Tuesday, October 17, 2017


திருப்பரங்குன்றத்தில் ரெய்டு

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருநகரில் உள்ளது. தீபாவளிக்காக அலுவலர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் அன்பளிப்பு அளிக்க வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு அங்கு சென்ற 14 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை செய்தனர். இரவு 11:00 மணி வரை சோதனை நீடித்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயினி, ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. பணம், அன்பளிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னாள் அதிகாரி மனைவி, மகனுக்கு சிறை : சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு

சென்னை: வருமானத்துக்குஅதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மரணமடைந்தஅரசு அதிகாரியின்மனைவி மற்றும் மகனுக்கு, தலா, மூன்று ஆண்டு சிறைதண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பத்திரப்பதிவு துறையில், மாவட்ட பதிவாளராக பணியாற்றியவர் ராமச்சந்திரன். சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், துறை விசாரணைக்கு பின், பணி நீக்கம் செய்யப்பட்டார்.வருமானத்துக்கு அதிகமாக, 44.81 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, ராமச்சந்திரன் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவி மல்லிகா மற்றும் மகன் புனிதகுமாருக்கு
எதிராகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பின், ராமச்சந்திரன் மரணமடைந்தார்.இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகன் மீதான வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை, நீதிபதி எஸ்.காஞ்சனா விசாரித்தார். ஊழல் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு வழக்கறிஞர் பூர்ணிமாதேவி ஆஜரானார்.

நீதிபதி காஞ்சனாபிறப்பித்த உத்தரவு:இந்த அளவுக்குசொத்துகள் வாங்க, ராமச்சந்திரனின் வருமானம் போதாது. அவரது மனைவி மற்றும் மகன், பொது ஊழியர்கள் அல்ல. உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்காக, பொது ஊழியர்கள் அல்லாதவர்கள் மீதும், வழக்கு தொடரலாம். மனைவி மற்றும் மகனுக்கு, தனிப்பட்ட முறையில் வருமானம் கிடையாது. மனைவி, இல்லத்தரசி; மகன், எந்த வேலையிலும் இல்லை. அவர்களுக்கு கணிசமான வருமானம் வந்துள்ளது என்பதை, உறுதி செய்ய ஆதாரம் இல்லை.வருமானத்துக்கு அதிக மாக, 40.21 லட்சம் ரூபாய் அளவுக்கு, ராமச்சந்திரன் சொத்து சேர்த்திருப்பதை, அரசு தரப்பு நிரூபித்துஉள்ளது.அவருக்கு உடந்தையாக இருந்ததாக, மனைவிமற்றும் மகன் மீதானகுற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரன்இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான குற்றச்சாட்டு விலக்கப்படுகிறது.
மற்ற இருவருக்கும், தலா, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

'காஸ்' முன்பதிவில் சிக்கல் : வாடிக்கையாளர்கள் அவதி


தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள, 'பாரத் காஸ்' வாடிக்கையாளர்கள், சமையல் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் சமையல் காஸ் முன்பதிவு செய்ய, ஐ.வி.ஆர்.எஸ்., நடைமுறையில் உள்ளது. இதில், வாடிக்கையாளர், தமது மொபைல் போனில் இருந்து, சில வினாடிகளில், முன்பதிவு செய்யலாம் என்பதால், வாடிக்கையாளர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, ஒரு வாரமாக, பாரத் காஸ் நிறுவன வாடிக்கையாளர்கள், மொபைல் போன் வாயிலாக, முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட மொபைல் போன் நிறுவனத்தின் எண்ணில் மட்டுமே, முன்பதிவு நடக்கிறது. பிற நிறுவனங்களின் இணைப்பு உள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டால், சரியான எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறி, இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றனர். 'இப்பிரச்னை,ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்; அதுவரை வாடிக்கையாளர்கள், எஸ்.எம்.எஸ்., ஆன்லைன், மொபைல் ஆப் அல்லது லேண்ட் லைன் வாயிலாக புக் செய்யலாம்,'' என, பாரத் காஸ் நிறுவன விற்பனை மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.

- நமது நிருபர்

ஊராட்சி செயலர் பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

சேலம்: முறைகேடு ஊராட்சி செயலர், போதை பி.டி.ஓ., ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் கலெக்டர், ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர், ராஜகணேஷ், 55. இவர், அக்.,13, மதியம் குடிபோதையில், பணியில் இருந்துள்ளார். 
அப்போது, சந்திக்க சென்ற பொதுமக்களிடம், அவர் உளறியதால் அதிர்ச்சியடைந்தனர். பலமுறை அவர், பணிக்கு போதையில் வருவது வாடிக்கையாகிவிட்டது. 'உயரதிகாரி என்பதால், அவரை நாங்கள் என்ன செய்ய முடியும்' என, அங்குள்ள ஊழியர்களே புலம்பியது குறித்து, கலெக்டர் கவனத்துக்கு சென்றது.
பனமரத்துப்பட்டி ஒன்றியம், மூக்குத்திபாளையம் ஊராட்சி செயலர் முருகன், 41. இவர், ஊராட்சி நிதியில், 11 லட்ச ரூபாய்க்கு மேல், கையாடல் செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவகாசம் கொடுத்தும், செயலர் பணத்தை செலுத்த முன்வரவில்லை. அதன் எதிரொலியாக, முறைகேடு செய்த ஊராட்சி செயலர் முருகன், போதை பி.டி.ஓ., ராஜகணேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் ரோகிணி, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
சித்தா படிப்பில், 'சீட்' கிடைத்தும் பணமின்றி பரிதவிக்கும் மாணவி

சித்தா படிப்பில், 'சீட்' கிடைத்தும் பணமின்றி பரிதவிக்கும் மாணவி
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சித்த மருத்துவம் படிக்க, 'சீட்' கிடைத்தும், வறுமை காரணமாக கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த குணபத்மபிரியா, 17. பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,114 மதிப்பெண் பெற்றார். மருத்துவக் கல்லுாரியில் சேர, 'நீட்' தேர்வு எழுதியதில், 77 மதிப்பெண்களே எடுத்தார்.
இதனால், சித்த மருத்துவம் படிக்க விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில், கோவை, தனியார் சித்த மருத்துவக் கல்லுாரியில், சீட் கிடைத்தது. கல்வி கட்டணம், 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி, வரும், 19ம் தேதிக்குள் சேர வேண்டும். மிகவும் வறுமை நிலையில் உள்ள பத்ம பிரியாவின் பெற்றோர், '35 ஆயிரம் ரூபாய் செலுத்தி, படிக்க வைக்க இயலாது' என, தெரிவித்து விட்டனர்.

