மருத்துவ படிப்பில் 85 சதவீத
உள் ஒதுக்கீடு ரத்து : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு சென்னை: மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் ௨ முடித்தவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு தரப்பில், 17ல், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்து வப் படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர் களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூன் மாதம், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
'இந்த உத்தரவால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பாதிக்கப்படுவர்; 15 சதவீத இடங்களில் தான், நாங்கள் போட்டியிட வேண்டும் என, கட்டுப்படுத்த முடியாது; இது, பாரபட்சமாக உள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உட்பட பலர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ரவிச்சந்திர பாபு பிறப்பித்த உத்தரவு:
மாநில பாடத்திட்டத்தில், பிளஸ் ௨ படித்த மாணவர்கள் பின்பற்றிய தேர்வு நடைமுறை, பாடங்கள் வேறானது; அந்த மாணவர்கள், கிராமப்புற பின்னணி உடையவர்கள் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வெவ்வேறு பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல், 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை என்கிற போது, மாநில அரசு இப்படி ஒரு ஒப்பீட்டை வைப்பது, எனக்கு புரியவில்லை.
உரிமை இல்லை
ஒரு மாணவர், எந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்திருந்தாலும், மருத்துவப் படிப்பில் சேர, 'நீட்' மட்டுமே தகுதி தேர்வாக இருக்கும் போது, உள் ஒதுக்கீடு மூலம் மாணவர்கள் மத்தியில், இரண்டு வகையான பிரிவுகளை ஏற்படுத்த, மாநில அரசுக்கு உரிமை இல்லை.'நீட்' தேர்வை மாணவர்கள் எழுதிவிட்டால், அவர்கள் . அனைவரையும் சமமாகவே கருத வேண்டும். எனவே, இந்த அரசாணை, அரசியலமைப்பு
சட்டத்தை மீறுவதாக உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களும், இதர பாடத் திட்டத் தில் படிக்கும் மாணவர்களும், மாநில அரசின் பிள்ளைகள் தான். அவர்களும், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான்அவர்கள், இந்த மாநிலத்தைச் சேராதவர்கள் போல கருதுவது வேதனை அளிக்கிறது. பிளஸ் 2 தகுதி பெறுவதற்கு, மாநில பாடத்திட்டமா, சி.பி.எஸ். இ.,யா என, தேர்வு செய்கிற விருப்பம், அவர்கள் முன் வைக்கப்படுகிறது.
அத்தகைய விருப்பத்தை மாணவர்கள், பெற்றோர் வசம் விடும்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு செய்கிறவர் களுக்கு, குறைந்த சதவீத ஒதுக்கீடு தான் கிடைக்கும் என, எந்த அறிகுறியும் காட்டப்பட வில்லை. இந்த சூழ்நிலையில், 'நீட்' தேர்வுக்கு பின், அரசு, கட்டுப் பாட்டை கொண்டு வந்தால், அந்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். மருத்துவக் கல்வி என்பது, சமூகத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
மருத்துவர்களை, கடவுளுக்கு சமமாக கருதுகின் றனர். எனவே, மருத்துவப்படிப்புக்கான மாணவர்கள் தேர்வு, தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த படிப்புக்கான மாணவர்கள் தேர் வில், தகுதியில் சமரசம் செய்து கொள்ள முடியாது. 'நீட்' தேர்வில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை விட, சி.பி.எஸ்.இ.,யில் படித்தவர் கள், அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பதற்காக, அவர்கள் மீது பொறாமை கொண்டு, இப்படி ஒரு ஒதுக்கீடு கொண்டு வந்து, அவர்களுக் கான சட்டபூர்வ உரிமையை மறுக்கலாமா; இதை, கண்டிப்பாக ஏற்க முடியாது.
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மீது, மாற்றான் தாய் மனப்பான்மையை, மாநில அரசு கையாளுவதை ஏற்க முடியாது. அவர்கள் என்ன, வேற்று தேசத்த வர்களா; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை, அவர்கள் தேர்ந்தெடுத்தது பாவச் செயலா?'நீட்' தேர்வில் கலந்து கொள்ள, மாநில பாடத்திட்ட மாணவர் களால், தயார்படுத்தி கொள்ள முடிய வில்லை என்ற காரணமும் முன்வைக்கப்பட்டது. 'நீட்' தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 2010 - 11ல், வெளியிடப்பட்டு விட்டது.
