'காஸ்' முன்பதிவில் சிக்கல் : வாடிக்கையாளர்கள் அவதி
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள, 'பாரத் காஸ்' வாடிக்கையாளர்கள், சமையல் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் சமையல் காஸ் முன்பதிவு செய்ய, ஐ.வி.ஆர்.எஸ்., நடைமுறையில் உள்ளது. இதில், வாடிக்கையாளர், தமது மொபைல் போனில் இருந்து, சில வினாடிகளில், முன்பதிவு செய்யலாம் என்பதால், வாடிக்கையாளர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, ஒரு வாரமாக, பாரத் காஸ் நிறுவன வாடிக்கையாளர்கள், மொபைல் போன் வாயிலாக, முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட மொபைல் போன் நிறுவனத்தின் எண்ணில் மட்டுமே, முன்பதிவு நடக்கிறது. பிற நிறுவனங்களின் இணைப்பு உள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டால், சரியான எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறி, இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றனர். 'இப்பிரச்னை,ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்; அதுவரை வாடிக்கையாளர்கள், எஸ்.எம்.எஸ்., ஆன்லைன், மொபைல் ஆப் அல்லது லேண்ட் லைன் வாயிலாக புக் செய்யலாம்,'' என, பாரத் காஸ் நிறுவன விற்பனை மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
- நமது நிருபர்
No comments:
Post a Comment