இவர்கள்தான் நம் தீபாவளியை வண்ணமயமாக்குகிறார்கள்!
By ENS | Published on : 16th October 2017 04:37 PM
தொட்டு விடும் தூரத்தில் வந்துவிட்டது தீபாவளிப் பண்டிகை. கடைத்தெருக்களும், பேருந்து நிலையங்களும் கூட்டங்களால் நிரம்பி, எங்கும் ஒரு பண்டிகை வாசம் மணக்கிறது.
இந்த நேரத்தில், நம் தீபாவளிப் பண்டிகையை வண்ணமயமாக்கும் பட்டாசு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் சங்குச் சக்கரம் சுற்றுகிறதா, வான வேடிக்கைகள் வண்ணமயமாக மிளிர்கிறதா? கேள்விக்கான விடை..
செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு அறை, மெலிதான மேற்கூரை, ஒரு அறையில் 4 தொழிலாளர்கள் அமர்ந்து கருப்பும், வெள்ளையும் கலந்த பொடியை ஒரு காகிதத்தில் வைத்து மடிக்கிறார்கள். அவர்களது உடல் பட்டாசுக்கான வெடிமருந்துப் பட்டு வெள்ளை நிறத்தில் மின்னுகிறது.
இவர்களைப் போல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி நெருங்குவதால் 24 மணி நேரமும் பல தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
பல சமயங்களில் அதிக ஆபத்துக் கொண்ட வேதிப் பொருட்களும், குறைந்த பயிற்சி கொணட தொழிலாளர்களும் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் போது பல எதிர்பாராத விபத்துகளும் நடக்கின்றன.
கடந்த 2016 - 17ம் கால கட்டத்தில் மட்டும் சிவகாசியில் 16 பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து அதில் 30 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இதில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய பட்டாசு தயாரிப்பு விபத்தில் 38 பேர் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2016 - 17ம் கால கட்டத்தில் மட்டும் சிவகாசியில் 16 பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து அதில் 30 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இதில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய பட்டாசு தயாரிப்பு விபத்தில் 38 பேர் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொழிலாளர்களுக்கு, எதிர்பாராத விபத்துக்கள் மட்டுமே பிரச்னையாக இல்லை. உடல்நல பாதிப்புகளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள்தான். ஆஸ்துமா, காசநோய் போன்ற பல நோய்களுக்கும் இந்த வேதிப்பொருட்கள் காரணமாக அமைகின்றன.
என்னதான் நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைகளுக்கு இவர்கள் வண்ணமூட்டினாலும், இவர்களது வாழ்க்கை இன்னும் கருப்பு வெள்ளையாகவே உள்ளது.
No comments:
Post a Comment