Saturday, July 15, 2017

போலீசார் நேரில் செல்ல வேண்டும் : பாஸ்போர்ட் அதிகாரி வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017
00:04


சென்னை: ''பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தோரின் வீடுகளுக்குச் சென்று, போலீசார் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்,'' என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, அசோக்பாபு கூறினார்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய, தலைமை காவலர் முருகன். இவரை, போலி பாஸ்போர்ட் வழக்கில், சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள நடைமுறைகள் குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, பி.கே.அசோக் பாபு கூறியதாவது: புதிதாக பாஸ்போர்ட் கோரி பெறப்படும் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை அறிய, அந்தந்த பகுதி காவல் துறைக்கு அனுப்பப்படும். காவல்துறையினர் அறிக்கைப்படி, பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த, 21 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில், துரிதமாக விசாரணை முடிந்து அறிக்கை அளிப்பதால், 10 நாட்களுக்குள் புதிய பாஸ் போர்ட் வழங்கப்பட்டு விடுகிறது.பாஸ்போர்ட் தொடர்பாக, போலீஸ் விசாரணைக்கு விண்ணப்பதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும். போலீசார், விண்ணப்பதாரர் வீடுகளுக்கு சென்று, ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்.
அஞ்சல் துறையினரும், வீட்டு முகவரிக்கு நேரில் சென்று, பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவற்றின் மூலம், முறைகேடுகளை முற்றிலும் தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...