Tuesday, March 20, 2018

2G scam: ED moves HC against acquittal of Raja, Kanimozhi

TIMES NEWS NETWORK   20.03.2018

New Delhi: The enforcement directorate moved the Delhi high court on Monday challenging the acquittal of former telecom minister A Raja and DMK MP Kanimozhi among others in a money laundering case in the 2G spectrum scam.

On December 21 last year, a special CBI court had acquitted Raja and 18 others, including DMK chief M Karunanidhi’s wife Dayalu Ammal and daughter Kanimozhi, from the offence of money laundering. The court had also ordered release of attached properties in the case worth ₹223 crore.

The CBI is also expected to file an appeal some time this week.

The ED appeal, filed by joint director Rajeshwar Singh, said the “special judge committed a grave error by acquitting the accused of the offence under the Prevention of Money Laundering Act on the basis of acquittal in the CBI case and without applying mind and considering the offence under PMLA as a separate, independent and standalone offence to be tried and adjudicated.”



‘GRAVE ERROR’: The ED said the special judge acquitted former telecom minister A Raja (left) and DMK MP Kanimozhi on the basis of the CBI case and without application of mind

Court casually ignored evidence, says ED

The appeal further said the special court had failed to “appreciate the facts and evidences… and ignored the gravity of the offence and the role of the respondents as well as proved testimonies of the 24 witnesses and documents establishing money trail in serious offence of money laundering”.

The ED said the special court “casually ignored the proved evidences through documents as well as supported by the testimony of the witnesses that ₹43.75 crore cash was given for accommodation by taking cheque of the equal amount”.

The agency argued that thedefinition of ‘proceedsof crime’ had wide connotation and “may even extend to a person who is connected with criminal activity relating to a scheduled offence but he may notbeoffender of the schedule offence per se”.

The money trail mentionedby theEDwas citedin its chargesheet filed earlier in the special CBI court. In its chargesheet, it had cited six transactions between December 23, 2008 and August 11, 2009 through which “illegal gratification” of ₹200 crore was transferred to Kalaignar TV, controlled by Kanimozhi and Dayalu Ammal.

Twelve months after the letter of intent for 2G telecom licence was issued to Swan Telecom Pvt Ltd (STPL) in 2008, a group company, Dynamix Realty, transferred ₹200 crore to Kalaignar TV in instalments, the ED had claimed.

The ED said Dynamix Realty transferred ₹209.25 crore to Kusegaon Fruits and Vegetables Pvt Ltd, which further moved₹206.25 crore to Cineyug Media and Entertainment Pvt Ltd, which in turn transferred ₹200 crore to Kalaignar TV. 


மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற ஐகோர்ட்டில் வழக்கு

Added : மார் 20, 2018 02:20

சென்னை: முதுகலை மருத்துவ பட்டய படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத இடங்களை ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு விளக்கம் பெறும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் சுதன் உள்ளிட்ட, ஏழு அரசு டாக்டர்கள், தாக்கல் செய்த மனு:முதுகலை மருத்துவ படிப்புக்கு, மாநில ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற, எங்களுக்கு தகுதி உள்ளது. முதுகலை மருத்துவ கல்வி விதிமுறைகளின்படி, தொலைதுார, கடினமான பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் மற்றும் அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.அரசு பணியில் இருக்கும் டாக்டர்களுக்கான, ௫௦ சதவீத ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள், மாநில ஒதுக்கீட்டுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை.

 இதுகுறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சகம் மற்றும் சுகாதார பணிகள் இயக்குனர் ஜெனரலுக்கு, மனு அனுப்பப்பட்டது; அதை பரிசீலிக்கவில்லை. இது, நீதிமன்ற உத்தரவுக்கும், மருத்துவ கல்வி விதிமுறைகளுக்கும் எதிரானது.எனவே, முதுகலை மருத்துவ பட்டய படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், வெயிட்டேஜ் மதிப்பெண்கள், அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத ஒதுக்கீட்டை வழங்கும்படி, மத்திய சுகாதார துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு விளக்கம் பெறும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், ௨௨ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஆருஷி வழக்கில் மேல்முறையீடு : விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்

Added : மார் 20, 2018 01:53

புதுடில்லி: சர்ச்சைக்குரிய, ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்றுள்ளது.

வழக்கு பதிவு : டில்லி அருகே, நொய்டா நகரில், பல் டாக்டர்களான, ராஜேஷ் தல்வார், அவரது மனைவி, நுபுர் தல்வார் மற்றும் அவர்களது மகள், ஆருஷி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த, 2008ல், தன், 14வது பிறந்த தினத்துக்கு சில நாட்களுக்கு முன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ஆருஷி, மர்ம மான முறையில் இறந்து கிடந்தாள். அந்த வீட்டின் மேல் மாடியில், வேலைக்காரன், ஹேம்ராஜ் இறந்து கிடந்தான்.இந்த கொலைகளை, ஆருஷியின் பெற்றோர், ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் ஆகியோர், கவுரவத்துக்காக செய்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், இருவரையும் நிரபராதி எனக்கூறி விடுதலை செய்தது.மனு தாக்கல்இந்நிலையில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., போலீசாரும், ஹேம்ராஜின் மனைவி, கும்கலா பஞ்சாடேவும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது.

ரேஷன் பொருட்கள் வேண்டாம் என
அரசுக்கு விட்டு கொடுத்தால் கவுரவிப்பு 


20.03.2018

'ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என, அரசுக்கு விட்டு கொடுப்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அவர்களின் பெயர், புகைப்படத்தை, பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிட, உணவு துறை முடிவு செய்துள்ளது.




தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. அரிசி கார்டு வைத்திருக்கும் வசதியானவர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள், தங்கள் ஊழியர்களிடம், ரேஷன் கார்டை கொடுத்து, பொருட்கள் வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்.

இதையடுத்து, ரேஷன் பொருட்களை வாங்க விரும்பாதோர், அவற்றை,அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, உணவு துறை துவக்கியது. இதுவரை, 9,000 பேர், அரசுக்கு, ரேஷன் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். இந்நிலையில், ரேஷன் மானியத்தை, விட்டு கொடுப்பவர்களை கவுரவப்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று கருதுப வர்கள்,tnpds.gov.in என்ற இணையதளத்தில், 'அட்டை வகையை மாற்ற' என்ற பகுதியை, 'கிளிக்' செய்து, பதிவிட்டு, அரசுக்கு விட்டுகொடுக்கலாம்.
சமையல் காஸ் சிலிண்டர் மானியம் வேண்டாம் என, மத்திய அரசுக்கு விட்டு

Advertisement கொடுக்கும் வாடிக்கையாளரின் பெயரை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு கவுரப்படுத்துகின்றன.

அதேபோல், ரேஷன் மானியத்தை விட்டு கொடுப்போரின் பெயர், புகைப்படத்தை, பொது வினியோக திட்டத்தின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது

Updated : மார் 19, 2018 16:44 | Added : மார் 19, 2018 16:40 

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறை இன்று டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது. மத்திய முன்னாள் அமைச்சர் ராசா, கனிமொழி எம்.பி., மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் தேதி அனைவரும் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர் . இது திமுகவுக்கு பெரும் நிம்மதியை தந்தது.

அப்பீல்:இந்த வழக்கை அப்பீல் செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து இன்று அமலாக்கத்துறை சார்பில் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யதுள்ளது. இது போல் சி.பி.ஐ.,யும் வழக்கு தொடர ஏற்பாடுகள் நடந்து வருவதாக இந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அப்பீல் மனு எந்த முடிவுகளை தருமோ என்ற திகிலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார் 

20.03.2018




கணவர் மரணம் அடைந்ததையடுத்து, பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார். #RIPNatarajan #SasikalaParole

மார்ச் 20, 2018, 06:44 AM

பெங்களூரு,

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து இருந்தது.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி உயிரிழந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்தது.

காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. பெசன்ட் நகர் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார். சசிகலாவுக்கு உடனடியாக பரோல் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பரோல் கிடைத்ததும் பெங்களூரு சிறையில் இருந்து நேரடியாக சசிகலா தஞ்சை செல்கிறார்.
சசிகலா கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் 

20.03.2018




  சசிகலா கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Natarajan

மார்ச் 20, 2018, 07:14 AM
சென்னை,

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்ற நிலை உருவானது. தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த நவம்பர் 2-ந் தேதி நடராஜன் வீடு திரும்பினார். சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.இந்தநிலையில், நடராஜனுக்கு 17 ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவரை, உறவினர்கள் குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெறும் அவருடைய சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டன. இதனால் அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நடராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெசண்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு பிறகு தஞ்சையில் உள்ள அவரது சொந்த ஊரான விளாருக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.

தலைவர்கள் இரங்கல்

சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ம.நடராஜன் மறைவுக்கு, கி.வீரமணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

*நடராஜனின் மறைவு, தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பு என்றும் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்க மிகப்பெரும் பங்கை நடராஜன் செய்துள்ளார் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

*மொழிப்போர் வீரரான நடராஜனின் மறைவுக்கு, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

*சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவு பேரிழப்பு என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

Monday, March 19, 2018

Avoid Casual Arrests Of Boy's Relatives In Elopement Cases: Madras HC [Read Order] | Live Law

Avoid Casual Arrests Of Boy's Relatives In Elopement Cases: Madras HC [Read Order] | Live Law: The Madras High Court, on Thursday, warned against the casual arrest of parents and relatives of boys in elopement cases involving underage couples, opining that this would amount to a “social wrong” at the hands of the Police. The Bench comprising Justice C.T. Selvam and Justice N. Sathish Kumar was dealing with a case concerning …
தாயை கொடூரமான முறையில் கொலை செய்து போலீஸில் சரணடைந்த மகன்! 

பாலஜோதி.ரா
vikatan 18.03.2018 

தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க மறுத்த தாயை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று காலை சரணடைந்தார்.



