Saturday, July 15, 2017

84 ஜிபி டேட்டா, 84 நாள் வேலிடிட்டி: ஏர்செல் புதிய சலுகை அறிவிப்பு

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
14:46

புதுடில்லி : ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல், ஐடியா, வோடபோன் என முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து ஏர்செல் நிறுவனமும் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த சலுகைகளுடன் ஜியோ தனது சேவைகளின் விலையை சமீபத்தில் மாற்றியமைத்தது. இதைத் தொடர்ந்து ஏர்செல் புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்செல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு 84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி), 84 நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்த சலுகையின் கீழ் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் போன்றே இருந்தாலும் புதிய ஏர்செல் சலுகையின் விலை இந்தியாவில் ரூ.348 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோவின் தண் தணா தண் சலுகையில் 84 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் நிலையில், ஏர்செல் 84 ஜிபி 3ஜி டேட்டாவையே வழங்குகிறது. ஏர்செல் அறிவித்துள்ள புதிய சலுகை தற்சமயம் உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் ரூ.349 மற்றும் ரூ.399 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதேபோன்ற சலுகைகள் மற்ற நிறுவனங்களும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024