Tuesday, June 6, 2017

'தி.நகரில் மக்கள் நடமாட்டமே இல்லை...!'' -புலம்பும் சிறு வியாபாரிகள்

நமது நிருபர்




தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில், 'தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடையில் கடந்த புதன் கிழமை (31-5-2017) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில், தீயின் கோர நாக்குகள் ஜவுளிக்கடையின் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருந்த தீயினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், தீயணைப்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 36 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட ஜவுளிக்கடையின் கட்டடம் வலுவிழந்து போனது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2-ம் தேதியிலிருந்தே நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கட்டடத்தை இடிக்கும் பணி ஆரம்பமானது. அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல், இடிக்க வேண்டியிருப்பதால், கட்டடம் இடிக்கும் பணிகளில் மிகுந்த கவனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டட இடிபாடுகள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதனால், வடக்கு உஸ்மான் சாலையின் பெரும் பகுதி காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜவுளிக்கடையின் அருகில் அமைந்துள்ள நடை பாதை கடைகள் மற்றும் மேம்பாலத்தின் கீழாக அமைந்துள்ள சிறுவியாபாரக் கடைகள் ஆகியவை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ரம்ஜான் பண்டிகை நெருங்கிவரும் இச்சமயத்தில் வழக்கமாக, தி.நகரில் மக்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும். ஆனால், நடந்துமுடிந்த பெரும் தீ விபத்தும், அதற்கடுத்த சில நாள்களில் அதே பகுதியிலுள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சம்பவ இடங்களைச் சுற்றி பொதுமக்கள் நடமாட காவல்துறை தடை விதித்திருக்கும் காரணத்தாலும் தி.நகரில் மக்கள் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரக் கடைகளை நடத்திவரும் சிறு வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. போலீஸ் கெடுபிடி இல்லாத இடங்களில் மட்டும் கடை திறந்து வைத்திருக்கும் சிறு வியாபாரிகளும், மக்கள் கூட்டம் குறைந்திருக்கும் காரணத்தால், வியாபாரமின்றி கலக்கமடைந்துள்ளனர்.

40 வருடங்களாக கைக்குட்டை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் செண்பகம் என்பவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''வேலை நாட்களில்கூட தி.நகர் கூட்டமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகூட அவ்வளவாக கூட்டம் இல்லை. 8 மணிக்கு எல்லாம் கடை திறந்தாச்சு. இன்னும் ஒண்ணுகூட விக்கல. இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் உணவுக்குக்கூட கஷ்டப்பட வேண்டியதுதான்'' என்றார் வேதனையுடன்.

ஐஸ்க்ரிம் வகைகள், ஜூஸ் வகைகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான கவரிங் நகைகளை விற்றுவரும் கடையின் உரிமையாளர் செல்வம் தற்போதைய நிலைபற்றிக் கூறும்போது, சாதாரண நாள்களில் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வியாபாரம் நடந்தால், அதில் சுமார் 500 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த அளவு வியாபாரத்தையோ, அல்லது லாபத்தையோ எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனம்'' என்று நொந்துகொண்டார்.

25 வருடங்களாக நடைபாதையில், துணிக்கடை வைத்து இருக்கும் அகமது,''வாங்கி வைத்திருக்கும் பொருள்களை எப்படி விற்பது? மொத்தக்கடையிலிருந்து வாங்கிய பொருளுக்கான பணத்தை எப்படி செலுத்துவது என்றும் தெரியவில்லை'' என்று தவிப்பதாகக் குறிப்பிட்டார். பெரும்பான்மையான சிறு வியாபாரிகள் அனைவரும், ''பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம், சீருடை எனச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சமயத்தில், பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என நொந்து கொண்டனர்.

தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்கும் பணி இரண்டு, மூன்று நாள்களில் நிறைவு பெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 'கட்டடம் இடிக்கும் பணி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பால், சிறு வியாபாரிகள் அனைவரும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற ஏக்கத்துடன் ஏங்கி நிற்கிறார்கள் தி.நகர் சிறு வியாபாரிகள்!

ம.நிவேதிதா
பல்ஸர் மற்றும் டொமினார் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!
ராகுல் சிவகுரு

இந்தியாவின் டாப்-5 பைக் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பஜாஜ் ஆட்டோ, தனது பல்ஸர் சீரிஸ் மற்றும் டொமினார் பைக்குகளின் விலைகளை, ஆயிரம் ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு அதிகரிக்கும் உற்பத்திச் செலவுகள், உதிரிபாகங்களின் விலை ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகிறது. தனது ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை ஆகியவை சரிந்து வரும் நேரத்தில், இந்த விலை உயர்வு வெளியிடப்பட்டுள்ளது, பஜாஜுக்கு மைனஸாகவே பார்க்கப்படுகிறது.





பஜாஜின் பவர்ஃபுல் பைக்கான டொமினார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்குப் போட்டியாக, கடந்தாண்டு இறுதியில் களமிறங்கியது. பைக் விற்பனைக்கு வந்து 7 மாதங்களே நிறைவடையாத நிலையில், இதன் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. அப்படி இருந்தும், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காகவே அது திகழ்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.


இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், BS-IV இன்ஜின் - AHO ஹெட்லைட் - புதிய கலர் & கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களுடன் வெளியான 2017 பல்ஸர் சீரிஸ் பைக்குகளின் விலைகளை, ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, V - அவென்ஜர் - பிளாட்டினா - CT100 ஆகிய மற்ற பைக் மாடல்களின் விலையிலும், விரைவில் மாறுதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொமினார் மற்றும் பல்ஸர் சீரிஸ் பைக்குகளின், மாற்றியமைக்கப்பட்ட சென்னை எக்ஸ் ஷோரூம் விலைப்பட்டியல் பின்வருமாறு;








Dominar 400 : Rs 1,41,677 (STD), Rs 1,55,927 (ABS)

Pulsar RS 200 : Rs 1,25,272 (STD), Rs 1,37,486 (ABS)