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள மறவம்பட்டி ஊரை சேர்ந்தவர் ஆனந்த்(23 ). இவரது தந்தையின் பெயர் தங்கராஜ், தாயார் ராணி. இவருக்கு நான்கு மகன்கள். இதில் மூத்தவர் ஆனந்த். 12 வருடங்களுக்கு முன்பு ராணி தனது கணவரான தங்கராஜை கொலை செய்ததாக, மழையூர் காவல்நிலையத்தில் வழக்காகி, போதிய சாட்சியங்கள் இல்லை என்ற காரணங்களால் ராணி விடுதலை ஆகி இருக்கிறார்.

பிள்ளைகள் நால்வரும் பெரியவர்களான பிறகு பாகப்பிரிவினை பற்றி அடிக்கடி அம்மாவுக்கும் பிள்ளைக்கும் தகராறு எழுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ”தினமும் அவர்கள் வீட்டில் ராணிக்கும் ஆனந்த்துக்கும் சொத்துக்குறித்த சண்டைதான் நடக்கும். இது எல்லாருடைய வீட்டிலும் நடப்பதுதானே என்று அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுபோலதான் நேற்று இரவும் இருவருக்கும் சண்டை பெரிய அளவில் நடந்தது. 'என்னோட உயிரே போனாலும் என் சொத்துல சல்லிக்காசு கூட உனக்குத் தரமாட்டேன்டானு அந்தம்மா திட்டுச்சு. ஒருகட்டத்துக்கு மேல தகறாறு பெரிதாகி, ’சொத்து வேணும்னு ஒத்தக்கால்ல நின்னேன்னு வெச்சுக்க. ஒங்கப்பனை கொன்ன மாதிரி ஒன்னையும் கொன்னுடுவேன்னு அந்தம்மா சொல்லுச்சு. இன்னிக்குக் காலையிலே அம்மாவோட தலைமுடியைப் பிடிச்சு தரதரன்னு வீட்டுக்கு வெளில இழுத்துட்டு வந்தவன் கையில வெச்சிருந்த அரிவாளால் தலையை வெட்டியிருக்கான். தெருவுல அவங்கம்மா தலையில்லாத முண்டமா கிடந்தாங்க. தன்னோட அப்பாவை அம்மாவே கொன்ற ஆத்திரம், சொத்துக்காக தன்னையும் கொல்வேனு சொன்ன கடுப்பு, என எல்லாமுமா சேர்ந்து அம்மாவை ஆனந்த் கொல்ல காரணமாயிடுச்சு"என்று படபடப்புடன் விவரித்தார்கள் அந்தத் தெருவைச் சேர்ந்தவர்கள்.

தனது அம்மாவின் தலையை ஒரு பையில் போட்டுக்கொண்டு நேராக கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஆனந்த், அங்கிருந்த போலீசாரிடம் ரத்தம் உறைந்த நிலையில் இருந்த தனது தாயின் தலையைக்காட்டி, 'தனக்கு சேரவேண்டிய சொத்துக்கள பிரித்துக் கொடுக்க தடையாக இருந்த தனது தாயாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டேன். இது எங்கம்மாவோட தலை. முண்டம் மறவன்பட்டில கெடக்கு" என்று எந்வித பதட்டமும் இல்லாமல் கூற, போலீசார் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனந்திடம் மேற்கொண்டு தகவலை கேட்டறிந்த போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்கள். மறவன்பட்டி கிராமம் மழையூர் காவல்நிலைய லிமிட்டுக்குள் வருவதால், கறம்பக்குடி போலீசார் அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்கள்.உடனடியாக மறவன்பட்டிக்கு விரைந்த மழையூர் போலீசார், கழுத்து வெட்டப்பட்டு தெருவில் கிடக்கும் ராணியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்பிவைத்தனர். வெட்டிய தலையை தனியாக எடுத்துக்கொண்டு வந்து, காவல்நிலையத்தில் ஆனந்த் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 10 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் வேண்டாம், புற்றுநோய் ஏற்படலாம்!' - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!!!




நாம் சாப்பிடும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள்... அனைத்திலும் இயற்கையாகவே இருக்கிறது சர்க்கரை. இவை தவிர, நாம் அருந்தும் டீ, காபி, ஜூஸ் போன்ற பானங்களில் நேரடியாகவும் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒருவரின் இயல்பான அளவுக்கு மேல் ரத்தத்தில் சர்க்கரை சேர்வதால் முதலில் உடல் எடை அதிகரிக்கும். இதனால், சர்க்கரைநோய், இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம்... எனப் பல தொற்றா நோய்கள் ஏற்படவும் அது காரணமாகிவிடும். இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஓர் ஆபத்தும் சேர்ந்திருக்கிறது... `புற்றுநோய்'. `ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் புற்றுநோய் ஏற்படும்' என்று அண்மையில் எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் நம்மை காத்துக்கொள்ள சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறது. அதன்படி, `ஒருவர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக பத்து டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் உட்கொள்ளக் கூடாது' என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா, ஒவ்வோர் உணவிலும் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதென்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட முடியுமா, இதிலிருந்து தப்பிப்பதற்கு என்னதான் வழி?

விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் ராஜ்குமார்.

"பொதுவாக சர்க்கரையில் இரண்டு வகைகள் உள்ளன. எக்ஸ்ட்ரின்சிக் (Extrinsic sugar) மற்றும் இன்ட்ரின்சிக் (Intrinsic sugar). எக்ஸ்ட்ரின்சிக், உணவுகளிலும் பானங்களிலும் நாம் சேர்த்துக்கொள்வது. இன்ட்ரின்சிக், காய்கறிகள், பழங்களில் இயற்கையாகவே இருப்பது.
ஒரு நாளைக்கு, நமக்குத் தேவைப்படும் மொத்த கலோரிகளில், சர்க்கரையின் அளவு பத்து சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதுதான் இதுவறையில் நடைமுறையில் இருந்தது. ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தி, அதனை ஐந்து சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரி அளவு ஒரே மாதிரியாக இருக்காது. அவர்களின் பி.எம்.ஐ (BMI) அளவைப் பொறுத்து அல்லது ஐடியல் வெயிட்டைப் பொறுத்து தேவையான கலோரியைக் கணக்கிடலாம்.
முதலில், ஐடியல் வெயிட்டை வைத்து எப்படிக் கண்டறிவது என்று பார்ப்போம்.

180 செ.மீட்டர் உயரம் கொண்டவரின் (180-100 = 80) ஐடியல் வெயிட் 80.

180 செ.மீட்டர் உயரம் கொண்டவர், 80 கிலோ எடையில் சரியாக இருந்தால் நாளொன்றுக்கு 80 X 25 = 2,000 கிலோ கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.
80 கிலோவைவிடக் குறைவாக இருந்தால், நாளொன்றுக்கு 80 X 30 = 2,400 கிலோ கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

80 கிலோவிட அதிகமாக இருப்பவர்கள், நாளொன்றுக்கு 80 X 20 = 1,600 கிலோ கலோரிக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது.

அதன்படி, 180 செ.மீட்டர் உயரம் கொண்டவருக்கு ஒரு நாளைக்கு 2,000 கிலோ கலோரி தேவை. அதிலிருந்து ஐந்து சதவிகிதம் என்றால் சரியாக 100 கிலோ கலோரிதான் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, ஆண் ஒருவர், 9 டீஸ்பூன் சர்க்கரையும், பெண் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் எக்ஸ்ட்ரின்சிக்காக சேர்த்துக்கொள்ளலாம். அதைவிட அதிகமாகச் சேர்த்துக்கொள்ளும்போது உடல் எடை அதிகரித்துவிடும். அதனால் அனைத்துவிதமான புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. நம் உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதை பி.எம்.ஐ அளவைக் கண்டறிந்து தெரிந்துகொள்ளலாம்" என்கிறார்.
Adulteration has become a big business 

L. Srikrishna 

 
MADURAI, March 19, 2018 00:00 IST




You’ll never know: With adulteration rampant in the food industry, consumers are at a disadvantage to know the quality of ingredients.Photos: G. MoorthyG_MOORTHY
Grey market thrives as consumers look for cheap goods and overlook quality

Adulteration business is thriving, unnoticed by shopkeepers in a hurry. There is a duplicate for most of the popular brands in the market. Edible oil, cereals and auto spare parts... there is a duplicate for everything.

Despite stringent laws and periodical raids by officials, the grey market is thriving as a section of consumers are satisfied with the duplicate product as long as it is cheap, overlooking the quality factor. An edible oil manufacturer of a reputed brand said that Food Safety and Standards Authority of India (FSSAI) rules were clear and specific. But the ‘inspector raj’ was misused for financial gains to aid the grey market.

It is the unsuspecting consumer who falls victim to the evil designs of the grey market. One of the shopkeepers of the auto spare parts hub on North Veli Street said only a trained eye could pick out the duplicate from the original one - be it engine oil, tyre, bulb or even headlight assembly. Profits from fake goods were so attractive that many shops pass them off as originals. And many consumers also happily buy “genuine spares” at a cheap price without tax.

Justifying the trade, a dealer said they sold fakes only to those customers who insisted on low-priced goods and did not want quotation or invoice or bill or receipt.

Oil market

Many of the oil stores on East Masi Street, Sandaipettai, East Veli Street, Munichalai and around Meenakshi Temple sell substandard products. For instance, a gingelly oil packet in one of the shops had no brand name, price and date of packing.

The oil is also sold in ‘loose.’ For the brand-conscious consumers, there are oil packets with names that sound like a reputed brand. Even when there was an address of the manufacturer printed in the pack, it turned out to be fake.

Unholy smoke

A priest in Meenakshi Temple said that though officials maintained that as part of security measures, devotees were not allowed to light camphor in the sannidhis, the real reason was that the smoke from the poor quality camphor remained as soot and polluted the place.

