Saturday, July 15, 2017

மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி






புதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டியலில், 73 சதவீத மக்களின் ஆதர வோடு, உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, மக்களின் ஆதரவை பெற்றுள்ள அரசுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 73 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று, பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு காரணமாக, அந்த அமைப்பு கூறி உள்ளதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற,

பிரதமர்நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என, மக்களை கவரும் பல்வேறு திட்டங்களால், மக்கள் விரும்பும் தலைவராக விளங்குகிறார். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, 62 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன் தலைமையான, துருக்கி அரசு, 58 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்ட பிரிட்டனில், 41 சதவீத மக்கள், பிரதமர் தெரசா மேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 30 சதவீத மக்களின் ஆதரவையே பெற்றுள்ளார்.



பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய அகதிகள் பிரச்னைகளால் திணறி கொண்டிருக் கும், கிரீஸ் அரசு, 13 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024