Pulsar NS 200 : Rs 99,391

Pulsar 220F : Rs 94,045

Pulsar 180 : Rs 82,104

Pulsar 150 : Rs 77,412

Pulsar 135 LS – Rs 62,729

நம்மைக் காக்கும் மரங்கள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 06th June 2017 01:28 AM  
தற்போது நிலவும் அதிக அளவிலான வெப்பம், அனல்காற்று மழையின்மை, வறட்சி போன்றவை மரங்களின் முக்கியத்துவத்தை மனிதர்களிடையே உணர்த்தியுள்ளது. ஆனால் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவுக்கு மரக்கன்று நட வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோர்களிடம் இல்லை.
அற்ப காரணங்களுக்காக மரங்களை வெட்டும் நிகழ்வு தமிழகத்தில் மட்டும் தான் நிகழ்கிறது. ஒரு சில மரங்கள் மின்கம்பிகள் மீது உரசுகிறது என்பதற்காக பல ஆண்டுகள் வளர்ந்து பலருக்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை நாம் ஒரு சில நிமிடங்களில் நவீன கருவிகளைக் கொண்டு வெட்டிச் சாய்கிறோம். மரங்கள் மின்கம்பிகள் மீது உரசும் போது சம்பந்தப்பட்ட மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும் வெட்டினால் போதும்.
அதனை விட்டு விட்டு கிளைகளை மட்டும் வெட்டினால் பிற்காலத்திலும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்து மின்கம்பிகள் மீது உரசும் என்ற காரணத்துக்காக அந்த மரத்தை முழுவதுமாக வெட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
தமிழகத்தில் இந்த அளவுக்கு வெப்பம் அதிகரித்தற்கு நான்கு வழிச்சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்கள் இருந்த இடத்தில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்றினார்களா என்பது கேள்விகுறியே. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்று பாடம் என்றாலேயே அனைவரது நினைவிலும் வருபவர் மன்னர் அசோகர்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் அசோகர் என்ன செய்தார் என்ற கேள்விகளை கேட்டால், அதற்கு மாணவர்கள் சாலையோரம் மரங்களை நட்டார் என வேடிக்கையாக பதில் சொல்வர். அப்போது நமக்கெல்லாம் வேடிக்கையாக தோன்றிய ஒரு விஷயம் இன்று இல்லாததால் நாம் படும் துயரம் எண்ணிலடங்காதது.
அன்று தொலைநோக்குப் பார்வையுடன் அசோகர் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டார். இதனால் மாதம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்ந்தனர். ஆனால் இன்று அவ்வாறு வைக்கப்பட்ட மரங்களை நாம் சாதாரணமாக அழித்ததன் பயனாக மழைவளம் குறைந்து நிலத்தடிநீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
அண்மையில் மறைந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தனது உயிலில் 'எனது இறப்புக்குப் பிறகு எனது நினைவாக நினைவு இல்லம், போட்டிகள், விருதுகள், சிலைகள் போன்றவற்றை அமைக்க வேண்டாம். எனது நினைவாக ஏதாவது செய்ய விரும்பினால் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரியுங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆறுகளையும், அணைகளையும் பாதுகாக்க போதுமான முயற்சி எடுங்கள்' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் மரங்களின் அருமையை எந்தளவு உணர்ந்துள்ளார் என்பது புரியும். இதுபோன்ற செய்திகளை படிக்கும் நாமும் நம்மால் முடிந்தளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் கடைமை.
இல்லையெனில் நமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் தற்போது வாகனங்களில் நிரப்பும் எரிபொருள் போல தண்ணீரை ஒரு லிட்டர், 2 லிட்டர் அதிக விலைக்கு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் மரங்களை வெட்ட நேரிடும் போது மரங்களை வெட்டமால், அதனை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கலாம்.
கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொண்டு ஆக்சிஜனை மரங்கள் வெளியிடுகின்றன. இதனால் சுற்றுப்புறங்களில் அதிகஅளவில் மரங்கள் இருக்கும்பட்சத்தில் தற்போது வாகனங்களால் ஏற்பட்டு வரும் காற்று மாசும் குறையும். மனிதர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கு மட்டும் பாதிப்பில்லை. மனிதர்களுக்கும் தான். வளர்ந்து வரும் நாடுகளின் மிக முக்கியப் பிரச்னையாக இருப்பது காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு. காற்று மாசு கார்பன் டை ஆக்ஸைடு வாயுவாலும் இன்ன பிற வாயுக்களாலும் ஏற்படுகிறது. இந்த காற்று மாசை அதிக அளவிலான மரங்கள் இருந்தால் மட்டுமே குறைக்க முடியும்.
ஏனென்றால் மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடு வாயு மற்றும் பிற வாயுக்களை உள்வாங்கிக் கொள்கிறது. ஓராண்டு முழுவதும் நன்கு வளர்ந்த ஒரு ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், ஒரு கார் 26,000 மைல்கள் தூரம் ஓடி வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொள்கின்றன.
அதாவது சுமார் 6 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை எடுத்துக்கொண்டு 4 டன் ஆக்ஸிஜன் வெளியிடுகின்றன. இது 18 பேர் ஆண்டு முழுவதும் சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன். ஒரு தனி மரமானது தனது வாழ்நாளில் சுமார் 250 கிலோ கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது.
பள்ளி வளாகங்களில் அதிக அளவிலான மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் கேன்சரை 50 சதவீதம் வரை குறைக்க முடியும். ஒரு வீட்டைச் சுற்றி 3 மரங்கள் இருந்தால் கோடைகாலத்தில் வீட்டில் குளிரூட்டிகளின் பயன்பாடும் 50 சதவீதம் குறையும்.
வீட்டில் கொய்யா, மா, வாழை போன்ற பலன் தரும் மரங்களை வளர்த்தால் அது சிறிய அளவிலான வருமானத்துக்கு வழிவகுக்கும். வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மக்களுக்கு பயன்படுகின்றன. பூ, இலை, காய், கனி, தண்டு, நார் பகுதி என எதுவுமே வீணாகாது.
இதுபோன்று பயன்களைத் தரக்கூடிய மரங்களை நாம் அழிக்காமல் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

Jun 06 2017 : The Times of India (Chennai)
Flights to Qatar will operate, but may get longer, 
costlier
New Delhi:


Flying From Delhi Not Affected
Qatar may be cut off from rest of the Gulf countries but flights between India and Doha will operate as usual for now. The travel time, however, is likely increase with countries like Saudi Arabia and Bahrain closing their airspace for flights from Qatar.“The UAE has told Indian carriers that their aircraft overflying or crossing its airspace on India-Doha route must take its permission before doing so. If they allow, it is okay . Otherwise flights from places other than north India like Mumbai and the south will have to take a much longer route: fly north over the Arabian Sea, enter Iran and then fly straight over the Persian Gulf to Doha. The same route will have to be taken on return if the UAE denies permission,“ said the operations head of an Indian airline.
Three Indian carriers -Jet Airways, AI Express and IndiGo -and Qatar Airways (QA) fly between India and Doha. All QA flights between India and Doha will also be affected. Only flights from Delhi will not be affected as they will fly over Pakistan and then enter Iran. Indian carriers fly only between India and Doha and do not fly beyond from there.
For long haul passengers on QA, direct routing of flights between Doha and Europe and North America -the two most popular destinations for Indians choosing the airline -may have to be changed that may lead to an increase in flying time. With UAE banning Qatari-registered planes from its airspace, flights between the West and Doha may have to take a longer route via Iran.
Senior pilots estimate flying time could increase by anywhere up to two hours for those going west and up to an hour for flights to and from west and south India. “Flying more will mean fuelling more, which in turn will lead to fares going up,“ said an official. Qatar Airways did not comment on this issue till the time of this report going to press.
The other big worry for Indian carriers is that Bahrain is the alternate airport for their aircraft headed to Doha. Now if an Indian aircraft has to divert for any reason, it will not be able to fly direct to Qatar from Bahrain. “We are making plans to fly to some nearby place in Iran and then approach Doha from there. Flying a diverted aircraft all the way back to India is not a viable option,“ said an Indian flight route planner.
QA is one of the most popular airlines for Indians travelling abroad. Last year, it was at the sixth spot in terms of standalone airlines flying people in and out of India. Over 21 lakh people to and from India flew QA in 2016, with almost 80% of them transiting via Doha.
The Doha route changes will impact Indian travellers in a big way , especially in the ongoing peak summer travel season. Among Indian carriers, Jet Airways has five daily flights between Doha and Delhi, Mumbai, Cochin, Trivandrum and Calicut. Air India Express has a daily flight between Doha and Calicut; four times a week from Mumbai and thrice weekly from Mangalore.IndiGo has a daily flight from Delhi and Mumbai and plans to start from Kozhikode in July .QA lists 13 Indian cities as destinations, including all the metros.
“People travelling to Qatar on QA are mostly transit passengers to Europe and the US.Travellers on Indian carriers are mostly those working there,“ said a senior airline official.
Soon after Saudi Arabia, Bahrain, Egypt and the UAE broke off all ties with Qatar on Monday , at least six Gulf-based airlines said they will no longer fly to that country . These airlines include Emirates, Etihad, Air Arabia, Fly Dubai, Saudia and Gulf Air. Qatar Airways also will not be able to fly to places whose airspace has been shut for its flights. So Indians who had booked tickets for internal travel from Doha will also be impacted.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Kiran Bedi is not fit to be LG: Puducherry CM on 
Twitter
Puducherry:


Accuses Her Of Violating Oath Of Office
With the tussle between the Congress government led by chief minister V Narayanasamy and lt governor Kiran Bedi escalating with each passing day , Narayanasamy on Monday took to twitter to counter the charges levelled by Bedi. In a series of tweets, Narayanasamy declared that he had brought to the notice of the Prime Minister and Union home minister that Bedi was `not fit to be a lt governor'.“Now I am going to public to expose lt governor's illegal and unconstitutional activities,“ he said in a tweet accusing Bedi of using social media to reveal confidential information violating the oath of office and secrecy she undertook while assuming office as lt governor.
“She has taken oath but she is going beyond all limits. Under the Constitution and the Business Rules the elected government has got the power as soon as it assumes power.Branding bureaucrats, ministers and MLAs as corrupt is ve ry unbecoming of her. She is not helping the state in development. Every official act of the govern ment .is questioned by her. She is interfering in the day-to-day administration of the government. She is not allowing transfer of officers and is acting against the interest of the state. I talked to her several times. But she is not correcting herself,“ Narayanasamy said in a series of tweets.
He said Bedi has been abusing officers, ministers and MLAs. “Therefore her act is unbecoming of lt governor.She does not understand that Puducherry has separate identity where elected government has got all the powers,“ he said.
Narayanasamy said Bedi has been behaving in `an autocratic manner violating norms' and declared that she has become `a burden for the State government'. Stating that she approved proposal to hike the pension of the freedom fighters only after a `prolonged fight' he said she has not been allowing overall development of the state. He charged that Bedi did not allow port development and resuming of flight services in Puducherry . “She is returning all the files relating to welfare schemes,“ he said.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Scrap `illegal' recruitment in vet univ, ex-prof 
urges HC
Chennai:
TIMES NEWS NETWORK


