to collect exam fees from affiliated college students,” said S.Ganesan, registrar, Anna University.

For the ease of operations and to avoid paper transactions, the University of Madras also has gone to the cashless mode. “Now, we will try to implement the cashless transactions wherever it is possible,” said P.David Jawahar, registrar, University of Madras. “But, the university’s senate and syndicate committees will take a decision on giving credits to the students who take part in the campaign for the digital economy,” he said.

Some professors in the university have expressed concern about involving the students in such a campaign. “The demonetisation is a controversial issue and we don’t know how to involve our students in this campaign,” they wondered.

Colleges can't hold students' documents Prakash Kumar NEW DELHI: December 9, 2016, DHNS

Colleges can't hold students' documents

Prakash Kumar NEW DELHI: December 9, 2016, DHNS
The University Grants Commission (UGC) has restricted higher educational institutions (HEIs) from keeping in its custody the original mark sheets, school leaving certificates and other documents of students.

It has also strictly prohibited the HEIs from charging tuition fees in advance for the entire programme of study or for more than one semester or year, which a student is enrolled to, notifying a new set of rules for the universities, colleges and other institutions.

“The HEIs shall physically verify the originals at the time of admission of the student in his/her presence and return them immediately after satisfying themselves about their authenticity and veracity, keeping the attested copies for their record. The HEIs shall charge fees in advance only for the semester/year in which a student is to engage in academic activities,” the UGC rule stated.

The commission’s rules provide for a four-tier system for the refund of fees remitted by students in case of those choosing to withdraw from the programme after enrolment.

Refund rules
The higher educational institutions will now have to refund 100% fee on serving of notice of withdrawal of admission by a student 15 days before the formally-notified last date of admission. The refund is 80% within 15 days after the last date of admission. Between 15 to 30 days, the refund will be 50% of the fee. No money will be refunded to a student who submits a withdrawal notice after 30 days of the last date of admission, according to the rules.

The UGC has formulated the rules to prohibit “coercive and profiteering institutional practices” by the universities and colleges. “Let me apprise you that the UGC has taken a serious view of the complaints brought to its notice by students and other stakeholders and will take strict action against universities and their affiliated/constituent colleges breaching the provisions of this notification,” UGC Secretary Jaspal S Sandhu said in a letter to all universities, colleges and other higher educational institutions.

A considerable number of complaints, grievances, court cases and other references were received by the commission on various “coercive and shady dealings” carried out by the HEIs, which reflected that “profiteering motivations” still drove the operation of “quite a few institutions in India”, he said.

No need to submit original documents during admission, says UGC

Logo

For the upcoming academic year, students will no longer have to submit their original certificates with the university or college for admission. The move is likely to help lakhs of students who are unable to withdraw admission from the institute for better prospects.

Not only this, educational institutions cannot make it mandatory for students to purchase a prospectus; they will have to offer them a full refund if admission is cancelled by the student within 15 days.

Also, institutions can charge fee in advance only for the semester or year in which a student is to engage in academic activities.

The University Grants Commission (UGC) has brought out an elaborate sets of rules to put to an end “coercive and profiteering” practices followed by educational institutions in issues related to verifying certificates at the time of admission, remittance of fees and refunds among others.

These rules are part of the notification issued by UGC called ‘Remittance and Refund of Fees and other student centric Issues”. “Taking the certificates and testimonials into institutional custody under any circumstances or pretexts is strictly prohibited for it is a coercive tactic, which can be misused for blackmailing students who wish to withdraw admission from the institute for better prospects or other compulsions,” reads the notification.

According to officials, UGC had formed a committee for this purpose too after getting a number of complaints from students and parents regarding non-refund of fees and retention of original certificates by higher educational institutions and other related issues.

The notification covers all undergraduate, postgraduate and research programmes run by all universities recognised by the UGC and all colleges under their affiliating domain and deemed universities. The rules will come into force immediately.