மாணவி பத்மபிரியா கூறியதாவது: என் தந்தை மாற்றுத் திறனாளி. வழக்கறிஞரான அவரால், நீதிமன்றத்தில் நீண்ட நேரம் நின்று வாதாட முடியாததாலும், போதிய வருமானம் இல்லாததாலும், வழக்கறிஞர் தொழிலை விட்டு, திருக்குறள் ஞானமன்றத்தில் சேர்ந்து, திருக்குறளை பரப்பி வருகிறார். தாய், கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், முன்னாள் முதல்வர், ஜெயலலிதா ஆகியோரிடம் விருது பெற்றுள்ளேன்.
சித்த மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவ விரும்புவோர் - 85250 -10849 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நர்சிங் பட்டய படிப்பு விண்ணப்பம் : மாணவியரிடம் ஆர்வம் குறைவு

திருநெல்வேலி: நர்சிங் பட்டய படிப்புக்கு, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும், குறைவான விண்ணப்பங்களே விற்பனையாகிஉள்ளன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உட்பட, 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. 
இங்கு மருத்துவ பட்ட படிப்பு தவிர, நர்சிங் பட்ட படிப்பு மற்றும் நர்சிங் பட்டய படிப்புகளும் உள்ளன. நர்சிங் பட்டப் படிப்பில், பி.எஸ்சி., முடித்தவர்கள் சேரலாம்.
நர்சிங் பட்டய படிப்பிற்கு, பிளஸ் 2வில், அறிவியல், கணிதம் பாடத் திட்டங்கள் முன்னர் தகுதியாக இருந்தன. சில ஆண்டுகளாக, பிளஸ் 2வில் எந்த பாடத் திட்டமாக இருந்தாலும், நர்சிங் பட்டய படிப்பில் சேரலாம் என, அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டு நர்சிங் பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம் கடந்த வாரம் துவங்கியது. 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று வரை, 800 விண்ணப்பங்களே விற்பனை ஆகியுள்ளன.
கடந்த ஆண்டு விண்ணப்பம் வழங்க துவங்கிய இரண்டு நாட்களில், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன. 21ம் தேதி விண்ணப்பம் வாங்க கடைசி தேதி, 23ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், நர்சிங் பட்டய படிப்பு படிக்க போதிய ஆர்வம் இல்லை என, தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதை நிலைதான் நீடிக்கிறது.
விண்ணப்பம் வாங்க வந்த மாணவியர் சிலர் கூறியதாவது:கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அட்மிஷன் முடிந்து, வகுப்புகள் துவங்கி விட்டன. 
இந்தாண்டு அக்டோபர் மாதம் தான், விண்ணப்பம் வழங்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் கவுன்சிலிங் நடந்து, மாத கடைசியில் தான், வகுப்புகள் துவங்கும் நிலை உள்ளது.
இதனால், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பலரும், டிகிரி, பொறியியல் பட்ட படிப்பு, தொழில்கல்வி என, பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதனால், நடப்பாண்டு விண்ணப்பங்கள் வாங்க ஆர்வமில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தீபாவளி, மழை காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்



தீபாவளி மற்றும் தொடர் மழை காரணமாக சென்னை நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அக்டோபர் 17, 2017, 04:00 AM

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக சென்னை புறநகரில் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் கார், இருசக்கர வாகனங்களில் சென்னை நகரை வலம் வந்தனர்.

இதனால், முக்கிய வணிக தலங்களான தியாகராயநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பாடி, வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க நேற்று காலை முதலே தொடர் மழை பெய்து வந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்ததுடன், வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பல மணி நேரமாக மக்கள் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் மாளிகையில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டதால் அண்ணாநகர், கிண்டி, அண்ணாசாலை, மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன்காரணமாக பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. பலர் முன்பதிவு செய்த பஸ், ரெயிலை தவற விட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதனால் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அலை மோதியது. தீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு மூலமாக அரசுக்கு ரூ.7.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், யாரேனும் பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர்.

Monday, October 16, 2017


Talwars refuse Rs 49,500 remuneration for medical services while in jail
ANI
PublishedOct 16, 2017, 11:23 am IST


The jailor said that there was a strong possibility of the couple to walk free from the jail by Monday noon.


The Jailor also informed that the couple would continue to visit the Dasna jail periodically so that the medical assistance could continue. (Photo: PTI)

Ghaziabad: The jailor of the Dasna jail, where Nupur and Rajesh Talwar, the parents of 14-year-old Aarushi, who was found murdered nine years back in Noida, had been lodged in since November 2013, has said that while in jail, the dentist couple gave medical service for free to their prison inmates and refused remuneration amounting to Rs 49,500.

"The Talwars gave medical service for free, and refused remuneration. Had they taken it, the amount would have approximately been Rs 49,500," Jailor D. Maurya said.

The Jailor also informed that the couple would continue to visit the Dasna jail periodically so that the medical assistance could continue.

He also said that there was a strong possibility of the couple to walk free from the jail by Monday noon.

"The Court has opened after a two-day holiday and there is a strong possibility of the Talwars being released today. Rajesh and Nupur Talwar will be accompanied to their house by security," he added.

The Allahabad High Court had, on Friday, acquitted the Talwars of charges of their daughter's murder, setting aside the CBI court's earlier order, in connection with the double murder case that shook the nation in 2008.

According to reports, as per Section 437 (a) of the CrPC, the Talwars, even after their acquittal, will have to furnish a surety to ensure that they will be present in the court in case the state files an appeal in a higher court.

A special CBI Judge, S. Lal, had earlier held Rajesh and Nupur Talwar guilty of Aarushiand domestic help Hemraj">conspiracy and murder of Aarushi and domestic help Hemraj.

The order, however, failed to bring a closure to the case and the public opinion remained divided, even after years of the conviction.

On May 16, 2008, Aarushi was found murdered inside her bedroom in the flat in Jal Vayu Vihar - her throat slit with surgical precision.

It was initially suspected that house help Hemraj had killed Aarushi. However, the case took a shocking turn when Hemraj's body was recovered two days later from the terrace of the same flat.

