Tuesday, October 17, 2017

தீபாவளி, மழை காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்



தீபாவளி மற்றும் தொடர் மழை காரணமாக சென்னை நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அக்டோபர் 17, 2017, 04:00 AM

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக சென்னை புறநகரில் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் கார், இருசக்கர வாகனங்களில் சென்னை நகரை வலம் வந்தனர்.

இதனால், முக்கிய வணிக தலங்களான தியாகராயநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பாடி, வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க நேற்று காலை முதலே தொடர் மழை பெய்து வந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்ததுடன், வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பல மணி நேரமாக மக்கள் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் மாளிகையில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டதால் அண்ணாநகர், கிண்டி, அண்ணாசாலை, மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன்காரணமாக பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. பலர் முன்பதிவு செய்த பஸ், ரெயிலை தவற விட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதனால் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அலை மோதியது. தீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு மூலமாக அரசுக்கு ரூ.7.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், யாரேனும் பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர்.

No comments:

Post a Comment

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years  AWARENESS MONTH Yashaswini.Sri@timesofindia.com 21.10.2024 Bengalu...