A recently retired professor of Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) has dragged the university to court, seeking to cancel the `fraudulent' recruitment of 49 assistant professors pursuant to a job notification dated November 26, 2016.The first bench comprising Chief Justice Indira Banerjee and Justice M Sundar, before which the PIL filed by Dr P I Ganesan, who was a retired director of Centre for Animal Health Studies at Madavaram campus of TANUVAS, came up for hearing on Monday , issued notice to chairman of selection committee, besides viceand registrar of TANUVAS, and animal husband secretary of the state government. The case has now been posted to June 9.
The petitioner has sought declaration of the entire selection process for recruit ment of 49 posts of assistant professors in various departments of university , as illegal, unconstitutional, null and void.
According to the impugned advertisement, there will be 20 marks for interview, while 30 marks will be allotted for assessment of domain knowledge and teaching skills of the applicant.Fifteen marks were earmarked for awards medals, professional activities (8), fellowship, experience (5), extra-curricular activities (2). The remaining 15 marks were earmarked for teaching skills -oral (10) and written communication skills (5).
Therefore, along with the interview marks of 20, a total of 35 marks were entrusted with the selection committee headed by the vice-chancellor. In his petition, Dr Ganesan said having 35 marks for interview would not ensure transparent recruitment, and instead would lead to nepotism. It is also violative of a Supreme Court judgment, he said, adding the apex court had many times ordered that maximum marks for interview should not exceed 15%.
Dr Ganesan said though he himself had been nominated as a member of the selection committee for the conduct of interview, he realised the entire selection process was bogus. He said the selection was completed in his absence the list of selected candidates finalised arbitrarily.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Nominee for Anna Univ VC search panel selected
Chennai:
TIMES NEWS NETWORK


The syndicate of Anna University on Monday nominated former IIT-Kanpur director K Anantha Padmanabhan as its nominee on a three-member search panel to shortlist candidates for the post of vice-chancellor of the university .Governor and chancellor C Vidyasagar Rao had earlier nominated former Chief Justice of India R M Lodha as his nominee on a new search panel for the university head.Lodha will also be convenor of the panel.
Padmanabhan, a professor who was associated with Anna University's mechanical engineering department.He has been a full-time professor at the university from November 2015 and has co-authored three books on superplastics.
Rao had on May 27 rejected three candidates the earlier panel had shortlisted for the post of Anna University VC, stating that he felt they were not qualified enough to head the country's largest university for technical education.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Top 50 univs to get full autonomy: UGC
Chennai:


In a path-breaking move, the University Grants Commission has decided to make the top 50 ranked varsities or those with an NAAC score of 3.5 completely autonomous, with freedom to start new courses departments without its approval. They can seek and get funding from central private agencies, appoint qualified foreign faculty up to 20% of their strength or admit foreign students up to 20%, fixing their own fee. As per the new UGC regulations, universities in the top 50 of the National Institute Ranking Framework (NIRF) list for two consecutive years or having an National Assessment and Accreditation Council score of 3.5 or above are in category 1, with complete autonomy.Those with a 3.01-3.49 NAAC score or a 51-100 NIRF ranking for two consecutive years will be in category 2 with limited autonomy . Those not in these two categories will have no autonomy . A varsity with a poor rating will be warned that if it doesn't buck up in five years it will be moved to category 3.The draft regulations will be on the UGC website, for feedback from stakeholders, till June 15.
“UGC wants to give greater autonomy to universities, especially in starting courses, hiring and admitting students, but only to the best institutes. Currently there is no grading mechanism to decide this,“ said an academic who was part of the panel that framed the regulations. Getting permission for foreign academic collaborations will be easier for category 1 institutions, he said.
As per NIRF 2017, Anna University , Tamil Nadu Agricultural University and Bharathiar University are the only state universities in category 1 along with deemed universities like Amrita, VIT and SASTRA. University of Madras, ranked 64, is in category 2.
Currently, universities struggle for ministry of external affairs clearing for hiring foreign faculty or even calling them for a seminar, he said.“There are foreign exchange regulations and UGC has to be kept in the loop. This will now be relaxed.“
Universities are always under the bureaucratic lens of UGC committees for the prestigious 12B status to get central grants or other external reviews. Now, category 1 varsities can just send a report in review format to UGC and category 2 universities can do it through an external peer review mechanism.
Grading is expected to bring about a healthy competition among universities for research funding from public as well as private agencies.
4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை

பதிவு செய்த நாள்06ஜூன்2017 00:04

சென்னை: 'தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, அன்னை மருத்துவக்
கல்லுாரி; சென்னை மாதா மருத்துவக் கல்லுாரி மற்றும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரிகளில், போதுமான வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என, புகார் எழுந்தது. கடந்த, 2016ல், இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
'ஓராண்டுக்குள் வசதிகளை செய்ய வேண்டும்' என்ற நிபந்தனையுடன், 2016 - 17ல், எம்.பி.பி.எஸ்., படிப்பில் தலா, 150 மாணவர்களைச் சேர்க்க, அனுமதி அளித்தனர். ஆனால், நிபந்தனை காலத்திற்குள் வசதிகளை மேம்படுத்தவில்லை. அதனால், எம்.சி.ஐ., பரிந்துரைப்படி, மூன்று மருத்துவக் கல்லுாரிகளுக்கும், 2017 - 18, 2018 - 19 என, இரு கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.அதேபோல, கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரிக்கு, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அந்தந்த கல்லுாரிகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அனுப்பியுள்ள கடிதம்:

போதுமான கட்டுமான வசதிகள் இல்லாததால், எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு வைப்பு நிதியாக, 2 கோடி ரூபாயை, வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பதிவு செய்த நாள்05ஜூன்2017 23:23

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.வைகாசி மாத பவுர்ணமி 8ம் தேதி மாலை 5:23 மணிக்கு துவங்குகிறது. மறுநாள் இரவு 7:31 மணி வரை உள்ளதால் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சக்தி பீடங்களை தரிசிக்க ஆன்மிக சிறப்பு ரயில்
பதிவு செய்த நாள்05ஜூன்2017 21:45

கோவை: சக்தி பீடங்களை தரிசிக்கும் விதமாக, 12ம் தேதி இயக்கப்பட உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவுகள் ரவேற்கப்படுகின்றன. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனும், ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இச்சிறப்பு ரயில்களில், பல்வேறு ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். வரும், 12ம் தேதி, வடமாநில சக்தி பீடங்களை தரிசிக்க, ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக அலகாபாத் சென்றடைகிறது. கோவையைச் சேர்ந்தவர்கள், ஈரோட்டில் இருந்து பயணிக்கலாம்.
அலகாபாத்தில் அலோப்பிதேவி, காசி விசாலாட்சி, கயா மங்களாகவுரி தேவி, அசாமில் உள்ள காமாக்யா தேவி, கோல்கட்டாவில் உள்ள காளிகாதேவி, புரியில் உள்ள விமலாதேவி கோவில்களை தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், காசியில் கங்கா ஸ்நானம், கயாவில் முன்னோருக்கு மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர், அன்ன பூரணி, புரி ஜெகந்நாதர் மற்றும் கோனார்க் சூரியனாரை யும் தரிக்கலாம்.

மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 11 ஆயிரத்து, 775 ரூபாய் கட்டணம். இதில், ஸ்லீப்பர் ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி அடங்கும். 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, கோவை ரயில்வே ஸ்டேஷனை, 90031 40655 என்ற மொபைல் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

'ஸ்வீட்' எடுங்க... கொண்டாடுங்க : மகிழ்ச்சி மழையில் இந்தியா, மண்ணைக் கவ்வியது பாக்.,


dinamalar

பர்மிங்காம்: மழை அடிக்கடி குறுக்கிட்ட சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய வீரர்கள் சாதித்துக் காட்டினர். வான் மழையை மிஞ்சிய கேப்டன் கோஹ்லி, யுவராஜ் சிங் ரன் மழை பொழிந்தனர். இவர்களது அபார ஆட்டம் கைகொடுக்க, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மீண்டும் 'நமத்து போன பட்டாசாக' சொதப்பிய பாகிஸ்தான் அணி 'சரண்டர்' ஆனது. இதனால் வழக்கமான பரபரப்பு இல்லாமல், போட்டி 'உப்புசப்பின்றி' முடிந்தது.இங்கிலாந்து மற்றும் வேல்சில் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று பர்மிங்காமில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

அஷ்வின் இல்லை

ஆடுகளம் 'வேகத்துக்கு' ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் நட்சத்திர 'ஸ்பின்னர்' அஷ்வின் நீக்கப்பட்டார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நல்ல அடித்தளம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இந்திய அணி 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் 50 நிமிடங்கள் தாமதமானது. பின் ஆட்டம் துவங்கியதும் இந்திய வீரர்கள் ரன் வேகத்தை அதிகரித்தனர். ஷதாப் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். தவானும் அரைசதம் கடக்க, போட்டியில் சூடு பிடித்தது. ஷதாப் 'சுழலில்' தவான்(68) அவுட்டானார்.