மருத்துவ கவுன்சில் தான், பாடத்திட்டத்தை தயாரித்தது. இதர பாடத்திட்டத்தின் கீழ் வரும் மாணவர்களுடன் போட்டியிட, மாநில பாடத்திட்ட மாணவர்களை தயார்படுத்த, மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.பயிற்சி வகுப்புகள், வசதிகளை அளித்திருக்க வேண்டும். அதை விட்டு, கொள்கை முடிவு என்கிற பெயரில், தகுதி நீர்த்து போகும் விதத்தில், இத்தகைய அரசாணையை பிறப்பிக்க முடியாது.
'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும்; அதை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.தமிழக அரசு எடுத்த நடவடிக்கையானது, சட்ட வடிவில் இருந்திருந் தால், அட்வகேட் ஜெனரலின் வாதத்தை ஏற்பதில், எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், இந்த உத்தரவு, நிர்வாக ரீதியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. இந்த உத்தரவை, மாநில சட்டத்திற்கு இணையாக கருத முடியாது.
மாநில பாடத்திட்டம் மற்றும் இதர பாடத்திட்ட மாணவர்களிடம், ஒரு சமதளத்தை உருவாக்க வேண்டும் என்றால்,மாநில சட்டம் மூலம் தான் ஏற்படுத்த முடியும் என, உச்ச நீதிமன்றஉத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை,
சட்டம் கொண்டு வர, மாநில அரசு எடுத்த முயற்சி யானது, இன்னும் மசோதா அளவில் தான் உள்ளது.
இதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டி யுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பானது, அரசு தரப்புக்கு சாதகமாக இருப்பதை விட, மனுதாரருக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலை, இருதரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள், சுட்டிக்காட்டிய தீர்ப்புகள் ஆகிய வற்றை பரிசீலிக்கும் போது, தமிழக அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடானது, சமதளத் தில் உள்ள மாணவர்கள் மத்தியில், பாகுபாடு காட்டுவது போலாகும்.
மேலும், இந்த அரசாணையானது, அரசியல மைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. சமதளம் என்ற போர்வையில், சமமானவர் களை சமன் இல்லாதவர்களாக ஆக்குகிறது. மேலும், 'நீட்' தேர்வின் நோக்கத்தில், மறைமுக மாக குறுக்கீடு செய்வதாகவும், அரசாணை உள்ளது; தகுதியை சமரசம் செய்து கொள்வ தாகவும் உள்ளது.ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பிக்க, மாநில அரசுக்கு, அரசியலமைப்பு சட்டப்படி தகுதி மற்றும் அதிகார வரம்பு இருந்தாலும், அது சட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்; சட்டத்தை மீறுவதாக இருக்கக் கூடாது.
ஏற்கனவே, 'நீட்' தேர்வு இருக்கும் போது, அதன் நோக்கத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சி யாக, நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ நிர்வாக உத்தரவு கொண்டு வருவது, சட்ட விரோதமானது.மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், கிராமப்புற பின்னணி யில் வந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக, இந்த நீதிமன்றம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
இந்த மாணவர்களின் வளர்ச்சி, நலன்களில், நீதிமன்றம் அக்கறை கொள்கிறது.அவர்களின் நலன்களை, வளர்ச்சியை, சட்ட விரோத வழிகளில் அடைவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதுவும், பாதிக்கப்படுபவர்கள், நீதிமன்றத்தின் கதவை தட்டி, தங்கள் பிரச்னைக்கு நிவாரணம் கோரும் போது, அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
உத்தரவு
வழக்கு தொடுத்தவர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சமாக வேண்டுமானால் இருக்க லாம்; ஆனால், அவர்கள் கொண்டு வந்த பிரச்னை முக்கியமானது. எனவே, தமிழக அரசு, 2017 ஜூன், 22ல் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது; அந்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது.புதிதாக தகுதி பட்டியலை தயாரித்து, அதன்படி, கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.
இந்த உத்தரவானது, மனுதாரருக்கு மட்டுமல் லாமல், சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனை வருக்கும் பொருந்தும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டு உள்ளார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். வரும், 17ல், மேல்முறை யீட்டு மனு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.