Monday, June 5, 2017

பரோல் கோரி சசிகலா மனு: சிறை நிர்வாகம் நிராகரிப்பு

இரா.வினோத்

வி.கே.சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளார் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார். ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
இதை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் ஜெயராம் உறுதிப்படுத்தினார்.

ஏற்கெனவே, சசிகலா தனது அக்கா மகன் மகாதேவன் மறைவை ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்த பரோல் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சிறை சென்ற பின் இதுவரை இரண்டு முறை பரோல் மனு தாக்கல் செய்தார். இரண்டு முறையும் பரோல் நிராகரிப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024