வீட்டுக்குள் ‘மூர்க்கப் பூனை’; போலிசை அழைத்த ஆடவர்
4 Jun 2017
பொங்கோலில் உள்ள வீடு ஒன்றுக்குள் பின்னிரவு வேளையில் கறுப்புப் பூனை ஒன்று நுழைந்தது. அதை வெளியேற்ற முடியாமல் தவித்த அந்த வீட்டின் உரிமையாளர், போலிசுக்கு உதவி நாடி அழைப்பு விடுத்திருந்தார். பின்னிரவு 1 மணியளவில் திரு ஹர்ரிஸ் அபு பக்கரின் வீட்டுக்குள் புகுந்த பூனையை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெளியேற்ற முயன்றும் அது வெளியேறவில்லை. மாறாக அப்பூனை பயங்கரமாக கத்திக்- கொண்டு மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதுடன் தற்காப்புக்- காக தனது கால்களால் கீறிக் கொண்டே இருந்தது என்று திரு அபு பக்கர் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதி விட்டு இருந்தார்.
அந்தப் பூனையை வெளியேற்ற முதலில் திரு அபு பக்கர் நகர மன்றத்துடன் தொடர்புகொண்டார். நகர மன்றம் அவரை விலங்குவதை தடுப்பு அமைப்பிடம் கைகாட்ட ஆனால் அந்த அமைப்போ அவரைப் போலி சிடம் கை காட்டிவிட்டது. அதனால் அவர் போலிசின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு ஓர் ஆம்பு லன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னிரவு 2.12 மணியளவில் தகவல் கிடைத்து திரு அபு பக்கரின் வீட்டுக்குச் சென்ற போலிசார் அந்தப் பூனையைப் பிடித்து வீட்டுக்கு வெளியே கொண்டு சென்றனர். எனினும் அதன் பிறகு பூனை தப்பித்துச் சென்று விட்டது என்று தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment