Monday, June 5, 2017

சிங்கப்பூரர்களுக்கு புதிய ஆறு மாத ஆஸ்திரேலிய விசா

Tamil Murasu

ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி செல்லும் சிங்கப்பூரர்களுக்குப் புதிய ஆறு மாத விசா கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியப் பிரதமர் மேல்கம் டர்ன்புல் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் முதல் நாளான நேற்றைய தினத்தன்று புதிய விசா குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. புதிய விசாவை எடுக்கும் சிங்கப்பூரர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒவ் வொரு முறையும் அங்கு மூன்று மாதங்கள் வரை இருக்கலாம்.
இந்த விசா சிங்கப்பூரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி செல்லும் சிங்கப்பூரர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து புதிய விசாவுக்காக மீண்டும் விண் ணப்பம் செய்யவேண்டிய நிலை இருக்காது. அதுமட்டுமல்லாது, 30 வயதுக் கும் குறைவான சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியாவில் ஓராண்டு வரை விடுமுறை மேற்கொண்டு கொண்டே வேலை செய்ய புதிய விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலை, விடுமுறை விசா திட்டம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ் வொரு நாட்டிலிருந்தும் 500 பேருக்கு விசா வழங்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024