Tuesday, October 17, 2017

முன்னாள் அதிகாரி மனைவி, மகனுக்கு சிறை : சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு

சென்னை: வருமானத்துக்குஅதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மரணமடைந்தஅரசு அதிகாரியின்மனைவி மற்றும் மகனுக்கு, தலா, மூன்று ஆண்டு சிறைதண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பத்திரப்பதிவு துறையில், மாவட்ட பதிவாளராக பணியாற்றியவர் ராமச்சந்திரன். சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், துறை விசாரணைக்கு பின், பணி நீக்கம் செய்யப்பட்டார்.வருமானத்துக்கு அதிகமாக, 44.81 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, ராமச்சந்திரன் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவி மல்லிகா மற்றும் மகன் புனிதகுமாருக்கு
எதிராகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பின், ராமச்சந்திரன் மரணமடைந்தார்.இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகன் மீதான வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை, நீதிபதி எஸ்.காஞ்சனா விசாரித்தார். ஊழல் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு வழக்கறிஞர் பூர்ணிமாதேவி ஆஜரானார்.

நீதிபதி காஞ்சனாபிறப்பித்த உத்தரவு:இந்த அளவுக்குசொத்துகள் வாங்க, ராமச்சந்திரனின் வருமானம் போதாது. அவரது மனைவி மற்றும் மகன், பொது ஊழியர்கள் அல்ல. உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்காக, பொது ஊழியர்கள் அல்லாதவர்கள் மீதும், வழக்கு தொடரலாம். மனைவி மற்றும் மகனுக்கு, தனிப்பட்ட முறையில் வருமானம் கிடையாது. மனைவி, இல்லத்தரசி; மகன், எந்த வேலையிலும் இல்லை. அவர்களுக்கு கணிசமான வருமானம் வந்துள்ளது என்பதை, உறுதி செய்ய ஆதாரம் இல்லை.வருமானத்துக்கு அதிக மாக, 40.21 லட்சம் ரூபாய் அளவுக்கு, ராமச்சந்திரன் சொத்து சேர்த்திருப்பதை, அரசு தரப்பு நிரூபித்துஉள்ளது.அவருக்கு உடந்தையாக இருந்ததாக, மனைவிமற்றும் மகன் மீதானகுற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரன்இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான குற்றச்சாட்டு விலக்கப்படுகிறது.
மற்ற இருவருக்கும், தலா, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024