48 ஓவர் போட்டி

இந்திய அணி 33.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, 48 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. ஷதாப் பந்தை தட்டி விட்ட கோஹ்லி வீணாக ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுபுறத்தில் இருந்து ஓடி வந்த ரோகித் சர்மா 'டைவ்' அடித்து 'கிரீசை' தொட்டார். இது தொடர்பாக 'டிவி' அம்பயரிடம் சந்தேகம் கேட்கப்பட்டது. 'ரீப்ளே'வில் பேட், 'கிரீசில்' இருந்து லேசாக விலகி இருப்பது தெரிய வர, சர்ச்சைக்குரிய முறையில் ரோகித் சர்மா(91) ரன் அவுட்டானார்.

யுவராஜ் அரைசதம்

கடைசி கட்டத்தில் யுவராஜ், கோஹ்லி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களை ஓட ஓட 'அடித்தனர்'. ஹசன் அலி ஓவரில் யுவராஜ் ஒரு பவுண்டரி, கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. யுவராஜ்(53) எல்.பி.டபிள்யு., ஆனார்.

கோஹ்லி 'ஸ்பெஷல்'

போகப் போக கோஹ்லி யின் 'ஸ்பெஷல்' ஆட்டத்தை காண முடிந்தது. ஹசன் அலி ஓவரில் நின்ற இடத்தில் இருந்தே அழகாக பவுண்டரி அடித்தார். பின் ஒரு அற்புத சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யாவும் ரன் மழையில் நனைந்தார். இவர், இமாத் வாசிம் ஓவரில் வரிசையாக மூன்று சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தில் கோஹ்லியும் ஒரு பவுண்டரி அடிக்க, இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 4 ஓவரில் 72 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்திய அணி 48 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. கோஹ்லி 81(68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாண்ட்யா(20) அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் மடமட

பின் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 48 ஓவரில் 324 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட, 41 ஓவரில் 289 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. இந்திய 'வேகங்களிடம்' ஷேசாத்(12), பாபர்(8) சரணடைந்தனர். அரைசதம் எட்டிய நிலையில் அசார் அலி(50) நடையை கட்டினார். மற்ற பேட்ஸ்மேன்களும் தாக்குப்பிடிக்கவில்லை ஜடேஜாவின் துல்லிய 'த்ரோ'வில் சோயப் மாலிக்(15) ரன் அவுட்டானார். ஹபீஸ்(33) பெரிதாக சோபிக்கவில்லை.பாகிஸ்தான் அணி 33.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

'டாப்-ஆர்டர்' அசத்தல்

'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களான ரோகித் (91), தவான் (68), கோஹ்லி (81*), யுவராஜ் (53) அரைசதம் கடந்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், 3வது முறையாக இந்திய அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்த சம்பவம் அரங்கேறியது.


பவுலிங்கில் ஏமாற்றிய பாகிஸ்தானின் வகாப் ரியாஸ், 8.4 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 87 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் வழங்கிய பவுலரானார். இதற்கு முன், ஜிம்பாப்வே அணியின் பன்யாங் கரா (86 ரன், எதிர்-இங்கிலாந்து, 2004) ரன் வள்ளலாக இருந்தார். இவர்களை அடுத்து, இலங்கையின் மலிங்கா (85 ரன், எதிர்-நியூசிலாந்து, 2009), தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (83 ரன், எதிர்-இந்தியா, 2013) உள்ளனர்.


நேற்று, 91 ரன்கள் எடுத்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2012ல் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 68 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித், 5 அரைசதம் உட்பட 537 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்சமாக 3வது முறையாக ஒரு இன்னிங்சில் 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்கா (127 ரன், முதல் விக்கெட், 2013), வெஸ்ட் இண்டீஸ் (101 ரன், முதல் விக்கெட், 2013) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்தது.இவர்களை அடுத்து, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் - சந்தர்பால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் - ஸ்மித் ஜோடிகள் தலா 2 முறை இந்த இலக்கை எட்டின.

பேட்டிங்கில்அசத்திய இந்திய அணி 319 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தது. இதற்கு முன், 2009ல் செஞ்சுரியனில் நடந்த போட்டியில் 248 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது. * தவிர இது, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் 2வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2013ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 331 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி 2வது இடம் பிடித்தது. இதுவரை 6 இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது. முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-சந்தர்பால் ஜோடி (635 ரன், 9 இன்னிங்ஸ்) உள்ளது.
பாக்., பவுலர்கள் காயம்

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஆமிர், வகாப் ரியாஸ் காயம் காரணமாக பாதியில் 'பெவிலியன்' திரும்பினர்.

பீல்டிங் சொதப்பல்

பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. ஷதாப் கான் வீசிய 38.4வது ஓவரில் யுவராஜ் சிங் துாக்கி அடித்த பந்தை ஹசன் அலி நழுவவிட்டார். அப்போது 8 ரன்கள் மட்டும் எடுத்திருந்த யுவராஜ், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரைசதம் கடந்தார். இதேபோல வகாப் ரியாஸ் வீசிய 43.6வது ஓவரில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை பகார் ஜமான் கோட்டைவிட்டார்.
கோடை விடுமுறை முடிவு; பள்ளிகள் நாளை(ஜூன் 7) திறப்பு

பதிவு செய்த நாள்06ஜூன்2017 04:48




சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை(ஜூன் 7) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன், 1ல் பள்ளிகள் திறப்பதாக

அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால், விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்

பதிவு செய்த நாள்05ஜூன்
2017
21:49



தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை இழந்து, மாணவன் தவிக்கிறான். உயர்கல்விக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது, யார் நடவடிக்கை எடுப்பது என, கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி மாணவன், சரத்குமார். கணக்கு பதிவியல் பாடத்தில், மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் பெற்றார்.
அதை ஆய்வு செய்த போது, கூட்டல் பிழையால், 60 மதிப்பெண்கள் விடுபட்டிருப்பது தெரிய வந்தது. மாணவனின் விடைத் தாள், பாரதி என்ற ஆசிரியையால் திருத்தப்பட்டு உள்ளது. இவர், விடைத்தாளின் முன்பக்கத்தில், மதிப்பெண்ணை பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் குறிப்பிட்டு கூட்டியதில், 60 மதிப்பெண்களை தவற விட்டுள்ளார். கூட்டல் பிரச்னை வந்ததால் தான், வினா மற்றும் பக்க வாரியாக தனித்தனி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இரு பட்டியலிலும் கூட்டலில் வேறுபாடு இருந்தால், மறு ஆய்வு செய்து, மதிப்பெண் இறுதி செய்யப்படும். 

சரத்குமாரின் விடைத்தாளில், இரு வகை மதிப்பெண் கூட்டு தொகையும், 200 வருகிறது. ஆனால், 140 என, குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும், 30 பக்கங்களில் உள்ள மதிப்பெண்களை கூட்டாமல், 12 பக்கங்களில் உள்ளவற்றை மட்டுமே குறிப்பிட்டு, 140 என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்க மதிப்பெண்களை கூட்டினால், 200 மதிப்பெண் வருகிறது. கூட்டு தொகையை ஆய்வு செய்த துறை அதிகாரியும், தலைமை திருத்துனரும், மதிப்பெண் ஆய்வு அதிகாரியும், பிழையை கண்டு கொள்ளாமல், கையெழுத்து போட்டுள்ளனர். பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்தாலே, எத்தனையோ உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோகும். 60 மதிப்பெண்களை, 'அபேஸ்' செய்த தேர்வுத் துறையையும், கல்வித் துறை அதிகாரிகளையும், ஆசிரியரையும் என்ன செய்வது என, மாணவர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்லுாரி 'சீட்' கிடைக்குமா? : தற்போதைய நிலையில், 1,098 மதிப்பெண் எடுத்துள்ள மாணவன் சரத்குமார், முக்கிய கல்லுாரிகளில், பி.காம்., இடம் கிடைக்காமல் தவித்து வருகிறான். விடுபட்ட, ௬௦ மதிப்பெண்கள் கிடைத்தால், மிக எளிதாக இடம் கிடைக்கும். ஆனால், மறுகூட்டல் முடிந்து, திருத்திய மதிப்பெண் வரும் போது, மாணவன் விரும்பிய கல்லுாரியில் இடம் காலியாக இருக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.
குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம்



குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம் அடிப்படை வசதிகளும் இல்லை

ஜூன் 05, 2017, 04:00 AM

மானாமதுரை,

மானாமதுரை ரெயில் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்றும், அடிப்படை வசதிகள் இன்றியும் உள்ளது. இதனால் ரெயில் நிலையம் வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.ரெயில் நிலையம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையமாக மானாமதுரை ரெயில் நிலையம் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்திற்கு ரெயில் மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் மானாமதுரை ரெயில் நிலையம் வந்து, அதன்பிறகே ராமேசுவரம் செல்ல முடியும். இதனால் மானாமதுரை வழியாக தினசரி 10–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ஆனால் தற்போது மானாமதுரை ரெயில் நிலையத்தை எந்த ரெயில்வே அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஒரு பக்கம் குப்பைகள் குவிந்து சுகாதாரம் இன்றியும், மறுமக்கம் முதல் நடைமேடையில் உள்ள பயணிகள் கழிப்பறை மூடப்பட்டும், குடிநீர் குழாய்கள் தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளாகவும் உள்ளன. இதனால் மானாமதுரை ரெயில் நிலையம் வரும் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.குப்பைகள்

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ரெயில் நிலையத்தில் சுகாதார பணிகளை ரெயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டன. மேலும் இங்கு பணியாற்றிய சுகாதார பணியாளர்களை கூண்டோடு மாற்றம் செய்து, மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு அனுப்பிவிட்டனர். இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் குப்பைகள் அள்ளப்படாததால் நடைமேடை, தண்டவாளம் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வராமல் அதனை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது குப்பைகளால் ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அடிப்படை வசதிகள் இல்லை

இதேபோல் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ஒரேயொரு பயணிகள் கழிப்பறை இருந்தது. அதனையும் தற்போது பூட்டுப்போட்டு மூடிவிட்டனர். இதனால் பெண்கள், முதியோர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக காலையில் இயக்க படும் விருதுநகர், திருச்சி டொமோ ரெயிலில் கழிப்பறை வசதிகள் கிடையாது என்பதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் கழிப்பறை மூடப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுதொடர்பாக ரெயில் நிர்வாக அதிகாரிகள் சிலர் கூறும்போது, சுத்தமாக வருமானம் இல்லாமல் இருப்பதால் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனாலேயே ரெயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக கூறினார்.

எனவே மானாமதுரை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும், ரெயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, June 5, 2017

தங்கும் அறையே முன்கூட்டியே காலி செய்தால் பணம் திரும்ப தரப்படும் : திருப்பதி தேவஸ்தானம்

TNN | Updated: Jun 4, 2017, 04:39PM IST




திருப்பதி : தங்கும் அறையை முன்கூட்டியே காலி செய்தால் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பணம் திரும்பதரப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிகமுக்கியமான கோவில் ஆந்திராவில் அமைத்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு தரிசனம் செய்ய வரும் மக்கள் தங்க திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான விடுதிகளை கட்டியுள்ளது.

இந்த தேவஸ்தான விடுதிகளில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலுக்கு வர இயலாமல் போகும் பக்தர்கள், அல்லது தங்களது வருகையை தள்ளிப்போடும் பக்தர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், தங்கும் அறைகள் எடுத்து தங்குவோர் 12 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 50 சதவீதமும், 6 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 25 சதவீதமும் பணம் திருப்பி தரப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Kerala CM writes to PM Modi; urges to ensure safety of Indians in Qatar

Rajiv G| TNN | Jun 5, 2017, 09.12 PM IST

THIRUVANANTHAPURAM: Chief minister Pinarayi Vijayan has written to Prime Minister Narendra Modi and foreign minister Sushma Swaraj urging to take effective steps to ensure the Indians who are working in Qatar.

He said that there are 6.5 lakh Indians in Qatar and of which three lakhs are Keralites. With the countries in the middle-east cutting off diplomatic ties with Qatar, the chief minister said the Indians working there are more concerned.

It is learnt that the countries have also cancelled all the flights to the country. Hence the Centre should take urgent steps to ensure protection of the Indian there and necessary instructions should be given to the embassy in Doha, said the chief minister.

Meanwhile, the NORAK ROOTS have made it clear that there was no need for panic since no restrictions have been imposed on Qatar so far. ``The only worry will be that the flight services have been cancelled by four countries to Qatar. Otherwise the people especially the Indians working there will have no trouble,'' said B Gopakumaran Nair, general manager, NORKA.

He said that so far Saudi Arabia, UAE, Bahrian and Egypt have asked all the Qatar nationals to move out from their countries. They have also cancelled the flights to and from Qatar. Hence if there are any Indians working under Qatar nationals as their sponsors, they will be having trouble. Otherwise the people in Qatar are safe.

Being the month of Ramzan, the people at Qatar are worried that the new developments will escalate the prices of essential commodities. Qatar is highly depended on Saudi Arabia for essential commodities and hence this would be affecting the supply of it.

The NORKA officials said that the developments in the middle-east countries are being closely watched and if there is any need to interfere then it would seek the support of the Centre. ``At present there is no need for any panic as the situation is safe for the Indians there,'' said the general manager.
Six-month time to probe corruption cases against government employeesPTI | Updated: Jun 5, 2017, 06.57 PM IST

HIGHLIGHTS

Many cases against government staffs are pending for quite a long time
New rule has made it mandatory to finish all such cases within six months
Relaxations will be permitted on valid grounds

NEW DELHI: Changing an over 50-year-old rule, the government has set a deadline of six months to complete probe in corruption cases+ involving its employees.

The decision has been taken to speed up the investigation in such cases, most of them pending for quite a long time.

The department of personnel and training (DoPT) has amended Central Civil Services (Classification, Control and Appeal) Rules, 1965, and decided a timeline for critical stages of investigation and inquiry proceedings.

The Inquiring Authority should conclude the inquiry and submit its report within a period of six months, says the amended rules.

However, an extension for a period not exceeding six months at a time may be allowed for any good and sufficient reason to be recorded in writing by the disciplinary authority, it said.

Earlier, there was no such time frame to complete an enquiry.

The disciplinary authority shall deliver to a government servant, accused of irregularity and corruption, a copy of the articles of charge, the statement of the imputations of misconduct or misbehaviour and a list of documents and witnesses by which each article or charges is proposed to be sustained, the new rules said.

On receipt of such articles of charge, the government servant shall be required to submit his written statement of defence, if he so desires, and also state whether he desires to be heard in person, within a period of 15 days, it said.

The time limit can, however, be extended for a period not exceeding fifteen days. But under no circumstances, the extension of time for filing written statement of defence shall exceed forty-five days from the date of receipt of articles of charge, the rules said.

At present, there is no time limit for submission of the employee's statement of defence.

The new rules are applicable to all category of employees excluding those in all-India services--Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS) and Indian Forest Service (IFoS)-- and a few other categories of officers.

The Central Vigilance Commission (CVC), in a directive, had last year expressed serious concern over delay in finalising corruption cases and asked all departments to complete these inquiries within a maximum period of six months to keep away "nothing will change" notion associated with governance.

The directive comes after the commission noted that administrative authorities are not adhering to the time- schedule prescribed for completion of disciplinary proceedings.
காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

DINAKARAN

2017-06-05@ 19:25:11

சிவகங்கை: காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிற மொழி நீட் வினாத்தாளை தமிழாக்கம் செய்ய உத்தரவு !
June 5, 2017



நீட் தேர்வில் பிறமொழி கேள்விகளை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபா என்பவர் நீட் தேர்வு தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தர வரிசை சீராக இருக்காது என்பதால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் குஜராத்தி, இந்தி, மராத்தி வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிங்கப்பூரர்களுக்கு புதிய ஆறு மாத ஆஸ்திரேலிய விசா

Tamil Murasu

ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி செல்லும் சிங்கப்பூரர்களுக்குப் புதிய ஆறு மாத விசா கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியப் பிரதமர் மேல்கம் டர்ன்புல் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் முதல் நாளான நேற்றைய தினத்தன்று புதிய விசா குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. புதிய விசாவை எடுக்கும் சிங்கப்பூரர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒவ் வொரு முறையும் அங்கு மூன்று மாதங்கள் வரை இருக்கலாம்.
இந்த விசா சிங்கப்பூரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி செல்லும் சிங்கப்பூரர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து புதிய விசாவுக்காக மீண்டும் விண் ணப்பம் செய்யவேண்டிய நிலை இருக்காது. அதுமட்டுமல்லாது, 30 வயதுக் கும் குறைவான சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியாவில் ஓராண்டு வரை விடுமுறை மேற்கொண்டு கொண்டே வேலை செய்ய புதிய விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலை, விடுமுறை விசா திட்டம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ் வொரு நாட்டிலிருந்தும் 500 பேருக்கு விசா வழங்கப்படும்.