They can charge fees in advance only for the semester/year in which a student to engage in academic activities. “This enabling provision is in line with the UGC guidelines on Choice-Based Credit System (CBCS) and Model Curricula which are geared towards promoting a student’s inter-institutional mobility,” it said.

Wednesday, December 7, 2016

எதைக் கண்டும் அஞ்சாதவர் 'சோ'- மோடி புகழஞ்சலி

சோ | மோடி

'சோ' ராமசாமி எதைக் கண்டும் அஞ்சாத உறுதி படைத்தவர் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ''சோ சிறந்த தேசியவாதி, அறிவுக்கூர்மை வாய்ந்தவர், பன்முகத்தன்மை கொண்டவர். அச்சமில்லாமல் பேசும் உறுதி படைத்தவர். வெளிப்படையான தன்மை கொண்ட புத்திசாலி.

இவை அனைத்துக்கும் மேலாக அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.

சோ ராமசாமியின் குடும்பத்துக்கும், அவருடைய துக்ளக் பத்திரிகை வாசகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்திய அரசியலில் உன்னத தலைவி: மாநில முதல்வர்கள் இரங்கல்

ஜெயலலிதா | கோப்புப் படம்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நாடு முழுவதும் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்திய அரசியலில் மிக உன்னதமான தலைவி என, ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:

தங்களின் பாசத்துக்குரிய அம்மாவை இழந்து வாடும் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் துயரத்தில் காங்கிரஸ் கட்சியும், என் குடும்பமும், நான் தனிப்பட்ட முறையிலும் பங் கெடுத்துக்கொள்கிறேன்.

அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக் கங்களை சந்தித்த ஜெயலலிதா திட மான மன உறுதியுடன், தனது மிகச் சிறந்த நிர்வாகத் திறமையின் மூலம் தேசிய அரசியலில் உன்னத தலை வராக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் வீழ்த்த முடியாத வீரத்துடன் சவால்களை கடைசி காலத் திலும் அதே போராட்டத்தை முன்னெடுத் தார்.

காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி:

மிகப் பெரும் தலைவரை நாம் இழந்துவிட்டோம். பெண்கள், விவ சாயிகள், மீனவர்கள், நலிந்த பிரிவினர் அவரின் கண்களின் மூலமாக கனவு கண்டனர்.

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி:

மக்களுக்காக போராடிய மக்கள் தலைவர் ஜெயலலிதா. நாட்டில் படித்த, அறிவார்ந்த அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி:

தமிழ் சினிமாவின் ராணியாக இருந்து, தனது அளப்பரிய தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியால் அரசியலில் தனக் கென தனி பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா.

டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்:

நிகரில்லாத நிர்வாகத் திறமை களைக் கொண்ட, தனித்துவமிக்க அரசி யல்வாதியான ஜெயலலிதா, சமகால இந்தியாவில் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் தலைவராக திகழ்ந்தவர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்:

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வர் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் மதிப்புக்குரிய தலைவர். பெண்கள் முன்னேற்றத்தின் அடை யாளமாக அவர் திகழ்ந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்:

கவர்ந்திழுக்கும் தலைமைப் பண்பு கொண்ட ஜெயலலிதா தமிழ கத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத் துச் சென்றவர். மக்களுடன் அவர் கொண்டிருந்த உறவு மிகவும் வலு வானது. அவருக்கு மாற்று வேறு யாருமில்லை.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்:

ஜெயலலிதாவின் மறைவு, தமிழ் சமூகத்துக்கு பெரும் இழப்பு. நடிகை யாக இருந்து, எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக உருவெடுத்த ஜெயலலிதா வின் வாழ்க்கை மற்றவர்களுக்கு உத் வேகம் அளிக்கக்கூடியது. பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அரிதாக இருந்த காலத்தில், அரசியலுக்குள் பிர வேசித்து, சவால்களை எதிர்கொண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் மாறி, புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்:

ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. புகழ் பெற்ற மிகப் பெரிய தலைவரான அவரின் மறை வுக்கு கோவா மாநிலம் சார்பில் இரங்கல் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அருணாச்சல் பிரதேச முதல்வர் பேமா காண்டு:

அனைவரையும் கவரும் வகையில், மிக செல்வாக்கான, அர்ப் பணிப்புணர்வுடன் கூடிய தலைவர்களில் ஒருவராக ஜெயலலிதா திகழ்ந்தார். பூத உடலின் இறப்பால் அவரின் புகழும், ஏழைகள் மீது அவர் வைத்த அன்பும் என்றும் அழியாது என நம்புகிறேன்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி:

தென்னிந்தியாவின் ஒவ்வொரு குடி மகனின் இதயத்திலும் ஜெயலலிதாவுக்கு தனி இடம் உண்டு. அவரின் இழப்பு, அதிமுகவுக்கு மட்டுமின்றி, அனைத்து தமிழக மக்களுக்கும் வேதனை அளிப்பதாக இருக்கும்.

புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்து வந்த பாதை

ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம்

தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் கடந்து வந்த அரசியல் பாதை:

பள்ளிப் படிப்பை தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா அரசு நினைவுப் பள்ளியில் படித்தார். பியுசி மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும், பி.ஏ பட்டப் படிப்பை உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுரியிலும் முடித்தார்.

அதன் பின்னர் பெரியகுளத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தபோது அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டு அதிமுகவில் உறுப்பினர் ஆனார். எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் கட்சி இரண்டாக உடைந்தபோது கடந்த 1989-ம் ஆண்டு (அதிமுக) ஜானகி அணியில் பெரியகுளம் நகர செயலாளராக இருந்தார். 91-ம் ஆண்டு பெரியகுளம் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராகவும், 1999-ம் ஆண்டு தேனி மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இதற்கிடையில் 1991-ம் ஆண்டு பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கியில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்ஏல்ஏவாகி மே மாதம் முதல் 2001-ம் ஆண்டு செப்டம்பர் வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது இவர் 2001-ம் ஆண்டு செப், 21-ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் வரை பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். 2011-ம் ஆண்டு போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி அமைச்சரானார்.

பின்னர் 2014-ம் ஆண்டு செப். 29-ம் தேதி முதல் 2015 மே 22-ம் தேதி வரை 2-வது முறையாக முதலமைச்சராக இருந்துள்ளார். 2016-ம் ஆண்டு மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டு நிதி அமைச்சரானார். முதலமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து கடந்த அக்டோபர் 11-ம் தேதி முதல மைச்சர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாக்காக்கள் இவரிடம் ஒப்படைக் கப் பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 3-வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

விமர்சித்துவிட்டும் நட்பை தொடர்பவர் 'சோ'- சிவகுமார் புகழஞ்சலி



இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடைய நன்மதிப்பையும் பெற்றவர் சோ என்று சிவகுமார் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகுமார். அவருடன் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "அரசியலிலோ, ஆட்சி அதிகாரத்திலோ எந்த ஒரு பதவியும் வகிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடைய நன்மதிப்பையும் பெற்றவர் சோ. பாராட்டு, புகழுரை, பொன்னாடை என்றால் ஒடி ஒளிந்து கொள்வார்.

தனக்கு சரி என்று தோன்றினால், எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் கவலைப்படாமல் துணிந்துச் சொல்லக்கூடிய ஒரு மனிதர். இவர் கடுமையாக யாரை எல்லாம் விமர்சித்தாரோ, அவர்கள் அனைவரும் கடைசி மூச்சு வரைக்கும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

பலர் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைத்த போது, முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கான பொறுமை எனக்கு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். சோ உணர்ச்சிவசப்பட மாட்டார். கண்ணீர் விடமாட்டார்" என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

'சோ'வின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை: ராமதாஸ் புகழஞ்சலி

இடது: சோ ராமசாமி, வலது: ராமதாஸ் | கோப்புப் படம்.

சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவு குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

1963-ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகம் ஆன சோ ராமசாமி, அதற்கு முன்பே நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தேன்மொழியாள் என்ற மேடை நாடகத்தில் சோ என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அவர் இந்த பெயராலேயே அழைக்கப்பட்டார்.

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இவரது அரசியல் நையாண்டி வசனங்கள் புகழ் பெற்றவை. 'முகமது பின் துக்ளக்' என்ற பெயரிலான இவரது திரைப்படம் இன்று வரை மக்களால் ரசிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் கோமாளித்தனமான முடிவுகளை எடுக்கும் போது அதை துக்ளக் ஆட்சியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது வாடிக்கையாகிவிட்டது.

துக்ளக் இதழிலும், பிற இதழ்களிலும் சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று கூறும் அளவுக்கு அனைவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனாலும் அவரது விமர்சனங்கள் எல்லை மீறாமலும், கண்ணியத்துடனும் அமைந்திருக்கும்.

அனைத்து தலைவர்களையும் விமர்சித்த சோ ராமசாமி, 'மது விலக்கை பாமக மட்டுமே நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. மது மற்றும் புகைக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே உண்மையாக போராடி வருகிறார்' என்று போற்றி பாராட்டியதை மறக்க முடியாது.

தனிப்பட்ட முறையிலும் அவர் எனக்கு சிறந்த நண்பராக விளங்கினார். எனது குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டவர். பாமகவின் செயல்பாடுகள் குறித்து என்னிடம் விவாதிப்பார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவரை அண்மையில் நான் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் மறைந்திருக்கிறார்.

தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், துக்ளக் பணியாளர்கள் ஆகியோருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பல்துறை வித்தகர் 'சோ'- நாடகம் முதல் அரசியல் அரங்கு வரை


சோ ராமசாமி | கோப்புப் படங்கள்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

பல்துறை வித்தகரான சோ கடந்து வந்த பாதை

* சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

* இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

வழக்கறிஞராக சோ

* சோ ராமசாமியின் தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ரூபூதம் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள். எனவே இயற்கையாகவே சோ அதில் ஈர்க்கப்பட்டு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்

நாடக உலகில்...

* 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக 'கல்யாணி' என்ற நாடகத்தில் நடித்தார்.

* 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. அதன்பிறகு முழு நேர நாடகக் கலைஞராக பாதை மாற்றிக் கொண்டார்.

* சோவின் நாடகங்களில் அரசியல் நையாண்டியும், சமூக விமர்சனமும் கலந்திருக்கும். 1960-களில் அவரது சம்பவாமி யுகே யுகே என்கிற நாடகத்தை தணிக்கை செய்ய தமிழகத்தின் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான பக்தவத்சலம் முயற்சி செய்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.

* சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

* 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது 'இந்து மகா சமுத்திரம்' நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.

திரைப்பட உலகில்...

* திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

* பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 'யாருக் கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

* சோ எழுதிய பல நாடகங்கள், மேடையைத் தாண்டி திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் நன்கு கற்றவர். அவை குறித்து விரிவாக எழுதியும் உள்ளார்.

* சோவின் முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படமாக உருவாவதைத் தடுக்க அப்போதைய திமுக அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது.

* 'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.

பத்திரிகை உலகில்...

* தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970-ம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.

* அவரது நையாண்டியும், துணிச்சலும் அவரது கட்டுரைகளிலும், கேலிச்சித்திரங்களிலும் பிரதிபலித்தது.

அரசியல் அரங்கில்...

* அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

* பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து ஒருவகையில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சோ எனக் கூறலாம்.

* வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்

* தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

* சோ தான் பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றிகள் குறித்து பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றே கூறுவார். அதனால் தான் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியபோது அதற்கு 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' எனப் பெயர் வைத்தார்.

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்


ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது:

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்.

மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது.

இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ்







முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர், டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் இருந்து பொது மக்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி, இறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அந்த சான்றிதழில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்நாதன் கையெழுத்திட்டுள்ளார். இந்த சான்றிதழ் 6-ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்



தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர்5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.



திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.



அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.



1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் துக்கத்தில் விகடனும் பங்கெடுக்கிறான்.


ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

இனி ஜெயலலிதாவை எப்போதெல்லாம் மிஸ் செய்வோம் தெரியுமா?

ஜெயலலிதா
ஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும்? முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்...! சந்தேகமே இல்லை. இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிதான் இவர். தன் ஆளுமையால் தமிழகம் தொடங்கி உலகளாவிய அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். கண்டிப்பாய் இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். இந்த இழப்பினால் நேர்ந்த வெற்றிடத்தை இனி நிறைய தருணங்களில் நாம் உணரத்தான் போகிறோம்.

பொதுக்குழு கூட்டங்கள்:

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தீராத் தனிமையில்தான் உழன்றார் ஜெ. 'நான் யாரையும் சார்ந்திருந்ததில்லை. அதற்கான கொடுப்பினை எனக்கு கடைசி வரை இல்லை. இதுதான் என் விதி, என் தலையெழுத்து' - இது 2013-ல் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஜெ. நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள். தன் தலைமையில் நடக்கும் கூட்டத்திலேயே தான் மனதளவில் தனியாள்தான் என்பதை உருக்கமாக வெளிப்படுத்திய தலைவர் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கும். அவருக்கு யாருமில்லை என்ற எண்ணம்தான் 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என கோடிக்கணக்கான பேரை அவர் பின்னால் திரள வைத்தது. இனி யார் இருக்கிறார்கள் அவர்களை வழிநடத்த?

சினிமா:

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவேந்தர்கள் சினிமா ராஜ்ஜியத்தை கட்டியாண்ட காலம். வெண்ணிற ஆடை படத்தில் துறுதுறு பெண்ணாய் அறிமுகமாகிறார் ஜெ. அப்போது யாருக்கும் தெரியாது அடுத்த ஐம்பது ஆண்டுகள் சினிமாவுலகை மட்டுமல்ல, மொத்தத் தமிழகத்தையும் ஆளப் போகும் ராணி அவர் என. சினிமாவில் அவரின் இடம் சும்மா கிடைத்துவிடவில்லை. ஆண்டுக்கு சராசரியாய் பத்து படங்கள். 1968-ல் மட்டும் 21 படங்கள். இது பட்டி தொட்டி எல்லாம் கல்லா கட்டிய ஹீரோக்களுக்கே கஷ்டம்தான். வேகம், அதிவேகம் எல்லாம் தாண்டி மின்னல் வேக உழைப்பு. பெரும்பாலும் சில்வர் ஜுப்ளி படங்கள். தொடவே முடியாத ரெக்கார்ட் இது. ஜெ. தமிழ் சினிமாவின் சகாப்தம்.



சட்டமன்றம்:

எதிர்க்கட்சி ஆட்களால் சூழப்பட்ட அரங்கில் தனியொரு ஆளாக உங்களால் தைரியமாக செயலாற்ற முடியுமா? ஜெ.வால் முடியும். அந்த கெத்துதான் அவரின் சொத்து. 'நீங்கள் கஷ்டப்பட்டு காவலர்களை அனுப்பி, அவர்கள் பகீரத பிரயத்தனத்துக்குப் பின் கூச்சலிடும் எதிர்க்கட்சியினரை வெளியே தூக்கிச் செல்வார்கள். ஆனால் அவர்களை வெளியே அனுப்ப எனக்கு 'கச்சத்தீவு, மதுவிலக்கு' என இரு வார்த்தைகள் போதும். உங்கள் வேலையை நான் சிம்பிளாக்குகிறேன்' என நகையாடுவதாகட்டும், 'நான் இருக்கும் வரை இந்த இயக்கம் தமிழர் வாழ்வு செழிக்க பாடுபடும்' என கம்பீரக் குரலில் உரக்கச் சொன்னதாகட்டும் ஜெ. ஜெ.தான். அவரில்லாத சட்டமன்றம் எதிரி இல்லாத போர்க்களம் போல. இதை பரம வைரியான தி.மு.கவே ஒப்புக்கொள்ளும்.

தேர்தல் பிரசாரம்:

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தென் தமிழகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது அ.தி.மு.க. 'இந்தக் கூட்டமே வெற்றிக்கூட்டமாகிவிடுமோ' என ஆளுங்கட்சி தரப்பில் அத்தனை நெருக்கடிகள். அத்தனையையும் தாண்டி திரண்டார்கள் லட்சக்கணக்கான மக்கள். மேடையில் தோன்றிய ஜெ. கக்கிய அனல் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம். அது இந்தத் தலைமுறை பார்த்திராத எழுச்சி. 2014. மக்களவை தேர்தல் சமயம். மொத்த இந்தியாவும் மோடி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தன. ஒற்றையாளாய் களத்தில் நின்று 'மோடியா இந்த லேடியா என பார்த்துவிடுவோம்' என வாளைச் சுழற்றினார். 'செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?' - காற்றில் இன்னமும் இருக்கிறது இந்த கர்ஜனை. விழுந்தன ஓட்டுகள். பின் நிகழ்ந்தது வரலாறு. இத்தனை ஆவேசமாக களமாடும் தலைவரை இனி தமிழகக் களம் காணுமா?

துணிச்சல் முடிவுகள்:

அரசியலுக்கென சில வரைமுறைகள் உண்டு. தலைவர்களுக்கே உண்டான சில தயக்கங்கள் உண்டு. ஆனால் ஜெ. விஷயத்தில் இவை செல்லுபடியாகாது. ஒற்றை முடிவை எடுத்து மொத்த தமிழகத்தையும் அதிரடிக்க அவருக்கு இரண்டு நிமிடங்கள் போதும். இதற்கு சாட்சியாய் வரலாறு முழுக்க விரவியிருக்கின்றன சம்பவங்கள். உண்மைதான். அவற்றில் சில சம்பவங்களின் மேல் கடுமையான விமர்சனங்கள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதற்கும் துணிந்தவர் என்ற அடையாளத்தை கடைசிவரை ஜெ. விட்டுத்தரவே இல்லை. மீடியாக்கள் சித்தரிக்கும் 'அதிரடி' என்ற வார்த்தைக்கு ஆல்டைம் சொந்தக்காரர் இவர். இப்படியான 'அதிரடிகள்' இனி தமிழக மக்கள் காணக் கிடைப்பது சந்தேகமே.



தனியே தன்னந்தனியே:

இந்திய அளவில் செல்வாக்கு இருக்கும் ஒரு தலைவரை சுற்றி கண்ணுக்குத் தெரிந்த அதிகார வட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஆனால் ஜெ. எப்போதுமே தனித்துதான் இருந்தார் 'மனதளவில்'. டெல்லியோ, தமிழகமோ அவர் எடுப்பதுதான் முடிவு. 'வாழ்க்கையில் எது நடந்தாலும் நானே தனியாக அதை சந்தித்து, தனியாகவே முடிவு செய்து வந்திருக்கிறேன்' என தன் கட்சிப் பொதுக்குழுவில் அவர் பேசிய வார்த்தைகளே சாட்சி. ஆட்சி, அதிகாரம், வசதி என அத்தனை இருந்தும் மனதளவில் தனிமைப்பட்ட தலைவரை இனி வரும் தலைமுறையினருக்கு அதிசயமாக இருக்கும்!

