சக்தி பீடங்களை தரிசிக்க ஆன்மிக சிறப்பு ரயில்
பதிவு செய்த நாள்05ஜூன்2017 21:45
கோவை: சக்தி பீடங்களை தரிசிக்கும் விதமாக, 12ம் தேதி இயக்கப்பட உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவுகள் ரவேற்கப்படுகின்றன. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனும், ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இச்சிறப்பு ரயில்களில், பல்வேறு ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். வரும், 12ம் தேதி, வடமாநில சக்தி பீடங்களை தரிசிக்க, ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக அலகாபாத் சென்றடைகிறது. கோவையைச் சேர்ந்தவர்கள், ஈரோட்டில் இருந்து பயணிக்கலாம்.
அலகாபாத்தில் அலோப்பிதேவி, காசி விசாலாட்சி, கயா மங்களாகவுரி தேவி, அசாமில் உள்ள காமாக்யா தேவி, கோல்கட்டாவில் உள்ள காளிகாதேவி, புரியில் உள்ள விமலாதேவி கோவில்களை தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், காசியில் கங்கா ஸ்நானம், கயாவில் முன்னோருக்கு மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர், அன்ன பூரணி, புரி ஜெகந்நாதர் மற்றும் கோனார்க் சூரியனாரை யும் தரிக்கலாம்.
மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 11 ஆயிரத்து, 775 ரூபாய் கட்டணம். இதில், ஸ்லீப்பர் ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி அடங்கும்.
முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, கோவை ரயில்வே ஸ்டேஷனை, 90031 40655 என்ற மொபைல் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment