மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை:ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
தமிழக அரசு அறிவிப்பு
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்,அரசு
பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு
செய்யப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
அவர் தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்த அரசாணையை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு நியாயப்படுத்துகிறது. மேலும், இதுகுறித்து கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறுகிறது.
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது என்பதால், அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களிலும், அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதற்காக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், தமிழக அரசுக்கு ஒரு பரிந்துரையை அனுப்பி உள்ளார். அதில், 85 சதவீத இடங்களை மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இந்த அரசாணையை பிறப்பித்து உள்ளது.
அதாவது கூடுதல் இயக்குனர் ஜூன் 22-ந் தேதி இந்த பரிந்துரையை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று அதே நாளில் தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்து இருக்கிறது.
இந்த ஆவணங்களை எல்லாம் படித்து பார்த்தபோது, தமிழக அரசு தன் மனதை முழுமையாக செலுத்தி இந்த அரசாணையை பிறப்பிக்கவில்லை என்று தெரிகிறது. கூடுதல் இயக்குனர் செய்த பரிந்துரையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுவும், இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும்.
கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.
ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்றி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை.
எனவே, ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை இயற்றிவிட்டு, அந்த தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருக்கும்போது, அதே காரணங்களை கூறி இதுபோன்ற இடஒதுக்கீட்டை வழங்கி தமிழக அரசு அரசாணையை பிறப்பிக்க முடியுமா?
மேலும், இதுபோன்ற விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்திருந்தால், அதை முறைப்படி எடுக்கவேண்டும். அமைச்சரவையில் பரிசீலித்து, அங்கு ஒப்புதலைப்பெற்று, முடிவை அறிவித்து இருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை. கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், கொள்கை முடிவு எடுத்துவிட்டதாக கூறி அரசாணையை பிறப்பித்துள்ளது.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளதாகவும், ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுள்ளதால், இந்த சலுகையை தமிழக மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசு கூறும் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்று முடிவான பின்னர், இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட முடியாது.
சாதி ரீதியான இடஒதுக்கீடு என்பது வேறு, நிறுவனம் ரீதியாக வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது வேறு. தற்போது தமிழக அரசு (கல்வி) நிறுவனம் ரீதியான இடஒதுக்கீட்டை வழங்கி உள்ளது.
மேலும், சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் போல, தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அரசு மறந்துவிட்டது.
மாநில பாட திட்டத்தின் கீழ் படிக்கவேண்டுமா?, சி.பி.எஸ்.இ. போன்ற மத்திய பாட திட்டத்தின் கீழ் படிக்கவேண்டுமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் தான் உள்ளது. விரும்பிய பாட திட்டத்தின் கீழ் கல்வி பயில்வதற்கு முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிக இடங்களையும், பிற மாணவர்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கி இதுபோன்ற அரசாணை பிறப்பிப்பதை ஏற்க முடியாது.
இதைவிட தெளிவாக சொல்லவேண்டும் என்றால், மருத்துவம் என்பது மனித உயிர் சம்பந்தப்பட்டது. சிகிச்சை வழங்கும் டாக்டர்கள், நோயாளிகளுக்கு கடவுள் போன்றவர்கள். இந்த படிப்புக்கு திறமையான மற்றும் கல்வியறிவு உள்ள மாணவர்கள் தான் சேரவேண்டும். இதில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான மொத்த இடத்தில் பெரும் எண்ணிக்கை ஆக்கிரமித்து விடுவார்கள். அதனால், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது.
ஏனென்றால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை என்பது ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெற உள்ளது. அப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு பாதிப்பு என்பதை ஏற்க முடியாது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான சி.பி.எஸ்.இ. மாணவர்களை, மாற்றான் தாய் மனப்பான்மையில் தமிழக அரசு அணுகக்கூடாது. அவர்களை படிப்பில் சேரவிடாமல் இதுபோன்ற அரசாணையை பிறப்பிக்கக் கூடாது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில், அண்ணன் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழும், தம்பி மாநில பாட திட்டத்தின் கீழும் பிளஸ்-2 தேர்வை எழுதி, மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு எழுதி தகுதிப்பெற்ற பின்னர், மாநில பாட திட்டத்தில் படித்த தம்பிக்குதான் மருத்துவ கல்வியில் இடம் வழங்க முடியும் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
எனவே, மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாட திட்டங் களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக்கூடாது. எனவே, மேற்சொன்ன காரணங்களால், மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையானது என்றும் முடிவு செய்கிறேன். அந்த அரசாணையை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி ரவிச்சந்திரபாபு தனது உத்தரவில் கூறி உள்ளார்.
இந்த நிலையில் சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, “தமிழக அரசின் பாடதிட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு இதற்கு தடை விதித்துள்ளது. எனவே இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குமா? தமிழக மாணவர்களின் நலனை இந்த அரசு காக்குமா? என்பதை அறிய விரும்புகிறேன்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக பாட திட்டத்தின்படி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தோம். இதற்கிடையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே 15-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் மூலம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்தது. எனவே உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தடை விதிக்கவில்லை, மாறாக சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை தமிழக அரசும் உன்னிப்பாக கண்காணித்தது. தற்போது ஐகோர்ட்டு இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
இது குறித்து சட்ட நிபுணர்களுடனும், முதல்-அமைச்சருடனும் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் தமிழக அரசின் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் வற்புறுத்தி உள்ளனர்.

No comments:
Post a Comment