வீட்டுக்குள் ‘மூர்க்கப் பூனை’; போலிசை அழைத்த ஆடவர்

பொங்கோலில் உள்ள வீடு ஒன்றுக்குள் பின்னிரவு வேளையில் கறுப்புப் பூனை ஒன்று நுழைந்தது. அதை வெளியேற்ற முடியாமல் தவித்த அந்த வீட்டின் உரிமையாளர், போலிசுக்கு உதவி நாடி அழைப்பு விடுத்திருந்தார். பின்னிரவு 1 மணியளவில் திரு ஹர்ரிஸ் அபு பக்கரின் வீட்டுக்குள் புகுந்த பூனையை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெளியேற்ற முயன்றும் அது வெளியேறவில்லை. மாறாக அப்பூனை பயங்கரமாக கத்திக்- கொண்டு மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதுடன் தற்காப்புக்- காக தனது கால்களால் கீறிக் கொண்டே இருந்தது என்று திரு அபு பக்கர் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதி விட்டு இருந்தார்.
அந்தப் பூனையை வெளியேற்ற முதலில் திரு அபு பக்கர் நகர மன்றத்துடன் தொடர்புகொண்டார். நகர மன்றம் அவரை விலங்குவதை தடுப்பு அமைப்பிடம் கைகாட்ட ஆனால் அந்த அமைப்போ அவரைப் போலி சிடம் கை காட்டிவிட்டது. அதனால் அவர் போலிசின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு ஓர் ஆம்பு லன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னிரவு 2.12 மணியளவில் தகவல் கிடைத்து திரு அபு பக்கரின் வீட்டுக்குச் சென்ற போலிசார் அந்தப் பூனையைப் பிடித்து வீட்டுக்கு வெளியே கொண்டு சென்றனர். எனினும் அதன் பிறகு பூனை தப்பித்துச் சென்று விட்டது என்று தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆதார் எண்ணை யாரிடமும் சொல்லாதீர்கள்; ஏன் தெரியுமா?
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (13:55 IST)

ஆதார் எண் விபரம் குறித்து போனில் யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. ஒருவரின் வங்கி தகவல்களை திருடி அதன்மூலம் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம் மூலம் நம் டெபிட் கார்டு தகவல்களை திருடிக் கொண்டு பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

தற்போது அனைத்து வங்கிகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து ஆதார் எண் தகவல்களை கொண்டு பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே சைபர் கிரைம் போலீஸார் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தொலைப்பேசி மூலம் வங்கியில் பேசுவதாக கூறி உங்கள் ஆதார் எண் குறித்து கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை இதுகுறித்து யாரும் ஏமாந்துவிட்டதாக புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இதுபோன்ற சம்பங்கள் நடைப்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பரோல் கோரி சசிகலா மனு: சிறை நிர்வாகம் நிராகரிப்பு

இரா.வினோத்

வி.கே.சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளார் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார். ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
இதை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் ஜெயராம் உறுதிப்படுத்தினார்.

ஏற்கெனவே, சசிகலா தனது அக்கா மகன் மகாதேவன் மறைவை ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்த பரோல் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சிறை சென்ற பின் இதுவரை இரண்டு முறை பரோல் மனு தாக்கல் செய்தார். இரண்டு முறையும் பரோல் நிராகரிப்பட்டிருக்கிறது.
வெற்றுக் கூச்சலை பொருட்படுத்த மாட்டேன்: ஆளுநர் கிரண்பேடி

By -பா. சுஜித்குமார் | Published on : 05th June 2017 08:00 PM |



புதுச்சேரி: வெற்றுக்கூச்சலை நான் பொருட்படுத்த மாட்டேன் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

ஆளுநருக்கும், ஆளும் தரப்புக்கும் இடையே புதுவையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் முதல்வர் நாராயணசாமிக்கு 32 கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதனால் கொதிப்புற்ற முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவைியல் பேசுகையில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படக்கூடாது. இல்லையென்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் வகையில் ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தனது கட்செவி அஞ்சலில் கூறியுளளதாவது: நான் வெற்றுக் கூச்சலை எல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நிறைய கூச்சல் எழுப்பப்படுகிறது. கூச்சலை ஏன் எழுப்புகின்றனர் எனத்தெரியும்.

புதுச்சேரிக்கும், அதன் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனிலும் தான் எனக்கு அக்கறை உள்ளது. புதுச்சேரியின் நலன்களை பேணவும், காக்கவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.
தினகரன் எங்களுக்குத் தேவையில்லை.. பட்டுன்னு கதவை இழுத்துச் சாத்திய ஜெயக்குமார்

Published: Monday, June 5, 2017, 16:56 [IST]

சென்னை: சசிகலா குடும்ப தயவு தேவையில்லை. தினகரன் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என்றும் எடப்பாடி அணியைச் சேர்ந்த நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், சசிகலா அணி என அதிமுக பிரிந்துள்ள நிலையில் தற்போது எடப்பாடி அணி, தினகரன் அணி என சில்லு சில்லாக சிதறியுள்ளது.




திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், கட்சியை விட்டு தன்னை யாரும் நீக்க முடியாது என்றும் தான் கட்சிப்பணியில் நீடிப்பதாகவும் கூறினார். கட்சி ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற நினைப்பதை அறிந்த ஈபிஎஸ் அணியினர் ஒன்றிணைந்து இன்று ஆலோசனை நடத்தினர்.

தினகரன் காலையில் பெங்களூரு கிளம்பி சென்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசித்தனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஏப்ரல் 17ஆம் தேதி நாங்கள் என்ன முடிவு எடுத்தோமோ அதில் உறுதியாக இருக்கிறோம்.

யாருடைய தயவும் இன்றி ஜெயலலிதா ஆசியுடன் அவருடைய வழிகாட்டுதலுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

ஆக கட்சியிலும், ஆட்சியிலும் இடமில்லை என்று டிடிவி தினகரனுக்கு கதவை சாத்திவிட்டனர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர். இதனால் அதிமுக மேலும் பல அணிகளாக சிதறியுள்ளது. தினகரன் பெங்களூருவில் இருந்து வந்த பின்னர் தெரியும் யார் யார் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள் என்று.

சபாஷ்.. இரு கண்களையும் தானம் செய்தார் நடிகர் விஜய்சேதுபதி!!
By: Essaki

Updated: Monday, June 5, 2017, 18:59 [IST]

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் கே.கே.நகரில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் இரண்டாவது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.



இதில் பேசிய கே.வி.ஆனந்த், 'திரைப்படத்துறைக்கு கேமரா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதைப் போன்று நமது உடலின் முக்கியமான உறுப்பு கண். கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது. ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் மிகச் சிறந்த பண்பு' என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், 'நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர். இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

நம் உடலின் முக்கிய அங்கமாக்த் திகழும் கண்ணைக் காக்கவும். இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்' என்றார்.
செல்போனுக்கு சிக்னல் கிடைக்கல... ஏணி போட்டு மரத்தின் மீது ஏறி பேசிய மத்திய அமைச்சர்!

By: Kalai Mathi...oneindia

Updated: Monday, June 5, 2017, 12:59 [IST]

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தனது சொந்த தொகுதியில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ஏணியை போட்டு மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் தான் அமைச்சரின் சொந்த தொகுதி உள்ளதாக கேள்வி எழுந்துள்ளது.

மத்திய இணைய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றார் அமைச்சர்.






அந்த நேரத்தில் அவரது செல்போன் திடீரென சினுங்கவே பேசத் தொடங்கியுள்ளார். ஆனால் முறையாக சிக்னல் கிடைக்காததால் செய்வறியாது திகைத்த அவர் மரத்தின் மீது ஏணிணை போட்டு ஏறி பேசியுள்ளார்.

