Monday, June 5, 2017

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது! மு.க.ஸ்டாலின் கிண்டல்
கார்த்திக்.சி
'வைர விழாவை வயதானோர்களுக்கான விழா என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதுதான் ஆகிறதா' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல்செய்துள்ளார்.




காயிதே மில்லத்தின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில், தி.மு.க செயல் தலைவர் மலர் வைத்து மரியாதைசெலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீவிரமாகக் குரல்கொடுத்தவர் காயிதே மில்லத். அவருடைய கனவை நனவாக்க வேண்டும். மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வது போல தமிழை ஆட்சி மொழியாக்க முயலவேண்டும்.

காவிகள் ஆளலாம் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் நாகரிகம் தெரிகிறது. வைர விழாவை வயதானவர்கள் விழா என்று கேலிசெய்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதா ஆகிறது. அவர் மூத்த குடிமக்களை அவமானப்படுத்தியுள்ளார். மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, மக்களின் கலாசார, பொருளாதாரத்தைச் சீரழிக்கிறது. அதற்கு எதிராகவே, எதிர்க்கட்சிகள் அனைவரும் வைர விழாவின்போது குரல்கொடுத்தோம். அது, அரசியலுக்கான கூட்டணி அல்ல' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024