The police then began to suspect the Talwars and said Rajesh had murdered the two after finding them in an "objectionable" position.

After widespread outrage, the case was transferred from the Uttar Pradesh Police to the CBI that exonerated the parents and suspected the Talwars' assistant Krishna along with two domestic servants, Rajkumar Sharma and Vijay Mandal.

In 2009, the CBI handed over the investigation to a new team, which recommended closing the case due to critical gaps in investigation.

Based on circumstantial evidence, it named Rajesh as the sole suspect, but refused to charge him due to lack of evidence.

Rajesh was first arrested by the Uttar Pradesh Police on May 23, 2008 after which he was lodged at the Dasna Jail and let off on July 11, 2008.

Later in 2012, his wife Nupur surrendered before a Ghaziabad court before trial and was also sent to the Dasna Jail.
ஆருஷி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையானாலும் கைதிகளுக்கு தல்வார் தம்பதி பல் சிகிச்சை

Published : 16 Oct 2017 09:25 IST

தஸ்னா



ராஜேஷ் - நுபுர் தம்பதி - THE HINDU


‘‘மகள் ஆருஷி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தல்வார் தம்பதியினர், சிறையில் இருந்து சென்ற பிறகும் கைதிகளுக்கு பல் சிகிச்சை அளிப்பார்கள்’’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி அருகே நொய்டாவில் 14 வயது சிறுமி ஆருஷி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த 2 கொலைகளையும் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் ஆகியோர் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உத்தரபிர தேச மாநிலம் தஸ்னா சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து இன்று இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தஸ்னா சிறை அதிகாரிகள் கூறியதாவது;

ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் பல் மருத்துவர்களாக உள்ளனர். எனவே, சிறையில் இருந்து விடுதலையாகி சென்றாலும், 15 நாட்களுக்கு ஒரு முறை சிறைக்கு வந்து பல் பிரச்சினைகள் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். சிறை மருத்துவமனையில் செயல் படாமல் இருந்த பல் மருத்துவப் பிரிவை மீண்டும் தொடங்குவதற்கு தல்வார் தம்பதியினர் நிறைய உதவிகள் செய்தனர். கைதிகள் மட்டுமன்றி சிறை அதிகாரிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தல்வார் தம்பதியினர் சிகிச்சை அளித்தனர்.

இவ்வாறு சிறை அதிகாரிகள் கூறினர்.

ராஜேஷ் தல்வாரின் சகோதரர் தினேஷ் தல்வார் கண் மருத்துவராக உள்ளார். அவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறைக்கு வந்து கைதிகள் உட்பட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. - பிடிஐ
சென்னை மாநகர் மற்றும் புறநகரில் பலத்த மழை
2017-10-16@ 16:57:07

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகரில் பலத்த மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இவர்கள்தான் நம் தீபாவளியை வண்ணமயமாக்குகிறார்கள்!


By ENS  |   Published on : 16th October 2017 04:37 PM 
DIWALI


தொட்டு விடும் தூரத்தில் வந்துவிட்டது தீபாவளிப் பண்டிகை. கடைத்தெருக்களும், பேருந்து நிலையங்களும் கூட்டங்களால் நிரம்பி, எங்கும் ஒரு பண்டிகை வாசம் மணக்கிறது.
இந்த நேரத்தில், நம் தீபாவளிப் பண்டிகையை வண்ணமயமாக்கும் பட்டாசு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் சங்குச் சக்கரம் சுற்றுகிறதா, வான வேடிக்கைகள் வண்ணமயமாக மிளிர்கிறதா? கேள்விக்கான விடை..
செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு அறை, மெலிதான மேற்கூரை, ஒரு அறையில் 4 தொழிலாளர்கள் அமர்ந்து கருப்பும், வெள்ளையும் கலந்த பொடியை ஒரு காகிதத்தில் வைத்து மடிக்கிறார்கள். அவர்களது உடல் பட்டாசுக்கான வெடிமருந்துப் பட்டு வெள்ளை நிறத்தில் மின்னுகிறது.
இவர்களைப் போல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி நெருங்குவதால் 24 மணி நேரமும் பல தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
பல சமயங்களில் அதிக ஆபத்துக் கொண்ட வேதிப் பொருட்களும், குறைந்த பயிற்சி கொணட தொழிலாளர்களும் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் போது பல எதிர்பாராத விபத்துகளும் நடக்கின்றன.

கடந்த 2016 - 17ம் கால கட்டத்தில் மட்டும் சிவகாசியில் 16 பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து அதில் 30 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இதில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய பட்டாசு தயாரிப்பு விபத்தில் 38 பேர் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொழிலாளர்களுக்கு, எதிர்பாராத விபத்துக்கள் மட்டுமே பிரச்னையாக இல்லை. உடல்நல பாதிப்புகளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள்தான். ஆஸ்துமா, காசநோய் போன்ற பல நோய்களுக்கும் இந்த வேதிப்பொருட்கள் காரணமாக அமைகின்றன.
என்னதான் நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைகளுக்கு இவர்கள் வண்ணமூட்டினாலும், இவர்களது வாழ்க்கை இன்னும் கருப்பு வெள்ளையாகவே உள்ளது. 
 


செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் இருக்க...

By DIN  |   Published on : 16th October 2017 02:40 PM  |

battery

செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் இருக்க...

By DIN  |   Published on : 16th October 2017 02:40 PM  |   அ+அ அ-   |  
battery
Ads by Kiosked
செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க வேண்டுமா? இதைத் தவிர்க்க சில எளிய வழிகள்:
இருக்க வேண்டுமா? இதைத் தவிர்க்க சில எளிய வழிகள்:
வைபரேட் எனும் எதிரி: போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது. அதேபோன்று ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும். ஹேப்டிக் ஸ்பீட் பேக் எனும் பொறியையும் நிறுத்தி வைக்கவேண்டும்.  வால் பேப்பர்கள், ஸ்மார்ட் போன் அமோல்டட் டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தால், கருப்பு நிற வால் பேப்பர்களைப் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் அதிகம் செலவாகாது.
ஆன்ட்ராய்டு அப்டேட்:  ஸ்மார்ட் போன் செயல்பாட்டை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வப்போது இயங்குதளத்துக்கான அப்டேட்களை அளிக்கும். ஒவ்வோர் அப்டேட்டுகளையும் தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரியின் ஆயுளைக் குறிக்கும்.
கை கொடுக்கும் ஏர்பிளேன் மோட்: ஸ்மார்ட் போனில் உள்ள ஏர்பிளேன் மோட் ஆப்ஷன் உங்கள் வெளியுலகத் தொடர்பை மட்டுமல்ல; வீடியோ போன்ற மல்டி மீடியா ஆப்ஸ்களுக்குத் தேவையான பேட்டரி சார்ஜை அதிக நேரம் அளிக்கவல்லது. நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களில் நீங்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட்போன் ஆன்டெனா அதிகப்படியான பேட்டரி பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதால் அதுபோன்ற நேரங்களில் மொபைலை ஏர்பிளேன் மோடுக்கு மாற்றிவிடுங்கள்.
ஜி.பி.எஸ், வைஃபை மற்றும் புளுடூத்: தேவையற்ற நேரங்களில் ஜி.பி.எஸ். புளுடூத் போன்றவற்றை ஆஃப் செய்து விடுங்கள். அதேபோல மொபைல் நெட்வொர்க் வழியாக இணையத்தில் இணைத்திருந்தால், வைஃபை இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
-ஆர்வி

மகனுக்காக வீட்டை உருமாற்றிய அஜித்!


By DIN  |   Published on : 16th October 2017 11:38 AM  
Ajith-Kumar-From-RC-Airfield-2

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில் ஒரு வாடகை வீடு எடுத்து சில மாதங்கள் தங்கியிருந்தார். அதற்குக் காரணம் அவருடைய மகன் ஆத்விக்குக்காக சொந்த வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும்படியான சில மாற்றங்களைச் செய்வதற்காகத் தான்.
காதல் மனைவி ஷாலினிக்கு அன்பான அக்கறையான கணவராக, மனைவியின் பேட்மிண்டன் பயிற்சிகளை ஊக்குவிப்பவராக இருந்து வருகிறார். பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் இந்த தம்பதியரின் வாழ்க்கையை மேலும் அழகாக்கியது. அஜித் தனது சொந்த வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனது குட்டி இளவரசனுக்காக வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்த அஜித், வாடகை வீட்டுக்கு இடம் பெயர்ந்தார். தனது திருவான்மியூர் வீட்டை தற்போது முற்றிலும் ரீமாடல் செய்து விட்டார்.
நவீன வகையில் உருவாகியுள்ள அவ்வீட்டின் கதவு முதல் சமையலறை வரை எல்லா கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும். மனைவி ஷாலினிக்குத் தனி பேட்மிண்டன் கோர்ட் வசதியும் மகளுக்கு பரத நாட்டியம் பிராக்டிஸ் செய்ய தனி இடமும் அமைத்துக் கொடுத்துள்ளார் அஜித்.
அன்பும் அக்கறையும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடிப்படை. அது சினிமா நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தான் பணி புரியும் துறையில் கடினமாக உழைப்பதுடன், சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவாக இருப்பது பாராட்டுக்குரியது.  

Dentist couple acquitted in Aarushi's murder, walks out of Dasna Jail after 4 yrs

THE ASIAN AGE / PTI

Published : Oct 16, 2017, 5:07 pm IST

Talwars were expected to walk out from Dasna prison on Firday, but the necessary paperwork and the weekend pushed their release to Monday.


The Allahabad High Court had on Thursday had acquitted the Talwars, whom CBI had implicated in the murder of their daughter Aarushi, who was found dead at their Noida home in 2008. (Photo: PTI/File)

Ghaziabad: Dentist couple, Rajesh and Nupur Talwar were on Monday released from Ghaziabad's Dasna Jail after Allahabad HC acquitted in the murder of their daughter, Aarushi and domestic help Hemraj.

Talwars were expected to walk out from Dasna prison on Friday, but the necessary paperwork and the weekend pushed their release to Monday.

The Allahabad High Court had on Thursday had acquitted the Talwars, whom CBI had implicated in the murder of their daughter Aarushi, who was found dead at their Noida home in 2008.

According to reports, as per Section 437 (a) of the CrPC, even after their acquittal, the Talwars will have to furnish a surety to ensure that they will be present in the court in case the state files an appeal in a higher court.

The jailor of Dasna Jail, Dr Maurya informed that the duo breathed a sigh of relief after the announcement of their acquittal.

The judgement in the case was passed by a two judges bench comprising Justice B K Narayan and Justice Arvind Kumar Mishra.

Allowing the appeals the court was of the view that as per circumstances and evidence on record Aarushi's parents cannot be held guilty.

"ஆறு கிலோ சிக்கன் நான்கு கிலோவாக குறைந்தது எப்படி?" மாணவர் விடுதி ஆய்வில் சிவகங்கை கலெக்டர் லதா


பாலமுருகன். தெ
சாய் தர்மராஜ்.ச





சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்தமாதம் லதா பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக வந்திருக்கும் கலெக்டர் வசாயிகள் பிரச்சனைகள், பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பாரா? என மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன.

மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்

இந்த நிலையில், கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த லதா, “மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன். குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு போதுமான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உரிய பதில் சொல்லக் கூடிய அதிகாரிகள்தான் வர வேண்டும். வரவேண்டியவர்களுக்கு மாறாக, கீழ்நிலையில் இருக்ககூடியவர்கள் வந்திருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்நிலையில் லதா பதவியேற்ற பின்னர் நடந்த முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தேவகோட்டையில் இருந்து வரவேண்டிய நகராட்சி ஆணையாளர் வராமல் அவருக்குப் பதிலாக வயர்மேன் வந்திருந்தார். இதைக் கண்டு கோபமான ஆட்சியர் "நான் சொன்னேன்னு சொல்லுங்கள் இனிமேல் கமிஷனர் அல்லது அவருக்குக் கீழே உள்ள உயர் அதிகாரிதான் வரவேண்டும்" என்று சொன்னதோடு இல்லாமல் "கமிஷனரை என்னை வந்து சந்திக்கச்சொல்லுங்கள்" என்றார். லதாவின் அதிரடிகளைக் கண்டு அதிகாரிகள் ஆடிப்போய் இருக்கிறார்கள். எந்த அதிகாரியும் பொய் சொல்லி தப்பிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

மக்களோடு மக்களாக

இது இப்படி இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு காளையார்கோவில் அருகே உள்ள அதப்படக்கி கிராமத்துக்கு முதல் நாள் இரவே போய் தங்கிவிட்டார் லதா. அங்குள்ள மக்களோடு மக்களாக இருந்து ரேசன் கடை, அரசு பள்ளி, கண்மாய், குளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களோடு உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டார். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் ஆய்வுசெய்தவர், "இன்றைக்கு என்ன சாப்பாடு" என்று வார்டனிடம் கேட்டார். "சிக்கன் கறி, சாப்பாடு" என்றதும்,"எத்தனை கிலோ சிக்கன் வாங்கினீங்க" என்று கேட்டார். "6 கிலோம்மா" என்றார் வார்டன். "தராசுல எடைபோடுங்க" என்று உத்தரவிட்டார். ஆனால், சிக்கன் 4 கிலோ எடை மட்டுமே இருந்தது. "யாரை ஏமாத்தப் பாக்குறீங்க. மாணவர்களின் சாப்பாட்டு விஷயத்தில் கைவைக்ககூடாது" என்று அந்த வார்டனை எச்சரிக்கை செய்தார் ஆட்சியர்.



கொசுவலை தராதது ஏன்?

காரைக்குடி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த ஆட்சியர், டெங்கு பாதித்த நோயாளிகளைப் பார்வையிட்டார்.அப்போது கொசு வலைகள் இல்லாமல் நோயாளிகள் இருந்ததைப் பார்த்துவிட்டு, “ஏன் கொசு வலைகொடுக்கவில்லை" என்று கேட்டார். அதற்கு செவிலியர்கள், "நோயாளிகள்தான் கொசுவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்..." என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நோயாளிகள், "இவர்கள்தான் கொசு வலைகொடுக்கவில்லை" என்று உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்கள்.

டெங்கு காய்ச்சல் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளைப் பார்வையிட்ட கலெக்டர், “உங்கள் குழந்தைகளுக்கு என்ன காய்ச்சல் என்று தெரியுமா" என்று கேட்டார் . "தெரியாது" என்றவர்களிடம் "உங்கள் குழந்தைகளுக்கு வந்திருப்பது டெங்கு காய்ச்சல். முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துப் போங்கள்" என்று அறிவுறுத்தினார். "டெங்கு கொசு உற்பத்தியாகும் வீடுகள் கடைகள் வணிகநிறுவனங்கள், எலிசா டெஸ்ட் கருவி இல்லாமல் டெங்கு காய்ச்சல் குறித்து டெஸ்ட் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கலெக்டர் லதா எச்சரித்தார்.



சிவகங்கை நகராட்சியில் சில தெருக்களைச் சுற்றி வந்த ஆட்சியர், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலும், தண்ணீர் தேங்கிய இடங்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பக்கத்தில் இருந்த நகராட்சி ஆணையாளரைக் கடுமையாக எச்சரித்தார். "நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. இப்படி இருந்தால் டெங்கு வராமல் என்ன செய்யும். தெருக்களைச் சுத்தமா வைக்க நடவடிக்கை எடுங்க" என்று உத்தரவிட்டார். இப்படி ஆட்சியரின் மக்கள் நலன் சார்ந்த அதிரடிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சீரகக் குடிநீர், ஏலாதி சூரணம்... தீபாவளி இனிப்புகளின் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள எளிய வழிகள்! #HealthAlert

vikatan
Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

நெருங்கிவிட்டது தீபாவளி. இந்த தீப ஒளித் திருநாளில் முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று பட்டாசு மற்றொன்று இனிப்பு. பட்டாசு என்பது தொடக்கத்திலிருந்தே சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமான வில்லன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இனிப்புக்கோ தொடக்கத்திலிருந்தே நேர்மறையான கதாபாத்திரம்தான். பல வருடங்களுக்கு முன்னர் இனிப்பு, ஆரோக்கியத்தை வாரி வழங்கும் ஹீரோவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது கிடைக்கும் இனிப்புகளை, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வில்லன்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. தீபத் திருநாளில் இனிப்புகளின் வருகை, அவற்றின் பரிணாம வளர்ச்சி, கலப்பட இனிப்புகள் மற்றும் அதிகளவு இனிப்புகளால் உண்டாகும் உடல் உபாதைகள், அவற்றுக்கான மருந்துகள்... அனைத்தையும் பார்ப்போம்!




பலகாரத்தின் பரிணாமம்!

தீபாவளி அன்று மட்டுமே கிடைத்த நெல்லரிசிச் சோறுதான் பல வருடங்களுக்கு முன்னர் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு மிகப்பெரிய ஸ்வீட் ரெசிப்பி. காலப்போக்கில் விதவிதமான பலகாரங்கள் தீபாவளி தினத்தன்று இடம்பிடிக்க ஆரம்பித்தன. கலாசாரத்துக்கேற்ப இடம்பிடிக்க வைத்தோம் என்றும் சொல்லலாம். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தொடங்கும் பலகாரத் தயாரிப்புப் பணிகள், இப்போதெல்லாம் ஒரு வருடத்துக்கு முன்னரே தொடங்கிவிடுகின்றன... ’தீபாவளி பலகாரச் சீட்டு’ என்ற பெயரில்!

பாட்டி சுட்ட பலகாரம்!

’காக்கா நரி’ கதைக்கு, பாட்டி சுட்ட வடைதான் சிறப்பு. அதேபோல, தீபாவளிப் பண்டிகைக்கு வீட்டில் உள்ள பாட்டி சுட்ட பலகாரங்கள்தான் மிகச் சிறப்பானவை. இப்போது கொண்டாடப்படும் தீபாவளிகளில், வீட்டில் சுட்ட பலகாரங்களும் இருப்பதில்லை, பாட்டிகளும் இருப்பதில்லை. அப்போதெல்லாம் வீடுகளில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளில் உடல்நலத்தைச் சீராக்கும் கூட்டுப் பொருள்கள் சேர்ந்திருந்தன. இனிப்புச் சுவையின் உயிர்ப்பையும் நாம் உணர்ந்தோம்.




பாட்டியும், பலகாரங்கள் செய்வதில் கைத்தேர்ந்தவர்களும் தயாரித்த இனிப்பு-கார வகைப் பண்டங்களில் சுவை, மணத்தோடு சேர்ந்து ஆரோக்கியமும் நிறைந்திருந்தன. அவர்களுக்குச் செயற்கை நிறமிகளைப் பற்றியோ, ரசாயனங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. ஆனால், அவர்கள் செய்த பண்டங்களின் சுவைக்கு ஈடு இணையில்லை. பாரம்பர்யப் பலகாரங்களுக்கு என்றுமே மகத்துவம் அதிகம்.

’எனக்கு சர்க்கர வியாதி இருக்கு, நான் ஸ்வீட் சாப்பிடறதில்லை’ என்று சில பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் சொல்லியதாக நினைவில்லை. பாரம்பர்ய இனிப்புகளைச் சாப்பிட்டபோது நோயின்றி வாழ்ந்தோம். பண்டிகை நாளன்று அதிகளவில் பலகாரங்கள் சாப்பிட்டால்கூட பெரிதாகத் தொந்தரவுகள் இருக்காது.

கலர் கலர் இனிப்புகள் வேண்டாமே!

இன்று தீபாவளி இனிப்பு-காரங்கள், பல வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன. வீட்டிலேயே செய்யப்பட்ட அதிரசம், லட்டு, முறுக்கு, சீடை, சிறுதானியங்களால் செய்யப்பட்ட தின்பண்டங்கள் போன்றவை ஓரங்கட்டப்பட்டுவிட்டன. மஞ்சள், சிவப்பு, பச்சை என கண்ணைப் பறிக்கிற கலர்களில், கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கவர்ச்சியான இனிப்புகளில்தான் மனம் நிலைகொள்கிறது. வழக்கம்போல நாமும் நிறங்களால் ஈர்க்கப்பட்டு, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறோம். உதாரணமாக, ’ஜிலேபியின்’ நிறம் வருடா வருடம் கூடிக்கொண்டே போகிறது... யாரைக் கவர்வதற்காகவோ!




கலப்பட இனிப்புகள் என்பது மிகப் பெரிய மோசடி. அவற்றுக்கு வண்ணங்களைக் கொடுப்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் செரிமானம் சார்ந்த பல உபாதைகள் உண்டாகின்றன. பண்டிகை நாளன்று மட்டுமல்லாமல், தொடர்ந்து அதிகளவில் சாப்பிடும்போது, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சரி அப்போது இனிப்புகளே வேண்டாமா? இனிப்புகளைச் சாப்பிடலாம் தவறில்லை. அவை நமது பாரம்பர்ய இனிப்புகளாக இருந்தால் மிகவும் நல்லது. பாரம்பர்ய இனிப்புகளைப் பற்றி வலைதளத்தில் தேடுவதற்குப் பதிலாக வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். பல பலகார வகைகள் தெரியவரும். தவிர்க்க முடியாத இன்றையச் சூழ்நிலையில் சிறிதளவு இனிப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், கண்கள் கூசும் நிறங்களில் இருக்கும் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

செரிமானக் கோளாறுகள்... கவனம்!

முன்பெல்லாம் பண்டிகை நாளன்று மட்டும் அதிக இனிப்புகளைச் சாப்பிட்டோம். இப்போது அனுதினமும் பண்டிகையைப்போல, அதிக இனிப்புகளைச் சாப்பிடுகிறோம். தீபாவளியன்று சில வகை இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் முதல் தொந்தரவு செரிமானம் சார்ந்தது. வயிறு உப்புசம், வயிற்றுவலி, மலக்கட்டு, மந்தம், உணவு எதிர்த்தெடுத்தல் (எதுக்களித்தல்) எனப் பிரசனைகள் நீளும். தேவைக்கு மட்டும் இனிப்பைச் சுவைத்து நம்மை உற்சாகப்படுத்திக்கொள்வது நல்லது. தீபாவளி விடுப்போடு சேர்த்து, மறுநாள் உண்டாகும் உடல் உபாதைகளுக்காகவே கூடுதலாக விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் பலர் இருக்கின்றனர்.

சீரகக் குடிநீர்... சிறப்பு!

தரமற்ற இனிப்புகள், அதிகளவு இனிப்புகளைச் சாப்பிடுவதால் தோன்றும் செரிமானம் சார்ந்த பிரச்னைகளுக்கு, சிறிதளவு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாகக் கொதிக்கவைத்துப் பருகலாம். ‘அகத்தைச் சீராக்கும் சீரகம்’ என்பதை மறந்துவிட வேண்டாம். வாயுவைக் கண்டிக்கும் தன்மை (அகட்டுவாய்வகற்றி) சீரகத்துக்கு இருக்கிறது.


பஞ்ச தீபாக்கினி சூரணம் பலன் தரும்!

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். வயிற்றில் நிலைகொண்ட மந்தத்தைப் போக்குவதில் பஞ்ச தீபாக்கினி சூரணம் பலன் தரும். பஞ்ச தீபாக்கினி சூரணத்தில் சேரும் சுக்கு, மிளகுக்கு நஞ்சுமுறிவு தன்மை இருப்பதால், உடலில் தேங்கிய நச்சுகளும் நீங்கும். அன்று தயாரிக்கப்பட்ட பாரம்பர்ய இனிப்புகளில் சீரகம், ஏலம் போன்றவை அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கும். இன்றோ சீரகம், ஏலம் மாதிரியான சுவை தரும் செயற்கைச் சுவையூட்டிகள்தான் சேர்க்கப்படுகின்றன.




தீபாவளி லேகியம் நல்லது!

செரிமான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தீபாவளிக்கென்றே சிறப்பாக அந்தக் காலத்தில் லேகியம் தயாரிக்கப்படுவதுண்டு. பெயரளவில் பல மாறுதல்களைப் பெற்று இப்போது `தீபாவளி லேகியம்’ (சுக்கு, வாய்விடங்கம், மிளகு, சீரகம், லவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, தேன், நெய் சேர்த்து செய்யப்படுவது) என்று அழைக்கப்படுகிறது. லேகியம் என்றவுடன் மருந்து என நினைத்துவிட வேண்டாம். இனிப்பாகவும், கூடவே செரிமானத்தைப் பாதிப்படையாமல் வைத்திருக்கும் இனிப்பான மருந்தாகவும் தீபாவளி லேகியம் பயன்படும்.

