Monday, October 16, 2017

மகனுக்காக வீட்டை உருமாற்றிய அஜித்!


By DIN  |   Published on : 16th October 2017 11:38 AM  
Ajith-Kumar-From-RC-Airfield-2

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில் ஒரு வாடகை வீடு எடுத்து சில மாதங்கள் தங்கியிருந்தார். அதற்குக் காரணம் அவருடைய மகன் ஆத்விக்குக்காக சொந்த வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும்படியான சில மாற்றங்களைச் செய்வதற்காகத் தான்.
காதல் மனைவி ஷாலினிக்கு அன்பான அக்கறையான கணவராக, மனைவியின் பேட்மிண்டன் பயிற்சிகளை ஊக்குவிப்பவராக இருந்து வருகிறார். பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் இந்த தம்பதியரின் வாழ்க்கையை மேலும் அழகாக்கியது. அஜித் தனது சொந்த வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனது குட்டி இளவரசனுக்காக வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்த அஜித், வாடகை வீட்டுக்கு இடம் பெயர்ந்தார். தனது திருவான்மியூர் வீட்டை தற்போது முற்றிலும் ரீமாடல் செய்து விட்டார்.
நவீன வகையில் உருவாகியுள்ள அவ்வீட்டின் கதவு முதல் சமையலறை வரை எல்லா கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும். மனைவி ஷாலினிக்குத் தனி பேட்மிண்டன் கோர்ட் வசதியும் மகளுக்கு பரத நாட்டியம் பிராக்டிஸ் செய்ய தனி இடமும் அமைத்துக் கொடுத்துள்ளார் அஜித்.
அன்பும் அக்கறையும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடிப்படை. அது சினிமா நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தான் பணி புரியும் துறையில் கடினமாக உழைப்பதுடன், சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவாக இருப்பது பாராட்டுக்குரியது.  

No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...