Rajaraman who runs a restaurant on West Perumal Maistry Street said adulteration was rampant in the food industry. “Synthetic masala, which is dark red in colour, is widely mixed in idli powder, ‘kaara sevu’ and ‘cauliflower 65,’ he said.

Tamil Nadu Bakers’ Federation president S. Anburajan said that after branded products came to the market, bakeries, big and small, purchased only genuine raw materials.

There were exclusive vanaspati products available for making bread, cakes and cookies, he said. Tamil Nadu Foodgrains Merchants Association secretary S. Velshankar said that the number of complaints of adulteration from consumers was on the decline. But it need not be construed that adulteration had been prevented. It was because more consumers were aware of products and their shelf-life, and fewer victims.

Tamil Nadu Chamber of Commerce and Industry senior president S. Rethinavelu said manufacturers very well knew the consequences of adulteration. While the government encouraged branding, GST with its different slabs discouraged manufacturers. The government must issue clarification by bringing down the tax structure to 5%.

Number of complaints of adulteration has come down after the advent of brand marketing

S. Velshankar

Secretary, Tamil Nadu Foodgrains Merchants Association

Shelf-life of bakery products is very limited and adulteration in any form will bring disrepute to bakeries

S. Anburajan

President,

Tamil Nadu Bakers’ Federation
Subscribers of mobile networks face poor connectivity 

Staff Reporter 

 
COIMBATORE, March 19, 2018 00:00 IST

BSNL has started upgrading its core equipment at Saibaba Colony telephone exchange

The subscribers of mobile networks of almost all telecom operators are experiencing poor connectivity or no connectivity for the last few days in and around Coimbatore.

Sudden surge in portability of mobile connections from Aircel to the existing public sector BSNL and the private operators was the reason cited by a few operators. A BSNL official told The Hindu that as on date 4,01,500 mobile subscribers ported their connections from Aircel to BSNL over the last one fortnight. Of this, over 90,000 Aircel subscribers switched over to BSNL from Erode secondary switching area (SSA) and it is 83,000 in Coimbatore SSA.

A majority of the Aircel customers were from rural areas, as it had very good coverage in rural areas than in the cities was the reason for surge portability from rural areas, an official said. The network problem currently experienced by the customers of BSNL would be solved before the end of March.

BSNL started upgrading its core equipment at the Saibaba Colony telephone exchange to take on the sudden surge and capacity addition well before the Aircel became bankrupt. The public sector major is equipping technically to welcome 4G in the near future. These works would be over by the month-end. However, the connectivity issues with the other operators, hiring private towers in rural and urban areas and increasing capacities in towers in rural areas would take place in the first week of April.

However, the connectivity problem exists from one operator to another and not within the parent network. This problem, too, would be solved, as the BSNL officials are in touch with the private operators, the official added. However, the private operators remain tightlipped over the network issue. Even subscribers with operators seen as giants with pan India presence are facing poor data connectivity, voice call drop and hanging issues.
Rare honour for Indian doctor
  Special Correspondent 
 
CHENNAI, March 19, 2018 00:00 IST


Dr. Lokapria Premalatha

Dr. Lokapria Premalatha, a psychiatrist by training, has been appointed as a selection committee member for MBBS course in London University. She is attached to Kings College London. She is the daughter of Dr. Arunachalam, former Dean of Government Medical College in Asaraipallam in Kanniyakumari.
College girl chops up definition of job, takes up butcher’s role

By Sujatha S | Express News Service | Published: 19th March 2018 03:36 AM |
 

Shanmugapriya working at her father’s meat shop in Tirupur on 

Sunday | A RAJA CHIDAMBARAM

TIRUPUR: Women take up difficult jobs to support their families. Here is a college student who does something one seldom finds women doing — selling meat. C Shanmugapriya (20), a third-year student of the Government Arts College for Women, Tirupur, sells meat on Sundays, along with her father, Chinnasamy.

“My father has been selling meat for many years. My younger brother is also in the profession. I started working with father to help him. Now, I have been doing this work for two years,” she says.

Though she found it tough at first, Shanmugapriya can now easily cut meat properly. “I found it difficult in the beginning. In fact, I even stopped eating non-vegetarian food after I began this work. But now I am used to it. And any way, I should help my father. The work also supports my education,” she said.

Chinnasamy (62) has been a pillar of strength for Shanmugapriya. “When some people in our community wanted my parents to marry me off, and did not want me study further, my father supported me and sent me to college. I want to do postgraduation and get into teaching,” she said.

All her friends and teachers know that Shanmugapriya sells meat on Sundays. “What is the shame in it?” she asks. “In fact, all of them say that I’m doing a good thing. No work is low or without dignity as long as we listen to our conscience,” she said.

Though a barber by profession, Chinnasamy has been selling meat for 40 years. “My father followed the traditional profession. I entered the meat business. And I taught it to my daughter. Many people ask me, ‘Why do you let a girl sell meat?’ My answer is, ‘No work is without dignity or value.

Why should I not allow my daughter to cut meat, which we have been doing for many years? She is doing a good job. Her work also supports her education ,” he said.
Sasikala to seek parole after doctors describe Natarajan condition as critical

By Express News Service | Published: 19th March 2018 02:26 AM 

V K Sasikala's husband M Natarajan

CHENNAI: Jailed AIADMK leader V K Sasikala will apply for parole on Monday as her husband M Natarajan’s health was described by doctors as critical.

V Pugazhenthi, a supporter of Sasikala, said prison rules generally do not allow parole to visit the same person again within six months. Sasikala was last granted parole on Oct 7, 2017 to visit Natarajan when he underwent simultaneous liver and kidney transplants. So, Sasikala technically cannot apply for parole to visit him before April 6.

“However, we have approached the authorities through our lawyers. Tomorrow the process will start,” Pugazhenthi said.

A statement from the Gleneagles Global Health City where Natarajan has been hospitalised, said: “He is on ventilator support and his condition is critical.” Natarajan was shifted to the ICU on Friday following a severe chest infection.

T T V Dhinakaran visited Natarajan at the hospital on Sunday night. Later, answering queries of reporters, he said, “Natarajan is better today as compared to yesterday.” Sasikala’s arrival in Chennai on parole may help the clan handle matters better within the family.
Fake educational institution in Chennai's marriage hall, two held

By Express News Service | Published: 19th March 2018 02:47 AM


  |

Image used for representational purpose

CHENNAI: Two persons were arrested for running a fake educational institution in a marriage hall in Kodungaiyur on Saturday. Fake degree certificates and seals were also seized from their premises.


Police said Gopu (59), a resident of Jinda Street in Kondithope, saw a pamphlet on February 25 last year about Mahatma Gandhi Board of Open Distance Learning, an education institution running in a marriage hall in Vivekananda Nagar, Kodungaiyur.

He approached them for his daughter’s BA Literature admission and held discussions with Alexander and Chandrasekar, who allegedly ran the institution. The two allegedly claimed that if he gave Rs 1.5 lakh, they would provide the degree certificate without her daughter coming to the institution.

Gopu believed their words and paid Rs 85,000 as initial payment and got his daughter registered in the institution. Later when he asked them about the classes, the two told him that they would give her the certificate if he paid the remaining amount.

Sensing something wrong, Gopu lodged a complaint with the Kodungaiyur Police.


A special team investigated the case and found that the institution was functioning without proper permission. Alexander and Chandrasekar were arrested and 1,800 unfilled Class X certificates, 200 degree certificates and 25 seals were seized.

Further investigations have revealed that Chandrasekar owned the marriage hall and Alexander had completed his degree and was pursuing MBA through distance education.

Accused pursuing MBA
Probe revealed that Chandra-sekar owned the marriage hall and Alexander was pursuing MBA through distance education
PUNE TEACHER BEING PROBED

Wrong spelling: 6-yr-old’s head banged on bench

TIMES NEWS NETWORK 19.03.2018

Pune: A six-year-old Class I student at Swami Samarth English Medium School in Bhosari was allegedly beaten up by ateacher for making a spelling mistake in his classwork book.

The teacher banged the hapless student’s head on the bench before beating him with a duster and stick inside the classroom on Thursday, police said. The boy sustained injuries to his head and on his back and had to be taken to Yashwantrao Chavan Memorial Hospital where he was treated and later discharged.

The boy’s father, who lodged a complaint against the teacher, handed over the hospital’s medical report relating to injuries to the victim, to the Bhosari police where an offence punishable under Section 324 (voluntarily causing hurt) of the Indian Penal Code was registered.

Sanjay Patil, a senior official of the school, told TOI, “We learned about the case only after the complaint was registered with the police. We will speak to the teacher concerned and students who were present in the classroom before taking any action.” When contacted on Sunday evening, the boy’s father said, “My son has been admitted again in the hospital today. I am not in a position to speak about the incident right now.”

The boy’s father said in his complaint that his son from school around 3.15pm on Thursday. While they were on their way home, the boy told him that he was beaten by his teacher for having misspelt a word in his classwork book, the father said.

The complainant said he noticed some swelling on his son’s head and took him to hospital for treatment where he also found the boy’s back was black and blue with the whipping marks caused by the stick.

The Bhosari police said they were investigating the matter and will soon record the state of the boy and others.
IndiGo grounds another plane; doubts raised on 31 A320neos

Manju.V@timesgroup.com 19.03.2018

Mumbai: Less than a week after the Indian aviation regulator singled out eleven A320neos belonging to IndiGo and GoAir for grounding over safety concerns, another A320neo was pulled out of service by IndiGo on Sunday due to an engine problem. The latest grounding brings to question the reliability of the 31 Pratt and Whitney engined A320neos currently operational in India.

