Saturday, July 15, 2017

என்ஜினீயரிங் படிப்புக்கும் வரப்போகிறது ‘நீட்’

 
தமிழ்நாட்டில் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு, ‘பி.டி.எஸ்.’ என்று கூறப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கும், எம்.பி.பி.எஸ். என்று கூறப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எப்போதுதான் நடைபெறும்?, 
 
மிழ்நாட்டில்  பிளஸ்–2  படித்து  முடித்து விட்டு, ‘பி.டி.எஸ்.’ என்று கூறப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கும், எம்.பி.பி.எஸ். என்று கூறப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எப்போதுதான் நடைபெறும்?, எந்த அடிப்படையில் நடைபெறும்? என்பதற்கு இருந்து வந்த குழப்பமான நிலைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளைக்கொண்டதாகும். மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களால் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதமுடியாது என்றவகையில், தமிழ்நாட்டிற்கு விலக்குப்பெற சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் அமலுக்கு வரவேண்டும் என்றால், ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படவேண்டும். அதற்கு மத்திய அரசாங்கம் இன்னமும் ஒப்புதல் கொடுக்கவில்லை, தருவதுபோலவும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய கட்டாயத்தில் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றவர்களில், 15 சதவீதம் அகில இந்திய கோட்டாவுக்குப்போக, மீதமுள்ள 85 சதவீத இடங்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீத இடங்களும், 85 சதவீதம் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்கும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ.யில் படித்த 3 மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பிறப்பித்த ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்பீல் செய்தாலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை. மாணவர் சேர்க்கைக்கு வீண் தாமதம்தான் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையை தவிர்க்க, எந்த தேர்வுவந்தாலும் அதை எங்களால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில், அவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் என்று எவ்வளவோ கல்வியாளர்கள் கோரிக்கைவிடுத்தும், இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வையும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் இந்த முடிவை அறிவிக்கப்போகிறது. சில நாட்களுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வின் மூலம் முறைகேடுகள் ஒழிந்துள்ளதா?, மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் முழுக்க முழுக்க அவர்களின் தகுதி அடிப்படையில்தான் வழங்கப்பட்டதா? என்று ஆலோசனை நடத்தியது. இதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவக்கல்வியில் இடம்பெறும் ஒவ்வொரு மாணவரும் உறுதியாக குறைந்தபட்ச தகுதியோடுதான் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வில் 50 சதவீதத்திற்குமேல் மதிப்பெண் எடுத்தவர்களால்தான் விண்ணப்பமே செய்யமுடியும் என்று தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், 2018–ம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு மூலமே அகில இந்திய அளவில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பதற்கான திட்டத்திற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆக, என்ஜினீயரிங் படிப்பிற்கும், ‘நீட்’ தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள உறுதிப்பாடான நிலையில், நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கும் ‘நீட்’ தேர்வு வரத்தான் போகிறது. எனவே, மருத்துவப்படிப்புபோல, என்ஜினீயரிங் படிப்புக்கும் மாணவர்களுக்கு வீணான நம்பிக்கையை தமிழக அரசு வளர்த்து, அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல், தொடக்கத்திலே நிலைமையை தெளிவாக்கி, அதற்கு மாணவர்கள் தயார்நிலையில் இருக்கும் வகையில் பயிற்சிகளை அளிப்பதே சாலச்சிறந்ததாகும்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...