அமைச்சர் மரத்தின் மீது ஏறி பேசியதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். சொந்த தொகுதியிலேயே சிக்னல் கிடைக்காததால் நொந்து போன அமைச்சர் என்ன இது என சலித்துக்கொண்டாராம்.

ராஜஸ்தான் மாவட்டத்தின் பல கிராமங்கள் செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் செல்போனில் எப்படி ட்ரான்செக்ஷன் செய்வது டிஜிட்டல் இந்தியா எப்படி சாத்தியம் என்றம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
Sunday, 4 June 2017

அரசு மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 22-ஆக உயர்வு.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 2,750 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 412 இடங்கள் (15 சதவீதம்) போக, 2,338 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டையில் கட்டி முடிக்கப் பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை வரும் 9-ம் தேதி முதல்வர் திறந்துவைக்கிறார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவி டம் கேட்டபோது, “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்த கல்வி ஆண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன் சில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 22 இடங்கள் (15 சதவீதம்) போக, 128 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்கிறது” என்றார்.

Posted by kalviseithi.net
‘கொஞ்சம் மாற்றிச் சிந்திக்கலாமே’’ - பெண்களின் வெற்றிக்கான வழிகள்!
ஶ்ரீதேவி.கே



‘சிஸ்டம் சரியில்ல...’ தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் இந்த வார்த்தை பாடாய்ப்படுகிறது. பால் பேதமின்றி இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எப்போதும் மனிதர்களாக இருப்பதுதான் அவர்களுக்கான இயல்பும் மகிழ்வும். பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும்.

தன்னை அறிதல்:
நம்மால் வளர முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்ல என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்றவேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள பிளஸ், மைனஸ் விஷயங்களைப் பெண்கள் மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை விட்டு விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்யவும்.

எதார்த்த பார்வை:
பிரச்னைகளை அணுகுவதில் ஆண்களைவிடப் பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்னைக்கான வலியை அதிகரிக்கச் செய்கிறது. பெண் தன் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் அவர்கள் ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரைத் தருவதற்கான கருவறையே பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக்கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. வலிகளே பெண்களுக்கான சிகரங்களை எப்போதும் திறந்திருக்கின்றன. தான் சந்திக்கும் பிரச்னகளைப் பெண்கள் எதார்த்தமாக அணுகலாம்.



திறனை மேம்படுத்து:
ஓர் அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், உடனடியாக மனதில் டென்சன் தொற்றும். கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்று அச்சப்படும். இதை இப்படியும் பார்க்கலாம். கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும் எளிய வழிகளையும் உத்தேசிப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப் பல சந்தர்ப்பங்களை நீங்கள் எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தன் தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

சக மனிதரைப் புரிதல்:
திருமணம் பெண்ணின் வாழ்வில் மிகவும் மதிப்பு மிகுந்த பகுதி. ஒரு வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், தனக்கான குடும்பத்தின் தலைவியாகப் பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போதும் எதிர்ப்படும் எல்லா விஷயங்களுமே பிரச்னைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம்கூடப் பெரிதாக மனதைக் காயப்படுத்தும். புதிய மனிதர்களை முன்கூட்டிய விருப்புவெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் மனிதர்களைப் புரிந்து செயல்படுவதால் வீட்டிலும்..தனது வேலையிடத்திலும் பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும்.

இனிக்கும் இல்லம்:
பல வீடுகளிலும் எதிரெதிர் துருவங்களாக இருப்பது தம்பதிகள்தான். முதலில் அன்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள உருவாக்கிக்கொண்ட உறவுதான். போகப்போக அவர்களுக்கிடையில் பலவீனங்களும் வெறுப்புகளும் மட்டுமே இடிக்க முடியாத சுவராக வளர்ந்து நிற்கும். நெகட்டிவான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்னைதான் இது. இந்தச் சுவரையே ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடி மொட்டுகளாக மாற்ற முடியும். அப்படியே இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூறுங்கள். பாசிட்டிவ் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். அவரவருக்கான சுதந்திர வெளியை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கத் தொடங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது. எந்த உறவிலும் பாசிட்டிவ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக பெண்கள் சுமுகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பெண்கள் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்தப் பிரச்னையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அவர்களுக்கான தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது! மு.க.ஸ்டாலின் கிண்டல்
கார்த்திக்.சி
'வைர விழாவை வயதானோர்களுக்கான விழா என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதுதான் ஆகிறதா' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல்செய்துள்ளார்.




காயிதே மில்லத்தின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில், தி.மு.க செயல் தலைவர் மலர் வைத்து மரியாதைசெலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீவிரமாகக் குரல்கொடுத்தவர் காயிதே மில்லத். அவருடைய கனவை நனவாக்க வேண்டும். மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வது போல தமிழை ஆட்சி மொழியாக்க முயலவேண்டும்.

காவிகள் ஆளலாம் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் நாகரிகம் தெரிகிறது. வைர விழாவை வயதானவர்கள் விழா என்று கேலிசெய்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதா ஆகிறது. அவர் மூத்த குடிமக்களை அவமானப்படுத்தியுள்ளார். மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, மக்களின் கலாசார, பொருளாதாரத்தைச் சீரழிக்கிறது. அதற்கு எதிராகவே, எதிர்க்கட்சிகள் அனைவரும் வைர விழாவின்போது குரல்கொடுத்தோம். அது, அரசியலுக்கான கூட்டணி அல்ல' என்று தெரிவித்தார்.
ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே வலுத்து வரும் மோதல்!
ராகினி ஆத்ம வெண்டி மு.

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண்பேடி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆளுநர் கிரண் பேடியும் சமூக வலைதளங்களில் தொடர் பதில் தாக்குதல்களை பதிவு செய்து வருகிறார்.




புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி தொடர் புகார்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், ‘கிரண்பேடி அரசு குறித்தத் தவறான தகவலகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என ஆவேசம் காட்டினார். இந்நிலையில் மீண்டும் கிரண் பேடி சமூக வலைதளங்களில் நாராயணசாமியை தாக்க துவங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கிரண்பேடி குறிப்பிடுகையில், ‘நான் நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா, ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா, மக்களின் குறைகளைத் தீர்க்க சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக புதுச்சேரியின் ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்படவேண்டும். நான் செய்வதை தவறு என யார் கூறுகிறார்கள்’ என அடுக்கடுக்கானக் கேள்விகளை பதிந்து வருகிறார். இதனால் புதுச்சேரியில் ஆளுநர்- முதல்வர் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
கிரண்பேடியை கலங்கடிக்கும் நாராயணசாமியின் உத்தரவு..!
அ.குரூஸ் தனம் ஜெ.முருகன்

அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.




புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே மோதல் நீடித்து வருகிறது. கிரண்பேடி புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே மோதல் நீடித்து வருகிறது. தற்போது மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 'நான் நல்ல நிர்வாகியாக செயல்படவேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா? என்று கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாராயணசாமி, சட்டசபையில் பேசியுள்ளார். அவர் 'எம்.எல்.ஏக்களின் அனுமதி இல்லாமல் ஆளுநர் தொகுதிக்குள் நுழைந்தால் அவரை நுழையவிடாதீர்கள். மறியல் போராட்டம் செய்யவேண்டும். ஆளுநர் தனது வரம்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும். கோப்புகளை திரும்ப அனுப்பும் செயலை ஆளுநர் நிறுத்தவேண்டும். பேஸ்புக், ட்விட்டரில் புகார் கூறுவதே ஆளுநரின் வேலை' என்று குற்றம்சாட்டினார். மேலும் 'அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்கக் கூடாது' என்று உத்தரவிட்டார். 'ஆளுநரை மாற்றவேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்னன் பேசினார்.
பள்ளிக் கல்வித்துறையில் 82 பேருக்குக் கருணை வேலை!
சகாயராஜ் மு



பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில், 25 சதவிகிதப் பணியிடங்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ், கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டுவருகிறது. அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில், முன்னுரிமை நிர்ணயம்செய்யப்பட்டு உயிரிழந்த ஊழியர், ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுவருகிறது.

