Saturday, July 15, 2017

தேய்ந்து போகும் அம்மா உணவகங்கள்
 அலோசியஸ் சேவியர் லோபஸ்

 

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்ப்பைப் பெற்ற திட்டம் அம்மா உணவகம் திட்டம். ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள்கூட அம்மா உணவக திட்டத்தை பாராட்டியிருக்கின்றன.

இந்நிலைய்யில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி..

அம்மா உணவகங்கள் அமைக்க ரூ.700 கோடி செலவில் நகரின் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை 200-ஆக குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது நகரில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன.

இருப்பினும் உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறாத நிலையில் இப்போதே அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டால் அது தேர்தலில் ஒலிக்கும் என்பதாலேயே உணவகங்களை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் விற்பனை பெறும் சரிவைக் கண்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

நஷ்டத்தில் உணவகங்கள்

நாள் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அம்மா உணவகங்களில் விற்பனை நடைபெறுகிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசி மானிய விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் மற்ற செலவினங்களை மாநகராட்சி பொது நிதியில் இருந்துதான் பெறவேண்டியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு ஒரு அம்மா கேன்டீனுக்கு ரூ.20,000 செலவாகிறது. கூட்டம் அதிகமில்லாத அம்மா உணவகங்களில் லாபம் வெறும் ரூ.2000 ஆக மட்டுமே உள்ளது. ஊழியர்களுக்கான தினக்கூலி ரூ.300. ஒவ்வொரு உணவகத்திலும் 10 முதல் 40 ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிதி நெருக்கடியால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025