Tuesday, October 17, 2017


ஊராட்சி செயலர் பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

சேலம்: முறைகேடு ஊராட்சி செயலர், போதை பி.டி.ஓ., ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் கலெக்டர், ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர், ராஜகணேஷ், 55. இவர், அக்.,13, மதியம் குடிபோதையில், பணியில் இருந்துள்ளார். 
அப்போது, சந்திக்க சென்ற பொதுமக்களிடம், அவர் உளறியதால் அதிர்ச்சியடைந்தனர். பலமுறை அவர், பணிக்கு போதையில் வருவது வாடிக்கையாகிவிட்டது. 'உயரதிகாரி என்பதால், அவரை நாங்கள் என்ன செய்ய முடியும்' என, அங்குள்ள ஊழியர்களே புலம்பியது குறித்து, கலெக்டர் கவனத்துக்கு சென்றது.
பனமரத்துப்பட்டி ஒன்றியம், மூக்குத்திபாளையம் ஊராட்சி செயலர் முருகன், 41. இவர், ஊராட்சி நிதியில், 11 லட்ச ரூபாய்க்கு மேல், கையாடல் செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவகாசம் கொடுத்தும், செயலர் பணத்தை செலுத்த முன்வரவில்லை. அதன் எதிரொலியாக, முறைகேடு செய்த ஊராட்சி செயலர் முருகன், போதை பி.டி.ஓ., ராஜகணேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் ரோகிணி, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024