Tuesday, October 17, 2017

நர்சிங் பட்டய படிப்பு விண்ணப்பம் : மாணவியரிடம் ஆர்வம் குறைவு

திருநெல்வேலி: நர்சிங் பட்டய படிப்புக்கு, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும், குறைவான விண்ணப்பங்களே விற்பனையாகிஉள்ளன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உட்பட, 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. 
இங்கு மருத்துவ பட்ட படிப்பு தவிர, நர்சிங் பட்ட படிப்பு மற்றும் நர்சிங் பட்டய படிப்புகளும் உள்ளன. நர்சிங் பட்டப் படிப்பில், பி.எஸ்சி., முடித்தவர்கள் சேரலாம்.
நர்சிங் பட்டய படிப்பிற்கு, பிளஸ் 2வில், அறிவியல், கணிதம் பாடத் திட்டங்கள் முன்னர் தகுதியாக இருந்தன. சில ஆண்டுகளாக, பிளஸ் 2வில் எந்த பாடத் திட்டமாக இருந்தாலும், நர்சிங் பட்டய படிப்பில் சேரலாம் என, அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டு நர்சிங் பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம் கடந்த வாரம் துவங்கியது. 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று வரை, 800 விண்ணப்பங்களே விற்பனை ஆகியுள்ளன.
கடந்த ஆண்டு விண்ணப்பம் வழங்க துவங்கிய இரண்டு நாட்களில், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன. 21ம் தேதி விண்ணப்பம் வாங்க கடைசி தேதி, 23ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், நர்சிங் பட்டய படிப்பு படிக்க போதிய ஆர்வம் இல்லை என, தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதை நிலைதான் நீடிக்கிறது.
விண்ணப்பம் வாங்க வந்த மாணவியர் சிலர் கூறியதாவது:கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அட்மிஷன் முடிந்து, வகுப்புகள் துவங்கி விட்டன. 
இந்தாண்டு அக்டோபர் மாதம் தான், விண்ணப்பம் வழங்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் கவுன்சிலிங் நடந்து, மாத கடைசியில் தான், வகுப்புகள் துவங்கும் நிலை உள்ளது.
இதனால், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பலரும், டிகிரி, பொறியியல் பட்ட படிப்பு, தொழில்கல்வி என, பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதனால், நடப்பாண்டு விண்ணப்பங்கள் வாங்க ஆர்வமில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years  AWARENESS MONTH Yashaswini.Sri@timesofindia.com 21.10.2024 Bengalu...