சவால்:

சவால்கள் ஜெ.விற்கு மிகவும் பிடிக்கும். அவர் இறுதியாக வீற்றிருந்த இதே ராஜாஜி ஹாலில்தான் எம்.ஜி.ஆர் மறைவின்போது அவமானப்படுத்தப்பட்டார். உள்ளே நுழையக்கூட அனுமதி மறுத்தார்கள். அவமானம் அவருக்கு வைராக்கியத்தைக் கற்றுக்கொடுத்தது. வைராக்கியம் அவரை சவால்களை சந்திக்கக் கற்றுக்கொடுத்தது. பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. 'ஆடம்பரச் செலவுகள் செய்வார்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது நகைகளைத் துறந்தவர்தான். அதன்பின் இறுதிக்காலத்தில்தான் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப சின்னதாக நகை அணியத் தொடங்கினார். இப்படி எக்கச்சக்க வைராக்கிய நிகழ்வுகள் அவர் சுயசரிதை எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ​​​​​​​



இந்திய அரசியல் அரங்கு:

1991-ல் தேசிய அளவில் கிடைக்கப் பெற்ற முக்கியத்துவம். அவரின் இறுதிக்காலம் வரை இம்மிக் குறையவில்லை. தேசியக் கட்சிகள் தேடி வந்து கூட்டணி வைப்பதாகட்டும், மூன்றாம் அணி அமைக்க வேண்டும் என பிற மாநிலக் கட்சிகள் கைகோர்ப்பதாகட்டும், ஜெ.வின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2014 தேர்தலின்போது மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்பட்டார் ஜெ. தமிழகம் போன்றே பிற மாநிலங்களிலும் முடிவுகள் வந்திருந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். இந்திய அரசியலில் இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நேர்காணல்கள்:

ஜெ. அரசியலுக்கு வந்தபின் நிறைய பேட்டிகள் அளிப்பதில்லை. அதுவே அவர் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியையும் ஸ்பெஷலாக்கியது. 'எனக்கு நாரி கான்ட்ராக்டர் மேல் க்ரஷ் இருந்தது' என கன்னம் சிவக்கக் கூறியது, ஆ ஜா ஷனம் பாடலை மெல்லிய குரலில் பாடியது என சிமி கேர்வாலுடனான நேர்காணல் அவரின் மென்மையான பக்கத்தைக் காட்டியது. அதே சமயம், 'எனக்கு உங்களோடு பேசியதில் சுத்தமாக மகிழ்ச்சியே இல்லை' என கரன் தாப்பரிடம் சிடுசிடுத்துவிட்டு மைக்கை வீசிவிட்டுப் போன நேர்காணல் அவரின் கோப முகத்தை காட்டியது. ஒளிவு மறைவில்லாமல் தோன்றியவற்றை பேசும் அவரின் நேர்காணல்களை இனி எக்காலத்திலும் பார்க்க வாய்ப்பில்லை.​​​​​​​



சர்வதேச தொடர்புகள்:

ஜெ.வின் மொழி வளமை அசாத்தியமானது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் சிக்ஸர் அடிக்கும் தில் லேடி. எதிர்கருத்துக்களை வலுவாக வைப்பார் ஜெ. ஆனால், அதையும் குறுக்கிடாமல் கேட்பார்கள் எதிராளி. இந்த ஆளுமைதான் சர்வதேச தலைவர்களையும் அவரைத் தேடி வர வைத்தது. உலகத்தின் பெரியண்ணனான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியையே இந்தியாவின் தென்கோடி தமிழகத்தில் கால் வைக்கச் செய்தது அவரின் ஆளுமைதான்!

இத்தனையையும் தாண்டி அவர் வெற்றிடத்தை உணர்வதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஏனென்றால்... அவர் ஜெயலலிதா! இவரைப் போல முன்னரும் ஒருவர் இல்லை... இனியும் ஒருவர் இருக்கப் போவது இல்லை!

ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் அவரின் முதல் வசனம், 'கடவுளே நீ எங்க இருக்க? எப்படி இருக்க? ஏன் இருக்க?' என்பதுதான். 51 ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றிருக்கிறார்

-நித்திஷ்

NEWS TODAY 27.09.2024