2016-17ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்களை நிர்ணயம்செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களைக் கருணை அடிப்படையில் நிரப்பிட அரசாணை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஏழு பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்டி அணிந்துவந்த மாணவர் தேர்வெழுத அனுமதி மறுப்பு! பதறிப்போன மதுரை கலெக்டர்
ஈ.ஜெ.நந்தகுமார் செ.சல்மான்

வேட்டி கட்டி வந்த மாணவரைத் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்விக்கான பருவத்தேர்வு இன்று பல மையங்களில் நடைபெற்றது. மதுரை அரசரடி இறையியில் கல்லூரி தேர்வு மையத்துக்குத் திருமங்கலம் அருகேயுள்ள கல்லனை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணன் தேர்வெழுத காலையில் வந்தார். காலை பத்து மணிக்குத் தேர்வறையில் தயாராக அமர்ந்திருந்த கண்ணனை, அங்கு வந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், வேட்டி கட்டிக்கொண்டு தேர்வு எழுத அனுமதியில்லை என்று கூறி கண்ணணை வெளியேற்றினார்கள்.

'வேட்டி கட்டுவது எப்படி ஒழுங்கீனமாகும், பல்கலைக்கழகத்தில் அப்படி விதி ஏதுமுள்ளதா' என்று கண்காணிப்பாளர்களிடம் வாக்குவாதம் செய்தார் கண்ணன். ஆனாலும் அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. உடனே கண்ணன் நண்பர்கள் மூலம் ஊடகங்களுக்குத் தகவல் சொன்னார். இதனால் ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், "நான், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் இளங்கலை நூலகவியல் படித்து வருகிறேன். இந்த செமஸ்டரில் நான்கு தேர்வுகளை எழுதிவிட்டேன். இன்று நடை பெறும் இறுதித் தேர்வை எழுத வேட்டி கட்டிக்கொண்டு வந்தேன். அது தவறு என்று தேர்வெழுத அனுமதி மறுத்தனர். வேட்டி தமிழர்களின் ஆடை இல்லையா. அது குற்றமா. தமிழ் நாட்டிலேயே வேட்டியை அங்கீகரிக்கவில்லையென்றால் யார் நம்மை மதிப்பார்கள்" என்றார்.

கண்ணனுக்கு ஏற்பட்ட அவமானமும், அவர் செய்தியாளர்களிடம் பேசிய தகவலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் போய் சேர, அவர்கள் பதறிப்போனார்கள். பண்பாட்டு ரீதியான விஷயங்கள் தமிழக மக்களை உசுப்பிவிட்டுவிடும் என்று பயந்த பல்கலைக்கழக அதிகாரிகள், உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டனர்.

வெளியில் காத்திருந்த கண்ணனைச் சமாதானப்படுத்தித் தேர்வெழுத வைத்தனர். அவருக்குத் தேர்வெழுத ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவரின் வேட்டி விவகாரம் பெரியளவில் செல்லாமல் ஆரம்பத்திலயே தடுக்கப்பட்டாலும், தமிழரின் பண்பாட்டு உடைக்கான இடம் எதுவென்பதைத் தமிழகத்திலுள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்கள், நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஒரு முடிவுக்கு வர வேண்டிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் தொடரில் வெடிக்கவிருக்கும் பிரச்னைகள் இவைதான்!

இரா.தமிழ்க்கனல்



சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த பகுதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், எதிர்ப்பும் எதிர்பார்ப்புகளும் காத்திருக்கின்றன.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த மார்ச்சில் கூடியது. மார்ச் 16 ஆம் தேதியன்று 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்செய்தார். அதைத் தொடர்ந்து மார்ச் 20 முதல் 25ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடந்திருக்கவேண்டிய துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவில்லை. ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலையொட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் மோசடிக் குற்றச்சாட்டுகளால் அந்த இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

இதற்கிடையே அதிமுகவை நிர்வகிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பதில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர் அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு, தேர்தல் ஆணையம்வரை விவகாரம் போனது. இரு தரப்பினரும் தாங்கள்தான் அதிமுகவுக்கு உரிமை படைத்தவர்கள் என நிரூபிக்க தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதுடன் வாதிட்டும் வருகின்றனர்.
அதன்பிறகு பல பிரச்னைகளையொட்டி சட்டப்பேரவையைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட முன்னணி கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், பேரவை கூட்டப்படவில்லை.

தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் தாக்கத்தால், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என திமுக தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதற்குத் தீர்வுகாண மத்திய அரசிடமும் அருகமை மாநில அரசுகளிடமும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு தனிச்சட்டமுன்வரைவு இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நெடுஞ்சாலையோரம் மூடப்பட்ட மதுக்கடைகளை இடம்மாற்றி ஊர்களுக்குள் திறக்கப்படுவதை எதிர்த்து பெண்களின் பங்கேற்பில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் அமையவிருந்த பெரும் தொழிற்சாலை திட்டங்கள், மாநில அரசின் குறைபாடுகளால் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

இவை மட்டுமின்றி வேறு பல விவகாரங்களையும் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கிளப்பவுள்ளன.

மாநில சுயாட்சியைப் பறிப்பதாக அமைந்துள்ள நீட் தேர்வுக்கு மாநிலத்தில் நீடித்துவரும் எதிர்ப்பைக் குறைக்கும்வகையில் அது தொடர்பாக புதிய மசோதா தாக்கல்செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. பத்திரப்பதிவுக் கட்டணம் அதிகரித்துள்ளதாலும் வீட்டுமனைத் தொழிலானது மந்தமடைந்துள்ள நிலையில், நிலத்தின் வழிகாட்டல் மதிப்பைக் குறைப்பதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முதியோர் மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான அரசு நிதியுதவி, ரேசன் பொருட்களுக்கான நிதி போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை மானியக் கோரிக்கையில்தான் ஒதுக்கப்படும்; வழக்கமான காலகட்டத்தில் பேரவையைக் கூட்டாததால் இதன் மூலம் பயனடைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் சிபிஎம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதி.

”குறிப்பாக மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் கடுமையாக நிலவுகிறது. 146 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆளுக்கு 10 லிட்டராவது தேவை என்றபோதும் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக திண்டுக்கல் நகரம் முழுக்க தண்ணீர்ப் பஞ்சம் இருந்தாலும், 9 இடங்களில்தான் ஆழ்துளைக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதற்கும் நிதி இல்லை. வறட்சிக்காகவே தனி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. உரிய நேரத்தில் பேரவைக்கூட்டம் நடத்தப்படாததால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. பேரவை கூடினால்தானே கூடுதல் நிதி வேண்டும் என்றுகூடக் கேட்கமுடியும்.

மேலும், மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டநிலையில், ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு 50% நிதியை மாநில அரசு வழங்கவேண்டும். மானியக் கோரிக்கை விவாதம் நடந்தால்தானே இதற்கான நிதியை ஒதுக்கமுடியும். அதைச் செய்யாததால் ரேசன் கடைகளில், உரிய அளவு அரிசியை வழங்குவதில்லை. அரிசி கோதுமை என சேர்த்துத் தருகிறார்கள் அல்லது குறைவான அரிசியைத் தருகிறார்கள் அல்லது அரிசி வரவில்லை என்கிறார்கள். ரேசன் கடைகளில் அரிசி கிடைக்கிறது என அரசு சொல்கிறது; சில இடங்களில் கிடைக்கிறது; பல இடங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. மாநில அரசாங்கம் இதை ஒரு சமாளிப்பு உத்தியாகவே செய்கிறது” என வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கான எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுகிறார், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி.
விரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்..!
கார்த்திக்.சி

நோக்கியா 3, 5, 6 மாடல் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஜூன் 13-ம் தேதி முதல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




நோக்கியா நிறுவனம் சமீபத்தில் 3310 என்ற மாடல் போனை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜூன் 13-ம் மூன்று வகையான மாடல் ஸ்மார்ட் போன்களை வெளியிடதிட்டமிட்டுள்ளது. நோக்கியா 3, 5, 6 என்று அந்த போன்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. நோக்கியா 6 மாடல், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி சேமிப்பு வசதி, 5.5 இன்ச் தொடுதிரை வசதிகளுடன் வெளிவரவுள்ளது. இதன் விலை 16,000 ரூபாய் ஆகும்.

இதில் 16 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் வசதி கொண்டது. நோக்கியா 5 மாடல், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி சேமிப்பு வசதி, 5.2 இன்ச் தொடுதிரை வசதியுடன் வெளிவரவுள்ளது. இதன் விலை 13,250 ரூபாய் வரை இருக்கும். நோக்கிய 3 மாடல், 5 இன்ச் தொடுதிரையும் 16 ஜி.பி சேமிப்பு வசதியுடனும் வெளிவர உள்ளது. அதன்விலை 9,750 ரூபாய் ஆகும். பின்லாந்தைச் சேர்ந்த ஜி.எம்.டி குளோபல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

NEWS TODAY 21.12.2024