Monday, June 5, 2017

செல்போனுக்கு சிக்னல் கிடைக்கல... ஏணி போட்டு மரத்தின் மீது ஏறி பேசிய மத்திய அமைச்சர்!

By: Kalai Mathi...oneindia

Updated: Monday, June 5, 2017, 12:59 [IST]

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தனது சொந்த தொகுதியில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ஏணியை போட்டு மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் தான் அமைச்சரின் சொந்த தொகுதி உள்ளதாக கேள்வி எழுந்துள்ளது.

மத்திய இணைய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றார் அமைச்சர்.






அந்த நேரத்தில் அவரது செல்போன் திடீரென சினுங்கவே பேசத் தொடங்கியுள்ளார். ஆனால் முறையாக சிக்னல் கிடைக்காததால் செய்வறியாது திகைத்த அவர் மரத்தின் மீது ஏணிணை போட்டு ஏறி பேசியுள்ளார்.

அமைச்சர் மரத்தின் மீது ஏறி பேசியதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். சொந்த தொகுதியிலேயே சிக்னல் கிடைக்காததால் நொந்து போன அமைச்சர் என்ன இது என சலித்துக்கொண்டாராம்.

ராஜஸ்தான் மாவட்டத்தின் பல கிராமங்கள் செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் செல்போனில் எப்படி ட்ரான்செக்ஷன் செய்வது டிஜிட்டல் இந்தியா எப்படி சாத்தியம் என்றம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024