Saturday, July 15, 2017

ஹெல்மெட்டுடன் பணிபுரியும் ஊழியர்கள்!

பீகாரில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட்டுடன் வேலைசெய்யும்

புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு வித பதற்றத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். மிகவும் பழமையான கட்டடமான இது எப்போது வேண்டுமென்றாலும் இடிந்துவிழலாம் என்ற நிலையில் உள்ளது.

மழை நேரங்களில் கட்டடத்தில் இருந்து நீர் ஒழுகுவதாலும் ஊழியர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக பீகார் மாநில பொதுப்பணித்துறையினரிடம் ஊழியர்கள் தெரிவித்துள்ளது. அலுவலகத்துக்கு புதிய கட்டடம் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் தங்களை தற்காத்துக்கொள்ளும் எண்ணத்தில் அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் அந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் தலையில் ஹெல்மெட்டுடனேயே வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊழியர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025