ஓமக் குடிநீர், சோம்புக் குடிநீர் போன்றவையும் செரிமான உபாதைகளுக்குச் சிறந்தவை. இவை தவிர இஞ்சி லேகியம், செளபாக்கிய சுண்டி லேகியம், ஏலாதி சூரணம், அஷ்டச் சூரணம் போன்ற மருந்துகளும் பயனளிக்கும். இனிப்புகளைச் சாப்பிட்டவுடன் வெந்நீர் அருந்துவது சிறந்தது. மிளகுத் தூளை அதிகமாக உணவுகளில் சேர்க்கவேண்டியதும் அவசியம். சீரகக் குடிநீர், ஓமக் குடிநீர், சோம்புக் குடிநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் போன்றவற்றை வீட்டிலேயே செய்யலாம். இவை சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

தீப ஒளித் திருநாளை தீபங்களோடும், அளவான இனிப்புகளோடும் கொண்டாடுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எளிமையான இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி மகிழ்ச்சியாகக் குதூகலிப்போம்! இனிப்புகள் மகிழ்ச்சி தரக்கூடியவை... அவற்றில் ஆரோக்கியக் கூறுகள் நிரம்பியிருக்கும் வரை!
உயிருக்கு உலைவைக்கும் அரசு பேருந்துகள்... கவலைப்படாத தமிழக அரசு... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஜெ.அன்பரசன்

Chennai:

தீபாவளி வந்துவிட்டது, அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும். சென்னையிலிருந்து மட்டும் பல லட்சம் மக்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவு பேருக்கும் போதுமான பஸ் வசதி இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை. இருந்தாலும் அரசு ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன. தற்போதும் தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு 4,820 அரசுப் பேருந்துகளைச் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இவையும் நிச்சயம் போதாது என்பதே உண்மை. போதுமான அளவில் அரசுப் பேருந்துகள் இருக்கிறதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மறுபுறம், தற்போது இருக்கும் அரசுப் பேருந்துகள் நல்ல நிலையில் இருக்கிறதா...? அதுதான் இல்லை என்கின்றனர் பயணிகள். சென்றுக்கொண்டிருக்கும்போதே பஸ் பிரேக் டவுன் ஆவது, மழை பெய்யும்போது பஸ்ஸுக்குள் குடை பிடிப்பது போன்ற நிகழ்வுகளைத் தினந்தோறும் செய்திகளில் படித்திருப்போம், நேரடியாகவும் பார்த்திருப்போம்.

பேருந்து விபரங்கள்

இவையனைத்துக்கும் காரணம் சொல்கிறார் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார். "தமிழ்நாட்டுல மொத்தம் 22,533 அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. அதில், சென்னை மாநகரப் பேருந்துகள் (MTC) 3,688; நகரப் பேருந்துகள் (TOWN SERVICE) 6,916; புறநகர் சேவைப் பேருந்துகள் (MOFUSSIL SERVICE) 8,561: மலைவழிப் பேருந்துகள் (GHAT SERVICE) 528, மாவட்டங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (INSIDE STATE) 648; வெளிமாநிலங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (OUTSIDE STATE) 435; ஸ்பேர் பஸ்கள் (SPARE BUS) 1,757 இருக்கின்றன. போக்குவரத்துத் துறை என்பது சர்வீஸ் செக்டார் (SERVICE SECTOR). மக்களுக்குச் சேவை செய்வதில் யாருடைய குறுக்கீடும் வரக்கூடாது. எந்த காரணத்தாலும் இந்தச் சேவை தடை ஆகக்கூடாது என்றுதான் போக்குவரத்துத் துறை 'அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு' விதியில் இருக்கிறது. ஆனால், இன்று போக்குவரத்துத் துறை பெரும் நஷ்டத்தில் ஓடுகிறது. அதற்குக் காரணம் அரசாங்கம் மட்டும்தான். ஒருவருடத்துக்கு 4,000 புது பேருந்துகளை அரசு வழங்க வேண்டும். ஆனால், இன்று 200 பேருந்துகள் வருவதே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது.

காலாவதியான பேருந்துகள்



ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 22,533 மொத்த அரசுப் பேருந்துகளில் சுமார் 14,000-க்கும் அதிகமான அதாவது, 60 சதவிகிதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. ஒரு பேருந்தின் ஓட்டம் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக்கூடாது. இன்று, தமிழ்நாட்டில் இயக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 60 சதவிகிதப் பேருந்துகள் பல ஆண்டுகளாக இப்படித்தான் இருந்துவருகின்றன. இதுபற்றிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், “பலமுறை தமிழக அரசிடம் சொல்லிவிட்டோம். ஆனால், யாரும் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு டெப்போவிலும் பேருந்துகளுக்கு பாடி கட்டும் யூனிட் இருந்தது. ஒருநாளைக்கு 2-லிருந்து 4 பேருந்துகள் வீதம் அந்தந்த டெப்போ ஊழியர்களே அதனைக் கட்டிவிடுவார்கள். ஆனால், அந்த யூனிட்கள் அனைத்தும் இன்று எடுக்கப்பட்டுவிட்டன. இதற்குக் காரணம், மொத்தமாக அரசு வழங்கும் பேருந்துகள் அனைத்தும் பாடி கட்டுவதற்காகக் கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் பாடி கட்டும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன்மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும் பங்கு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்கிறது.” என்கின்றனர்.

நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறை

பொதுவாக ஆம்னிப் பேருந்துகளில் 45 சீட்கள் இருக்கும். 300 கிலோ மீட்டருக்குக் கட்டணம் குறைந்தபட்சம் 600 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஒருமுறை அவர்களின் மொத்த வருமானம் 27,000 ரூபாய். அதே 300 கிலோமீட்டர்தான், சென்னை மாநகரப் பேருந்துகள் ஒருநாளைக்கு ஓடி சுமார் 1,500-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. ஆனால், அதன்மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 4,000- லிருந்து 5,000 ரூபாய் வரைதான். திடீரென்று டிக்கெட் விலையை ஏற்ற முடியாது. முதலில் பேருந்துகளின் தரத்தை ஆம்னி பஸ் அளவுக்கு உயர்த்த வேண்டும். பின்னர், மக்களே அதன் தரத்தைப் புரிந்துகொண்டு கட்டண ஏற்றத்துக்கு எதிர்ப்புச் சொல்லமாட்டார்கள். ஒருநாளைக்கு 8,000 பயணிகளை ஏற்றிச்செல்லும் மெட்ரோ ரயிலுக்கு அரசால் வழங்கப்பட்டத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், ஒருநாளைக்கு தமிழகம் முழுவதும் சுமார் இரண்டரைக் கோடி பயணிகளை ஏற்றிச்செல்லும் அரசுப் போக்குவரத்துத் துறைக்கு அரசு வழங்கியது 10,000 கோடி ரூபாய். தமிழகத்தில் பல பேருந்துகள், பல பணிமனைகள், 70-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள், பணிமனைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்கள் பெறப்பட்டன. இவையனைத்தும் போக்குவரத்துக் கழகம் சம்பாதித்த சொத்து. தற்போது அரசுப் பேருந்துகளில் சாதாரணப் பேருந்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 42 பைசாவும், விரைவுப் பேருந்துகளில் (Express) 56 பைசாவும், சொகுசுப் பேருந்துகளில் (deluxe) 60 பைசாவும், அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் (Super Deluxe)75பைசாவிலிருந்து 95 பைசாவரையும் வாங்கப்படுகிறது.