The A320 neo aircraft (registration number VT-ITX) which operated the Bengaluru-Delhi Indigo flight 6E 132, landed in Delhi at 8.45 am. According to FlightRadar24, a live flight-tracking website, it has stayed on ground since. An IndiGo spokesman said: “An A320 neo aircraft t was proactively withdrawn in Delhi for a maintenance check to attend to a pilot reported defect. These maintenance checks are part of a comprehensive program of early detection.’’ In the past one week, this is the third technical problems involving a Pratt and Whitney (PW) 1100 engine powered Indi-Go A320neo aircraft. The spokesperson did not comment on the other two incidents. The directorate general of civil aviation (DGCA) was not available for comment.

Referring to the Sunday grounding, IndiGo spokesman said: “During the maintenance check, metal chips were observed on left engine, number 3 bearing chip detector which is a known concern on the Neo engine. At IndiGo, safety of our passengers and aircraft is of utmost importance.”

On Sunday, advocate Yeshwant Shenoy, who filed a petition last week in the Delhi high court praying for grounding of the entire PW1100 powered A320neo fleet, sent a letter to IndiGo and the ministry of civil aviation officials. With reference to the Sunday grounding, the letter said: “If the engines were as safe as the DGCA pointed out, then why did such an incident happen?’’ It added that “pilots are scared and take minute inspections before taking off. They are under tremendous stress while operating A320neos.’’
3 AIIMS docs die, 4 injured in crash on Yamuna E-way

Arvind.Chauhan@timesgroup.com 19.03.2018

Agra: Three AIIMS doctors, on way to Agra for a birthday bash, were killed in a horrific high-speed crash on the Yamuna Expressway that also left four other doctors injured, early on Sunday.

The doctors’ speeding Toyota Innova rammed into a slower-moving mini-truck near Kaiti village in Mathura district around 2.30am, police said. The MUV dragged the truck for nearly 300m. It took police half an hour to extricate the victims from the mangled vehicle.

Police said all seven occupants of the Innova were resident doctors at AIIMS’ emergency medicine department. Dr Harshad Wankhade, 34, whose birthday they wanted to celebrate, died on the spot. So did Dr Yashpreet Singh, 25, and Dr Himbala, 24.

Two other people were killed on the expressway on Sunday morning when the UP roadways bus they were travelling in fell off the road when its driver dozed off near the Formula One track in Dankaur, Greater Noida.

Police said the MUV smashed into the mini-truck and got stuck to the vehicle, deputy superintendent of police Vijay Shankar Mishra said. Local police said the MUV was trying to overtake the mini-truck.

The truck’s driver abandoned the vehicle and fled the spot.

The injured doctors were identified as Catherine Halam, Mahesh Kumar, Jitender Mourya and Abhinava Singh. They were first taken to a private hospital in Mathura and then to AIIMS’ Trauma Centre in New Delhi.

Dr Wankhade was senior resident doctor, while the others were junior resident doctors (non-academic).

“The group was headed to Agra to see the Taj Mahal and celebrate Wankhade’s birthday. He was at the wheel when the crash occurred. The mini-truck was carrying iron pipes and bars,” DSP Mishra said. 




TRAGIC: The wreckage of an Innova car that collided with a container truck killing three doctors on the Yamuna Expressway on Sunday

CAUTION NOTICE ON TRADE MARK OF AJI-NO-MOTO

27-year-old IT employee dies as bike smashes into bus

TIMES NEWS NETWORK 19.03.2018

Chennai: A 27-year-old man who worked with an IT firm in the city, died after his motorcycle crashed head-on with a bus on Kamarajar Salai late on Saturday. The police said Tamil Selvan was not wearing a helmet at the time.

The tech firm staffer was the sixth person in the city to die in a week of injuries sustained in an accident due to lack of protective head gear.

“Tamil Selvan was also partially hearing and speech impaired,” a police officer said. “He lived on Rama Street in Royapuram.”

A BCA graduate, Tamil Selvan worked in an IT company in Guindy. He had gone to Guindy to hand over documents to a friend and was returning home when the accident took place around 10.45pm.

“Tamil Selvan usually took a bus to commute to work but borrowed a friend’s two-wheeler on Saturday,” the officer said. “His bike collided with an MTC bus (route 109; Broadway to Kovalam) as he approached PRO Gate on Kamarajar Salai.”

The tech firm employee tried to overtake another vehicle and did not see the oncoming MTC bus, witnesses told the police. Tamil Selvan was thrown off the bike and sustained head injuries. Passersby tried to save him. They took him to Government Royapettah Hospital, but doctors pronounced him dead on arrival.

The Anna Square traffic police registered a case under IPC Section 304A (causing death due to negligence) against bus driver Purusothuman, 34, of Cheyur, and arrested him.

A friend told the police that Tamil Selvan preferred not to ride motorcycles but borrowed a friend’s vehicle on Saturday night because he had some urgent work.

Senior police officers on Sunday again urged motorists riding two-wheelers to wear protective head gear.

“It is for their own safety,” a senior officer said. 




Natarajan continues to be on ventilator support, hosp says

TIMES NEWS NETWORK 19.03.2018


Chennai: The health condition of M Natarajan, husband of former Jayalalithaa aide V K Sasikala, continues to be critical. The 74-year-old is now on ventilator support in the intensive care unit of Gleneagles Global Health City.

An official press release from hospital CEO Shanmuga Priyan said, “Natarajan Maruthappa was admitted to the intensive care unit of the hospital on March 16 with severe chest infection. He is on ventilator support and his condition is critical.” Senior political leaders including MDMK leader Vaiko visitedthehospital and spoke to treating doctors and his relatives. Natarajan underwent a dual organ transplant in 2017. “The family has been informed. We are doing our best. They tell us that Sasikala is attempting to get special leave permission to visit him,” a doctor said.
Gamed via gazette: 500 quacks, no docs

Pushpa.Narayan@timesgroup.com 19.03.2018

Chennai: Practitioners of alternative medicine other than Siddha, Ayurveda, Unani and Homeopathy are not authorised to call themselves doctors or prescribe medicines but an unrecognised panel — National Board of Alternative Medicine — has used state machinery to obtain legal sanctity for hundreds of illegal physicians.

Starting in 2013, this ‘board’ published in the Tamil Nadu Government Gazette the names of 522 individuals as alternative medicine practitioners. This continued for at least two years before the state health department discovered the fraud.

TOI has accessed at least seven lists the board published up to 2015. The board of alternative medicine’s deception was deceptively simple in practice; the ease with which it pulled off the con, in the official state publication, is astounding.

One of the lists, in Part VI - Section 4 (Supplement) of the gazette dated March 26, 2014, for instance, states, under the banner of National Board of Alternative Medicine: “The executive committee of board has been authorised as per the byelaws and a resolution passed in the general body meeting. The following members have been approved and enrolled in the register of National Board of Alternative Medicines as Registered Alternative Medical Practitioners...” It then lists close to 90 people as registered alternative medical practitioners.

“It said ‘National Board’, so we initially thought it was from the health department,” said stationery and printing department director J Jayakanthan, who is responsible for gazette printing. “It was a private advertisement. Officials recently told us this board is not recognised. We don’t allow such things anymore. ” 




Will take action against quacks: Health secy

The state medical council last Thursday filed a complaint against Jayapandi Karuppusamy, one of the illegal physicians whose names the gazette published in the 2014 list mentioned above, for submitting fake degree certificates from Annamalai University and faking a temporary registration certificate to enable his medical practice. The alternative medicine board presented his registration number as 02925.

“This guy faked his degree and even managed to register himself as doctor in the gazette,” Tamil Nadu State Medical Council president Dr K Senthil said.

The state directorate of medical and rural health services said it had booked a large number of alternative medicine practitioners for quackery over the past few years. “Those holding degrees recognised by the Medical Council of India — MBBS (allopathy), Central Council for Indian Medicine (ayurveda, siddha, unani and homeopathy) and Ayush (yoga and naturopathy) — are allowed to call themselves doctors,” said director of medical and rural health services Dr M R Enbasekaran.

“Such advertisements are illegal. The board offers courses in alternative medicine that the government does not recognise,” he said.

Another senior official said the advertisement was a blessing in disguise: “It’s wrong on their part to advertise themselves as doctors,” he said. “They cannot [legally] use the ‘Dr’ prefix. We initially thought we should take them to court over this. But we now have a list of at least 500 people’s names along with their addresses. We have now obtained permission from the state health department to initiate action against all of them.”

State health secretary J Radhakrishnan said the state will take action against quacks and initiate criminal proceedings against individuals who fake medical degrees.

“Quackery is one of the biggest public health menaces,” he said. “We will deal with it firmly and if we find people faking medical degree certificates, we will take criminal action against them.”

உங்கள் மொபைல் போனுக்கு சார்ஜ் போடப் போகிறீர்களா? ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!

By சினேகா | Published on : 18th March 2018 06:35 PM

நமது அன்றாட வாழ்க்கையில் எதைவிடவும் முக்கியமானது செல்போன்கள்தான். வீட்டில் செல்போனை விட்டுவிட்டு வந்துவிட்டால் ஆபிஸில் வேலை செய்யவே மனம் ஓடாது எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோர் பலர். செல்போனுடன் இலவச இணைப்பாக ஒரு பிரச்னை ஆண்டாண்டு காலமாக இருந்தே வருகிறது. அதுதான் சார்ஜ் நிக்கமாட்டேங்குது மச்சி என்ற குறைபாடு. அதிலும் விலையுயர்ந்த போன்களுக்குத் தான் இந்த பரிதாப நிலை. உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இவை.



விலை குறைவாகக் கிடைக்கிறது என்று மலிவு விலை சார்ஜரை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் ஃபோனின் பேட்டரியை பதம் பார்த்துவிடும். போலவே ஒரிஜினல் ப்ராண்ட் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள். யூஎஸ்பி கேபிள் வழியாக லேப்டாப் அல்லது டெஸ்ட்டாப்பில் சார்ஜ் செய்தால் அது போதிய அளவில் மின் அழுத்தம் கிடைக்காமல் போகும். முழுவதும் சார்ஜ் ஆகாத நிலையில் அதிலிருந்து நாம் அடிக்கடி உருவி தேவைப்படும் போது மறுபடியும் போட்டு என கேம் விளையாடிக் கொண்டிருந்தால் கதை கந்தல்தான். வெகு விரைவில் உங்கள் பேட்டரி பல்லிளித்துவிடும். அதன் பின் புது ஃபோன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே உங்கள் செல்போனின் ஸ்பெசிஃபிகேஷனுக்குத் தகுந்த மின் அழுத்தத்தை ஏற்கும் சக்தியுள்ள ஒரிஜனல் சார்ஜரையே பயன்படுத்துவது சாலச் சிறந்தது. உங்கள் ஒரிஜினல் தொலைந்துவிட்டால் மார்கெட்டில் கிடைக்கும் இன்னொரு ஒரிஜினல் சார்ஜரை வாங்கி பயன்படுத்துங்கள். இரவல் கேட்டு மற்ற ப்ராண்ட் சார்ஜரை போடாதீர்கள்.



சிலர் சார்ஜர் தேடி அலையாமல் பவர் பேங்கை கைவசம் வைத்திருப்பார்கள். தரமான கம்பெனி ப்ராண்டையே பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் அந்த பவர் பேங்க் அதிக மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்திவிடலாம். பவர் பேங்க் பயன்படுத்துகையில் ஹெட்போனை பயன்படுத்தக் கூடாது. இதனால் ஓவர் ஹீட்டாகி போனின் பேட்டரி அதிவிரைவில் பழுதடையும்.



சிலர் சார்ஜ் போடும்போதும் பேனல் கவரை கழற்ற மாட்டார்கள். அது தவறு. ஓவர் ஹீட்டாக இருக்கும் போனை சற்று கூலிங்காக வைக்கவும் கீழே விழுந்தாலும் உடைந்து நொறுங்காமலும் இருக்க உதவுகிறது பேனல். ஆனால் சார்ஜ் செய்யும் போது அதையும் சேர்த்து சார்ஜில் போட்டால் சூடு அதிகரித்து போன் சீக்கிரம் ரிப்பேர் ஆகிவிடும். எனவே காட்டன் துணியில் கீழ் வைத்து சார்ஜ் போடுங்கள்.



சிலர் இரவில் தூங்கப் போகும் முன் லைட்டை அணைக்கிறார்களோ இல்லையோ, மறக்காமல் போனை சார்ஜரில் போட்டுவிட்டு ஆழ்நிலை உறக்கத்திற்குள் சென்றுவிடுவார்கள். விடிய விடிய போன் ப்ளக் பாயிண்டில் இருந்தால் அதன் பேட்டரி மிக விரைவில் செயல்படும் திறன் குறைந்து ஆயுள் முடிந்துவிடும். இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள் ஒரு மணி நேரம் அல்லது சார்ஜ் நூறு சதவிகிதகம் வரும்வரையில் போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் அனாவசியமான ஆப்களை பின்னணியில் வைத்திருக்க வேண்டாம். அவை சார்ஜ் போடும் போது தாக்குப் பிடிக்க அதிக நேரம் சார்ஜ் செய்யும்படி நேரும். அத்தனை ஆப்களையும் அணைத்துவிட்டு, சார்ஜ் போடுவது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நன்மை தரும்.



சிலர் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும்தான் சார்ஜ் போடுவார்கள். குறைந்தது 15 சதவிகிதம் இருக்கும்போதே சார்ஜ் போட்டுவிடுங்கள். இன்னும் சிலர் கொஞ்சூண்டு சார்ஜ் போட்டுக்கறேன் என அவசரத் தேவைக்கு 20 அல்லது 30 சதவிகிதம் போட்டு எடுத்துவிடுவர்கள். அது தவறு. போனில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் அளவுக்காவது சார்ஜ் ஏறவேண்டும். அப்போதுதான் உங்கள் பேட்டரியின் செயல்திறன் சரியாக இருக்கும்.
மொபைல்போன் கோளாறு : ரூ.47 ஆயிரம் இழப்பீடு

Added : மார் 19, 2018 02:36

சென்னை: மொபைல்போன் கோளாறு பிரச்னையில், தயாரிப்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 47 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், கார்த்திக், 45. இவர் அங்குள்ள, தனியார் மொபைல்போன் விற்பனை நிறுவனத்தில், 'சாம்சங்' மொபைல்போன், 32 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு வாங்கினார்.சில நாட்களில், கோளாறு ஏற்பட்டதால், சர்வீஸ் மையத்தில் கொடுத்தார். கோளாறு சரி செய்து கொடுத்தும், பயன்படுத்த முடியவில்லை. புதிய போன் வழங்க கேட்டதற்கு, நிறுவனம் மறுத்துவிட்டது.புதிய போன் வழங்க வேண்டும் அல்லது செலுத்திய தொகையுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், கார்த்திக் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'உற்பத்தியில் குறைபாடில்லை. புதிய உதிரி பாகம் இணைத்து, கோளாறு சரி செய்யப்பட்டது. மனுதாரர், போனை வாங்க மறுத்துவிட்டார். சேவையில், குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மொபைல்போன் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் உயிரொலிகண்ணன் பிறப்பித்த உத்தரவு:மொபைல்போன் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின், சேவையில் குறைபாடுள்ளது. இந்நிறுவனங்கள், மனுதாரருக்கு, மொபைல்போன் தொகை, 32 ஆயிரத்து, 500 ரூபாய் திரும்ப வழங்குவதுடன், இழப்பீடு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 47 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது.
நியமனங்கள் கூடாது : பல்கலைகளுக்கு உத்தரவு

Added : மார் 19, 2018 00:21

தமிழக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், நிதி இழப்புகளை தவிர்க்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைகேடு புகாரின் எதிரொலியாக, கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி, பணி நியமனத்துக்கு பேரம் பேசியதாக, கையும் களவுமாக பிடிபட்டார்.இதை தொடர்ந்து, உயர்கல்வித்துறையின் ஊழல் பிரச்னைகள் பூதாகரமாக வெடித்தன. பல்வேறு பல்கலைகளில் பணி நியமனங்களுக்கு, பேரம் பேசப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதேபோல், பல்கலைகளில் நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டது. 'நிதி பற்றாக்குறை நிலவுவதால், சம்பளம் வழங்க, கூடுதல் நிதி ஒதுக்க முடியாது' என, தமிழக அரசின், நிதித்துறை கைவிரித்துள்ளது.எனவே, நிதித்துறையின் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு அமைச்சகமும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், புதிய பணி நியமனங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளன.

- நமது நிருபர் -
பழைய ரூபாய் நோட்டுகளின் கதி? ரிசர்வ் வங்கி விளக்கம்

Added : மார் 19, 2018 05:17 



புதுடில்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த, 2016, நவ., 8ம் தேதி, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. செல்லாத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், ரிசர்வ் வங்கியில் மக்கள், 'டிபாசிட்' செய்தனர்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதில் விபரம்: வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட செல்லாத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், சரிபார்க்கும் பணிகள் முடிந்த பின், இயந்திரங்கள் மூலம், சிறு துண்டுகளாக்கப்படுகின்றன.

அதன் பின், அந்த துண்டுகள், இயந்திரம் மூலம், பலம் வாய்ந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டிகளாக்கப்படுகின்றன. அதன் பின், அவை அனைத்தும், ஏலம் விடப்பட்டு அகற்றப்படுகின்றன. பழைய ரூபாய் நோட்டுகள், மறு சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நோட்டுகளை சரிபார்க்கும் பணிகளில், 59 அதிநவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
20,21ல் திருமலையில் இலவச தரிசனம்

Added : மார் 19, 2018 04:51



திருப்பதி: திருமலையில், மார்ச், 20ல், மூத்த குடிமக்கள் மற்றும் மார்ச், 21ல் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசன வசதி செய்யப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசன வசதி வழங்கி வருகிறது. வரும், மார்ச், 20ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதேபோல், மார்ச், 21ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மதியம், 1:30 மணிவரை, ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசன வசதி செய்யப்பட உள்ளது.
வருகிற 25-ந் தேதி சேலம்-சென்னை இடையே பயணிகள் விமான சேவை



வருகிற 25-ந் தேதி சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்குகிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மார்ச் 19, 2018, 03:00 AM

ஓமலூர்,

வருகிற 25-ந் தேதி சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்குகிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியில் சேலம் விமானம் நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்து பயணிகள் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. அதன்படி வருகிற 25-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்றும், சென்னை-சேலம், சேலம்-சென்னை இடையே தினமும் விமானம் இயக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வருகிற 25-ந் தேதி காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி காமலா புரம் விமான நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், விமான சேவை தொடக்க விழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், விமான நிலையத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்து பயணிகள் வசதிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சரின் தீவிர முயற்சியால் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமான சேவையை வருகிற 25-ந் தேதி நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் ட்ரூஜெட் நிறுவனம் விமான சேவையில் ஈடுபட உள்ளது. விமானத்தில் 74 இருக்கைகள் இருக்கும்.

சென்னையில் இருந்து தினமும் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம், சேலத்திற்கு 10.40 மணிக்கு வந்தடையும். அதேபோல், சேலத்தில் இருந்து 11 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 11.50 மணிக்கு செல்லும். இந்த திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.1,499 கட்டணம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் விமான நிலையத்திற்கு சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே நடக்கிறது. விரைவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கலந்தாலோசித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
தெலுங்குதேசம் உறவு முறிந்தது




அரசியலில் ஒரு கட்சிக்கு ஏதாவது சறுக்கல் வந்தால், அதைத்தொடர்ந்து பல பாதிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும்.

மார்ச் 19 2018, 03:00 AM

அரசியலில் ஒரு கட்சிக்கு ஏதாவது சறுக்கல் வந்தால், அதைத்தொடர்ந்து பல பாதிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும். பா.ஜ.க.வி.ன் முக்கியக்கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சி, தன்உறவை முறித்துக்கொண்டது. அடுத்த ஆண்டு ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. 2014–ம் ஆண்டு ஆந்திரா என்றும், தெலுங்கானா என்றும் இரண்டு மாநிலங்களாக ஒன்றுபட்ட ஆந்திரா பிரிக்கப்பட்டது. ஐதராபாத்தைச் சுற்றித்தான் அனைத்து தொழில்நிறுவனங்களும் இருக்கின்றன. ஐதராபாத் தெலுங்கானாவுக்குச் செல்லும்போது ஆந்திராவுக்கு வருமான இழப்பு ஏற்படும். எனவே, ஆந்திராவுக்கு ‘சிறப்பு மாநில அந்தஸ்து’ வழங்கப்பட்டு, கூடுதல் உதவிகள் அளிக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்குப்பிறகு தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று கோரி வந்தார்.

ஆனால் 14–வது நிதிக்குழு எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க அனுமதிக்கவில்லை என்று திட்டவட்டமாக மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவித்துவிட்டார். ஆனால் ஆந்திராவுக்கு, மத்திய அரசாங்கம் சிறப்பு உதவிகளை வழங்கும். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு திட்டங்களில் 90 சதவீத செலவை மத்திய அரசாங்கம் பங்கிட்டுகொள்ளும். வருவாய் பற்றாக்குறைக்காக ரூ.1,600 கோடி நிதிஉதவி வழங்கும் என்று சொன்னாலும், சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதில் சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறார். இந்தநிலையில், கடந்த 8–ந்தேதி மத்திய மந்திரி சபையில் அங்கம்வகித்த தெலுங்குதேசம் மந்திரிகள் ராஜினாமா செய்தார்கள். பதிலுக்கு பதிலாக ஆந்திர மந்திரி சபையில் அங்கம்வகித்த பா.ஜ.க.வின் 2 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையில் இருந்து விலகினாலும், கூட்டணியில் தொடருகிறோம் என்று அப்போது சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதலில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொன்ன சந்திரபாபு நாயுடு, தெலுங்குதேசம் சார்பில் தனியாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்குதேசம் தீர்மானத்தை முன்மொழிய முயற்சித்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்றுகொண்டு கோ‌ஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். இதுபோல, தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைக்காக கோ‌ஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அவை அமைதியாக இருந்தால்தான் என்னால் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளமுடியும் என்று சபாநாயகர் கூறி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவை அமைதியாக நடக்குமா? நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? அல்லது நிதி மசோதாக்களெல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், நாள் குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுவிடுமா? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொண்டாலும் தோற்கடிக்கப்படுவது உறுதி. ஆனால், 4 ஆண்டுகளாக இருந்த கூட்டணி முறிந்துவிட்டதுதான் அரசியலில் பெரிய திருப்பம்.

Sunday, March 18, 2018

வெளிநாட்டினர் வசிப்பதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரம் சிங்கப்பூர்: ஆய்வு 
 
15/3/2018 18:03


உலகில், வெளிநாட்டினர் வசிப்பதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தெரிவாகியுள்ளது.

ஐந்தாம் ஆண்டாக சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

133 நகரங்களில், 150 மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

பாரிஸ் இரண்டாம் இடத்திலும் ஸூரிக் (Zurich) மூன்றாவது இடத்திலும் வந்தன.

ஆண்டுக்கு இரண்டு முறை அந்த ஆய்வை Economist சஞ்சிகை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டில் தங்களின் ஊழியர்களை வேலைக்கு அனுப்பும் போது அவர்களுக்கு நியாயமான சம்பளங்களை நிர்ணயிக்க நிர்வாகிகளுக்கு உதவியாக அந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலயே, சொந்த வாகனத்தை வைத்திருக்க மிகவும் விலையுயர்ந்த இடமாக சிங்கப்பூர் இருக்கிறது. ஆடைகளை வாங்க மூன்றாவது விலையுயர்ந்த இடமாகவும் சிங்கப்பூர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்ந்த மருத்துவமனை - எப்போது திறக்கப்பட்டது தெரியுமா? 

16/3/2018 9:03

2002ஆம் ஆண்டு, இன்றைய தினம் ராஃபிள்ஸ் தனியார் மருத்துவமனை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் முன்னோடியாகத் திகழ்ந்து, உலகின் கவனத்தை ஈர்த்தது மருத்துவமனை.

540,000 சதுர அடி பரப்பளவில் இயங்கும் மருத்துவமனை, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய தனியார் மருத்துவமனையாகத் திகழ்கிறது.
சிங்கப்பூரில் விற்கப்படும் போத்தல் தண்ணீர் பாதுகாப்பானது'
17/3/2018 10:12

சிங்கப்பூரில் போத்தல்களில் விற்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது என்று வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவற்றின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும், அவை பாதுகாப்புத் தரநிலைகளை எட்டியதாகவும் ஆணையம் சொன்னது.

உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளைச் சோதிக்க, ஆணையம் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்வது வழக்கம்.

பொருட்கள் தரநிலைகளை எட்டத் தவறினால், அவற்றை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்படும்.

இதுவரை போத்தல் தண்ணீரைச் சோதனை செய்ததில் சந்தேகத்துக்குரிய ஏதும் தென்படவில்லை என்று ஆணையம் தெரிவித்தது.

உலகின் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் போத்தல் தண்ணீர் சிலவற்றில் ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பதாய் அண்மையில் தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து சேனல் நியூஸ் ஏஷியா ஆணையத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தது.

பாடலின் பொன்வரி எனப்படும் முதலடி!

- கவிஞர் மகுடேசுவரன் 
 
ஒரு திரைப்படப்பாடல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கவேண்டும் என்றால் அது கருத்துச் செறிவோடு இருக்க வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் காண்கின்ற ஒரு சூழ்நிலையை நினைவூட்டும் தன்மையோடு அதன் கருத்துகள் அமைய வேண்டும். நடைமுறைக்கு ஒவ்வாத எந்தத் திரைப்படப் பாடலும் காலத்தில் நிலைத்து நிற்பதில்லை. காதலுணர்ச்சிக்கு எல்லார் மனங்களிலும் இடமிருக்கிறது என்பதாலேயே காதல் பாடல்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. வாழ்க்கையில் காதலுக்கு இடந்தராதவர்கூட தம் மனத்தின் ஓரத்தில் அதற்குரிய இடத்தை விட்டுவைத்திருப்பார். ஒரு காதல் பாடல் நம்முடைய நினைவுகளைப் பசுமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

புகழ்பெற்ற பாடல்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. ஒரு பாட்டுக்கு முதல் வரியாய் அமைய வேண்டியது மிக மிக வலிமையாக இருக்க வேண்டும். அந்தப் பாடலின் முழுமையான கருத்து என்னவோ அதனை அந்த முதல் வரியிலேயே சொல்ல வேண்டும். இதனைச் சிலர் மேலும் விரிவுபடுத்தி பாடலுக்குப் பல்லவி நன்றாக அமையவேண்டும் என்பார்கள். பல்லவி என்பது இரண்டு மூன்று நான்கு வரிகளால் அமையும். நான்கு வரிகள் வரைக்கும் செல்ல வேண்டியதில்லை. பாடலில் முதல் அடி சிறப்பாக அமைந்துவிட்டாலே போதும். அந்தப் பாடலின் ஒட்டுமொத்தச் சாரம் விளங்கிவிடும். பாடலுக்குள் சுவைஞர்கள் திளைக்கத் தொடங்குவர். பாட்டு தன் முதல்வரியிலிருந்தே மக்களின் எண்ணத்தில் இடம்பிடிக்கத் தொடங்கும். ஐயத்திற்கிடமின்றி அந்தப் பாடல் வெற்றி பெறும். 'ஹிட் ஆகும்' என்பது வெற்றிக்குத் திரைத்துறையினர் பயன்படுத்தும் மொழி.

'மன்மத லீலையை வென்றார் உண்டோ ?' என்று பாட்டு தொடங்குகிறது. இதுதான் பாடலின் முதல் வரி. யாப்பிலக்கணத்தில் பாடலின் முதல் வரியை 'அடி' என்பார்கள். பாடலின் முதல் வரியை எப்படித் தொடங்குவது என்பது தெரியாமல் புலவர் தவிக்கும்போது யாரேனும் ஒருவர் எதையாவது கூறிச்செல்ல அதனையே முதல் வரியாக்குவார். அதற்கு 'அடியெடுத்துக் கொடுத்தல்' என்று பெயர். ஒரு திரைப்பாடல் வெற்றி பெறவேண்டுமானால் முதல் அடியைத் தங்கவரிபோல் அமைக்கவேண்டும். அந்தப் பாடலின் உயிரை அந்த ஒற்றை அடிக்குள் பொதிக்க வேண்டும். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ ?' என்று முதல் அடி தொடங்கியதும் பாடல் எடுத்துக்கொண்ட பொருள் விளங்கிவிடுகிறது. மன்மதன் செய்யும் திருவிளையாடலை யார்தான் வெல்ல முடியும் ? பாட்டின் சாரம் முதல் அடிக்குள்ளேயே முழுமையாகக் கிடைத்துவிட்டது. இனி பாடலின் மீதப் பகுதிகள், அந்த முதல் அடி என்ன கூறிற்றோ அதை விளக்கி விரித்து அமையும். பாடலைக்கூட மறந்துவிடுவார்கள். பாடலின் முதலடியை மறக்கவே மாட்டார்கள். எத்துணை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பாடலுக்கு அடையாளமாவதும் முதலடிதான். 'அந்த மன்மத லீலையை வென்றார் உண்டோ பாட்டைப் போடுங்க' என்றுதான் கூறுவார்கள். ஒரு பாட்டுக்கு அதன் முதலடி வகிக்கும் தலைமைப் பண்பை மறந்துவிட்டு எழுதப்பட்ட பாடல்கள் எழுந்து நிற்கவே இல்லை.

'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ?' என்னும் பாடல் முதலடி சிறப்பாக அமைந்த பாடல்களில் ஒன்று. முதலடியில் பாடலின் பொருள் திரட்டு மட்டுமன்று, படத்தின் பொருளும் அமைந்துவிட்டது. இதுதான் ஒரு பாடல் இடம்பெற வேண்டிய வலிமையான சூழல். படத்தின் முழுப்பொருளையும் ஒரு பாடலில் புகுத்தித் தருகின்ற மேதைமை. படத்தின் முழு விளக்கமாக ஒரு பாடலின் முதலடியும் அமைந்துவிட்டால் அந்தப் பாட்டு படத்தையே தூக்கி நிறுத்தும். எல்லாச் சூழ்நிலையிலும் படத்தின் விளைபொருள் அமைந்த பாட்டுச்சூழல் அமையாது. ஆனால், கட்டாயம் ஒரு பாடலேனும் அந்தச் சூழ்நிலையில் அமையும். படத்தின் இறுதிக் கட்டத்தில் அமையும் பாடலானது அந்தப் படத்தின் முழுப்பிழிவையும் கொண்டிருக்கும். தற்காலத்தில் அவ்வளவு அடர்த்தியான கதைகளைத் தேர்வதில் நம்மவர்கள் தோற்றதனால்தான் பொருளடர்த்தியுள்ள இறுதிப் பாடல்கள் அமையவில்லை.

'அன்னக்கிளி உன்னைத் தேடுதே...' என்பது முதலடி. பாடலின் முழுப்பொருளும் அதுதான். அன்னக்கிளி தனக்கு மணவாளனாக வருபவனைத் தேடுகிறாள். அவனைப் பற்றிய கனவில் மிதக்கிறாள். என்னவன் யார் என்ற தேடலில் கன்னியானவள் காத்திருக்கிறாள். அம்மனநிலையைப் பாடலின் முதலடி கூறிவிட்டது. 'சொன்னது நீதானா ?' என்பது இரண்டே சொற்களால் ஆன முதலடி. 'நீயா சொன்னாய் ?' என்று அவன் சொன்னதை நினைத்துப் பாடுகிறாள். அழுது அரற்றுகிறாள். 'நீ சொல்லலாமா ?' என்று தவிக்கிறாள். 'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ?' என்பது முதலடி. நினைவை வாட்டி வதக்கும் காதலை மறந்து தொலைய மாட்டாயா என்று மனத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வி. மனத்தோடு தொடர்புடைய ஒவ்வொன்றையும் கூட்டிச் சொல்கிறது அந்தப் பாடல். 'பூங்காத்து திரும்புமா ?' என்றதும் முழுப்பாடலுக்கும் உயிர் வந்துவிடுகிறது. 'நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா...' என்னும் பாடலின் முதலடியிலேயே அந்தச் சூழல் விளக்கப்பட்டுவிடுகிறது. நீ கேட்டுவிட்டால் நான் மாட்டேன் என்றே சொல்லமாட்டேன்.... எல்லாவற்றையும் கொடுத்துவிடுவேன்... எனக்கு உயிரானவன் நீ... அனைத்தையும் தந்துவிடுவேன் என்பதில் அவளுடைய பெருங்காதல் வெளிப்படுகிறது.
ஒரு பாடல் தேறுமா தேறாதா, சிறப்பாக இருக்குமா இராதா, மனங்கவருமா கவராதா என்பதை அதன் முதலடியிலேயே அறியலாம். முதலடியே தடுமாறினால் அந்தப் பாட்டு காலத்தை மீறி நில்லாது. கண்ணதாசனும் வாலியும் பாடலின் முதலடியைச் சிறப்பாக அமைத்தவர்கள். கண்ணதாசன் அத்தகைய முதலடிகளை அமைப்பதில், அதன் வழியே பல்லவியை எடுத்துச் செல்வதில் இலக்கியப் புலமையைக் காட்டுவார்.

 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்.. நான் வாழ யார் பாடுவார் ? என்பாடல் நான் பாடப் பலராடுவார்... இனி என்னோடு யார் ஆடுவார் ?' என்னும் பாடலில் பயின்றுள்ள சொற்களைப் பாருங்கள். எல்லாமே எளிய சொற்கள். முதலடியிலேயே பாடற்சூழ்நிலை கூறப்பட்டுவிட்டது. ஆனால், எவ்வெளிய சொற்களால் ஆக்கப்பட்டுள்ள சொற்றொடர் எளிமையானதன்று. இன்னொரு கவிஞரால் இயற்ற முடிவதுமன்று. இனிமேல் பாடலைக் கேட்கத் தொடங்கினால் அந்தப் பாடலின் முதலடியைக் கூர்ந்து கேளுங்கள்.

source: filmibeat.com
Dailyhunt

குரல்கள்-லிவிங் டு கெதர் யதார்த்தமாகி வருகிறதா?

2018-03-15@ 15:38:50

நன்றி குங்குமம் தோழி
ஒருவர் மீது ஒருவர் விருப்பும், சரியான புரிதலும் கொண்டு ஓர் உறவுக்குச் செல்ல விரும்பினால் எவர் அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்பதே லிவிங் டுகெதர் உறவு முறையாகும். காதலையே பெரும் கலாச்சார சீரழிவாகக் கருதும் இந்த பிற்போக்கான சமூகம், லிவிங் டுகெதர் உறவு முறையை பெரும் கசப்புடனேயே அணுகுகிறது. ஒவ்வொரு மதம்/இனம்/சாதி ஆகியவற்றுக்கான முறைப்படி திருமணம் செய்து வாழ்வதையே நம் கலாச்சாரமாகக் கருதுபவர்கள் இந்த உறவு முறையை எதிர்க்கவே செய்கிறார்கள். கலாச்சார மீறல் என்பதையெல்லாம் கடந்து ஆண் - பெண் உளவியல் அடிப்படையில் இந்த உறவை எப்படிப் பார்க்கலாம்? இது வெற்றிகரமான உறவாக நீடிப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்று சில பெண்களிடம் கேட்டேன்...

ஜெயராணி, எழுத்தாளர்

இந்தியா போன்ற கலாச்சார மதிப்பீடுகள் நிறைந்த சமூகத்தில் திருமண உறவே நிரந்தரம் இல்லாத உறவாகத்தான் இருக்கிறது. லிவிங் டுகெதர் உறவு முறை திருமண முறையின் தோல்வியையே சுட்டுகிறது. இரண்டு சுதந்திரமான மனிதர்கள் ஒரு குடையின் கீழ் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவர் மீது மற்றொருவர் புரிந்துணர்வோடும், சமத்துவத்தோடும் அந்த வாழ்வை எடுத்துச் செல்வதுதான் லிவிங் டுகெதர் உறவு முறை. ஆனால் இந்த உறவு முறைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான புரிதலுடன் அந்த உறவை மேற்கொள்ளவதில்லை.

அவர்களின் சௌகரியத்துக்காக தொடரப்படும் நிலையில் இந்த உறவில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கவே செய்யும். லிவிங் டுகெதர் மட்டுமல்ல திருமண உறவிலும் அப்படித்தான். இந்த உறவின் மீதான ஆழ்ந்த புரிதல் என்பது பிரிந்து செல்வதும் அவர்களின் உரிமை சார்ந்ததே என்பதை புரிந்து கொண்டு மரியாதையுடன் அதை ஏற்றுக் கொள்வது. அது போல ஒவ்வொன்றிலும் சம உரிமை கொடுத்து நடத்துவது. ஆண் - பெண் உறவு குறித்த சரியான புரிதலோடு மரியாதைக்குரிய உறவுக்குள் செல்கிறவர்கள் வெற்றிகரமாக வாழ்வார்கள்.

இந்திய ஆண்களுக்கு உறவு முறை குறித்த சரியான புரிதலே இல்லை. லிவிங் உறவுக்குள் இருந்தாலும் பெண் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது சமத்துவமான உறவுக்கு அடிகோலாது. இந்திய சூழலில் பாலியல் சுதந்திரம் கிடையாது. எதிர்பாலினருடன் பழகுவதற்கான வாய்ப்பு கூட மறுக்கப்படும் நிலைதான் புரிதலற்ற உறவு முறைக்குள் தள்ளுகிறது. லிவிங் உறவோ, திருமண உறவோ எதுவாக இருந்தாலும் ஆண் - பெண் இருவரும் மனமொத்து, சமத்துவத்தை நிலைநாட்டி மேற்கொள்ளப்படும் நிலையில்தான் அது வெற்றிகரமான உறவாக இருக்கும்.

திலகவதி, தொழில் முனைவோர்

ஆண் - பெண் இருவரும் சேர்ந்து வாழப்போகிறார்கள் என்பதனை ஊருக்கு அறிவிக்கும் நிகழ்வுதான் திருமணம். ஆனால் எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் வாழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இருவருக்கும் ஒத்துப் போகும் நிலையில் தாராளமாக அவர்கள் வாழலாம். அதே போல் இருவருக்கும் அந்த உறவு உவப்பானதாக இல்லையென்றால் பிரிந்து செல்லலாம். ஊரைக்கூட்டி தாலி கட்டி திருமணம் புரிவதாலோ, பதிவு செய்வதாலோ மட்டும் யாராலும் இணைந்து வாழ முடியாது.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்துவது மட்டுமே அந்த உறவைத் தக்க வைக்கும். சத்தியமங்கலம் அருகே ஒரு பழங்குடி கிராமத்தில் ஆண் - பெண் விரும்பினால் தாராளமாக தனியே விடு கட்டி வாழலாம். திருமணம் செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த முறை பழங்காலத்தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. மேற்கத்திய தாக்கம் என்று நினைக்கத் தேவையில்லை. லிவிங் டுகெதர் உறவில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த உறவு உண்மையான உறவாக இருக்க வேண்டும்.