பேருந்துகளின் தரம் குறித்து அதனை இயக்கும் ஓட்டுநர் ஒருவரிடம் கேட்டோம். "பேருந்துகளை இயக்க எங்களுக்கே பயமாதான் இருக்கு. ஒவ்வொரு முறையும் பேருந்துகளை இயக்குறதுக்கு முன்னாடி எங்க தைரியத்தையும் மீறிக் கடவுள் நம்பிக்கையிலதான் பேருந்துகளை இயக்குறோம். எப்போ என்ன நடக்கும்னே தெரியாது. அந்த அளவுக்கு மோசமான நிலையிலதான் அனைத்து அரசுப் பேருந்துகளுமே இருக்கு. ஒருமுறை நைட்ல பயணிகளை ஏத்திக்கொண்டு போகும்போது ஹெட் லைட் ஆஃப் ஆகிடுச்சி. என்ன பண்றதுனே தெரியலை. அப்புறம் அந்த ராத்திரில ஒரு மெக்கானிக்க கூட்டிட்டு வந்து சரி பண்றதுக்குள்ள மூணு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சி. நேரத்துக்கு பஸ் வரலைன்னா டிரைவர் கண்டக்டரைத் திட்டுற மக்கள்... போக்குவரத்துத் துறையை இவ்ளோ மோசமா வெச்சிருக்குற அரசாங்கத்தைக் கேள்வி கேட்க மாட்டேங்குறாங்க" என்றார் வருத்தத்துடன்.

அரசு செய்யுமா?

''காலாவதியான பேருந்துகளை நிறுத்தி அதற்குப் பதிலாக புதிய பேருந்துகளைச் சொகுசு முறையில்விட்டுக் கட்டண முறையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மக்கள் அரசுப் பேருந்துகளில் விருப்பத்துடன் பயணம் செய்வார்கள். மக்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்தது போலவும் இருக்கும், போக்குவரத்துத் துறைக்கு லாபம் வந்ததுபோலவும் இருக்கும். மக்களை வாட்டி வதைக்கும் ஆம்னி கட்டணக் கொள்ளையில் இருந்து மக்கள் தப்பித்தது போலவும் இருக்கும். இதை அரசு செய்யுமா?" என்று கேள்வி எழுப்புகின்றனர் பயணிகள்.

கோர விபத்துகள்



கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை அரசுப் பேருந்துகள் எண்ணற்ற பல கோர விபத்துகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. அந்த விபத்துகளில் 6,864 பேர் இறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுப் பேருந்துகளில் ஏற்பட்ட விபத்துகளும் அதில் ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளும் ஆண்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2012-13-ம் ஆண்டு நடந்த கோர விபத்துகளின் எண்ணிக்கை 1,233. இந்த விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,382. 2013-14- ம் ஆண்டு 1,187 கோரவிபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 1,318 பேர் இறந்துள்ளனர். 2014-15-ம் ஆண்டு 1,165 விபத்துகள் நடந்துள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,331. 2015-16- ம் ஆண்டு 1,258 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,460 பேர் இறந்துள்ளனர். 2016-17-ம் ஆண்டில் 1,209 விபத்துகளும், இந்த விபத்துகளில் மொத்தம் 1,373 பேர்களும் இறந்துள்ளனர்.

பயணிகளின் கருத்தைக் கவனத்தில்கொள்ளுமா தமிழக அரசு?
தீபாவளி: துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் குவிந்த மக்கள்!

வெங்கட சேது.சி



தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், புத்தாடைகளை வாங்கவும், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்கவும் மக்கள் முக்கிய இடங்களில் குவிந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளி விற்பனை, பட்டாசுகள், இனிப்புகள் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி. வரி விதிப்பால், துணி ரகங்கள் மற்றும் பொருள்களின் விற்பனை சற்றே மந்தகதியில் தொடங்கினாலும், கடைசிநேரத்தில் சூடுபிடித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தி.நகர் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள், இனிப்பு வகைகள், துணி ரகங்களை வாங்கிச்செல்ல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் மக்கள் குவிந்தனர். மக்கள் வெள்ளம் அதிகளவில் குவிந்ததால், போலீஸார் கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


துணி ரகங்கள் மட்டுமல்லாமல் நகைகளையும் மக்கள் வாங்கிச் சென்றதால் ஜூவல்லரிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவிர, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு பஸ்களில் 4.52 கோடி ரூபாய் வரை முன்பதிவு நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல 1.4 லட்சம் பயணிகளும், பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னை மற்றும் வெவ்வேறு இடங்களுக்கும் செல்வதற்காக 73 ஆயிரத்து 300 பேரும் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்றும், நாளையும் சென்னையில் இதே நிலை தொடரும் என்பதால், போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும், பட்டாசுக் கடைகள், இனிப்புகள், துணிக் கடைகளிலும், வீட்டு உபயோகப் பொருள்கள் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது.


Chennai Metro timings for this Deepavali
DECCAN CHRONICLE.
PublishedOct 16, 2017, 6:23 am IST
UpdatedOct 16, 2017, 6:23 am IST

Chennai Metro Rail will be revising the timetable of train services for four days.

On October 16 and 17, the metro rail will start at 6 am and extend till 11 pm and on October 19 and 20 (Representational Image)


Chennai: On the occasion of Deepavali, Chennai metro rail will be revising the timetable of train services for four days.

“On October 16 and 17, the metro rail will start at 6 am and extend till 11 pm and on October 19 and 20, the operations will begin at 5 am and end at 10 pm (regular time),” said the official press statement.

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...