வெண்பா கீதாயன், கல்லூரி மாணவி

திருமண வாழ்க்கையை விடவும் சிக்கலானது லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை. வெறும் காதலும் காமமும் மட்டுமே அங்கு பங்குகொள்வதில்லை. திருமணமானால் வருகின்ற அத்தனை பொறுப்புகளையும் திருமணம் செய்யாமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்களில் காட்டுகிற மாதிரி தினமும் ஊர் சுற்றிவிட்டு இரவில் கட்டிப்பிடித்து தூங்குவது அல்லது ஒரே வீட்டில் ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பது மட்டுமே லிவிங் உறவு கிடையாது. பாலியல்ரீதியான உறவு இருந்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமைப்பது, துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை ஒழுங்குசெய்வது என எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த விஷயங்களிலேயே சண்டை வரத்துவங்கிவிடும்.

காதலர்களாக இருக்கும்போது காதல் மட்டுமே இருந்த உறவு லிவிங் வாழ்க்கைக்குள் செல்லும்போது புரிதல், பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு தொடர்வதாக இருக்கும். மேலும் இந்த உறவில் பொருளாதாரம் முக்கியப்பங்கு வகிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் உறவு முறிவுகள் இந்த உறவில் அதிகம். திருமணம் செய்து கொள்வதை விடவும் அதீத பக்குவம் இருந்தால் மட்டுமே இந்த உறவுக்குள் செல்ல வேண்டும். இதனை கலாச்சார சீரழிவு என்று நாம் பார்க்க முடியாது. திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்தாகி, மறுமணம் செய்வதை விட இது போன்ற உறவில் ஒருவருடன் வாழ்ந்து பார்த்து பிடிக்கவில்லையெனில் நிம்மதியாக விலகுவதே நல்லது. இந்த வாழ்க்கையை வெற்றிகரமாகத் தொடர முடியும் என்கிற நம்பிக்கை வரும்போது திருமணத்தை நோக்கி நகரலாம்.

விபீஷிகா, ஊடகவியலாளர்

வீட்டில் பார்த்து திருமணம் நடந்தாலும் சரி, காதல் திருமணமானாலும் சரி முன் போல தற்போதைய உறவுமுறை இல்லை. திருமணம் ஆனாலும் மனதுக்கு ஒப்பவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடுகின்றனர். அப்படி இருக்கும்போது தற்போதைய காலக்கட்டத்தில் லிவ்-இன் இருப்பதும் திருமணம் செய்துகொண்டு இருப்பதும் ஒன்றுதான். ஆகவே இந்த உறவு முறையை சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்க வேண்டிய தேவை இல்லை.

விஜி பழனிச்சாமி, தனியார் நிறுவன ஊழியர்

என் 25வது வயதில்தான் சென்னைக்கு   வந்தேன். 16 வயதிலேயே திருமணமாகி அந்த உறவு தோல்வியில் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன். இள வயதுத் திருமணத்தில் காதல், பாலியல் உறவு என எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். உறவின் மீது நம்பிக்கை அற்று, சிதைக்கப்பட்டவளாக இருந்தேன். எனது நண்பர்கள் என்னை மறுமணம் செய்து கொள்ளும்படி சொன்னதோடு மாப்பிள்ளையும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் என் உடல் மீதும், எனது வருவாயின் மீதும்தான் குறிக்கோளாக இருந்தார்கள்.

என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் உறவாக அது இல்லை. காரணம் நாம் சிவில் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமூகம் பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் கட்டிய கணவனுடன் வாழ்ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இங்கு புனிதம் என்று பார்க்கப்படுகிற எல்லாமே பெண்களை மனதளவில் பாதிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருகிறது. ஒரு சிங்கிள் மதராக நான் என் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எல்லா குடும்பங்களைப் போலவும், குழந்தைகளின் படிப்பு, மற்ற செலவுகள் என எல்லாம் சரிசமமாகத்தான் இருக்கிறது. எனக்கு லிவிங் டுகெதர் உறவு முறையே ஏற்ற ஒன்றாக நான் கருதுகிறேன்.

லிவிங் டுகெதர் உறவு முறை என்பது குடும்ப அமைப்புக்கு எதிரானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது குடும்ப அமைப்பின் இன்னொரு வடிவம் என்றே நாம் பார்க்க வேண்டும். இது உறவுக்குள் நிலவும் இறுக்கத்தைத் தளர்த்தும். குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகள், கொலைகள் தவிர்க்கப்படும். ஆணும் பெண்ணும் தங்களின் சுய அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் சேர்ந்துவாழ இதில் மட்டுமே சாத்தியமுள்ளது. சமூகத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், இது திருமண உறவைவிட சிறப்பானதாக இருக்கும்.

அந்த வகையில் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை என்னை பொறுத்த வரை யாரையும் புண்படுத்தாத அல்லது குறிப்பாக பெண்களை உடைமையாக பார்க்காத உறவாக இருக்கிறது. இந்த உறவு முறையில் பெண்ணின் ஆளுமை எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. சரியான புரிந்துணர்வு இருக்கும்பட்சத்தில் இருவரும் சீராக வளரமுடியும். இந்த வாழ்க்கை முறைக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை என்கிறார்கள்.

சாதியை ஒழிக்க இந்த முறை முக்கியப் பங்கு வகிக்கும் என நான் நம்புகிறேன். என்னிடம் திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு ஆலோசனை கேட்கும் பெண்களுக்கு இந்த உறவு முறையைத்தான் பரிந்துரைக்கிறேன். பெண்ணின் உடல்ரீதியான தேவைகளை இந்த சமூகம் புரிந்து கொள்வதே இல்லை. நான் சிங்கிள் மதராக இருப்பதனால் ஆரம்ப காலக்கட்டங்களில் எனக்கு பாதுகாப்பு இல்லாமல், பல்வேறு தொல்லைகளை அனுபவித்தேன். ஆனால் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் பாதுகாப்பாகவும், தன்னைம்பிக்கை நிறைந்தவளாகவும் இருக்கிறேன்.

- கி.ச.திலீபன்

தூக்கமின்மையை போக்கும் மல்லிகை

2018-03-13@ 14:25:58

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், அன்றாடம் ஒரு மூலிகை அன்றாடம் ஒரு மருத்துவம் என மிகவும் எளிய பயனுள்ள மருத்துவ முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும் மல்லிகையின் பயன்கள் குறித்து பார்க்கலாம். மல்லிகை மணம் நிறைந்தது. தலையில் சூடத்தக்கது என்பது மட்டும் இன்றி அதன் மலர், இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

மல்லிகை மலர்கள் பல வகைப்பட்டாலும் ஏறத்தாழ அனைத்து பூக்களிலும் குணங்கள் ஒன்றாகவே உள்ளது. வாசம் தரும் மல்லிகை பூக்களை பெண்கள் தலையில் வைத்துக்கொண்டாலோ அல்லது தலையணையின் அடியில் வைத்தாலோ மன இறுக்கம் விலகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளை பற்றி இனி அறிந்து கொள்வோம். மல்லிகை பூக்களை பயன்படுத்தி தூக்கமின்மையை போக்கும் மருந்து செய்யலாம். தேவையான பொருட்கள்: மல்லிகை பூ, பனங்கற்கண்டு பொடி.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது மல்லிகை பூவை போட்டு அதன் மீது பொடித்து வைத்துள்ள பனங்கற்கண்டு பொடியை தூவவும். இதே முறையில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக போட்டு அந்த பாத்திரத்தை ஒரு மெல்லிய துணியால் மூடி இறுக கட்டி அதை தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் வைத்து வர அது குல்கந்து பதத்திற்கு வரும். இதனை நன்கு கிளறி தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு படுக்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்ைன தீரும்.

இதனை சிரப்பாகவும் குடித்து வரலாம். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டை தவிர்த்து வெறும் மல்லிகையை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவரலாம். மல்லிகை இலையை பயன்படுத்தி பொடுகை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மல்லிகை இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: தேவையான மல்லிகை இலையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு பங்கு விழுதுக்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணெய் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் இந்த விழுதை போட்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு கிளறி கொதிக்க விடவும். நல்ல தைல பதம் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் இதனை தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து சீகக்காய் போட்டு குளித்துவர பொடுகு பிரச்னை நீங்கும். படை, சொரி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக  இந்த எண்ணெய் அமைகிறது.

காது வலி, சீழ் வடிதல், பூஞ்சை காளான் பிரச்னைகளுக்கும் இந்த எண்ணெயில் 2 சொட்டு விட எளிய தீர்வு கிடைக்கும். மேலும் மல்லிகை இலையை விளக்கெண்ணெயில் இட்டு வதக்கி பற்றாக போட்டு வர வீக்கம் மற்றும் வலி கட்டுப்படும். இளம் தாய்மார்களுக்கு பால் கட்டும் பிரச்னைக்கு மல்லிகை பூவை மார்பில் வைத்து இரவு முழுவதும் கட்டினால் பால்கட்டு கரையும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ள இயற்கையின் கொடையான மல்லிகையை பயன்படுத்தி பயன்பெறுவோம்.

சிப்ஸுக்கும் பப்ஸுக்கும் குட்பை

2018-03-13@ 14:25:05
நன்றி குங்குமம் டாக்டர்

மாத்தி யோசி

‘‘நொறுக்குத்தீனி என்பதே ஆரோக்கியக் கேடு என்று சொல்லும் அளவு இன்று நிலைமை மாறிவிட்டது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், ஐஸ்க்ரீம் வகைகள், மிட்டாய் வகைகள், ரசாயன கலவைகள் நிறைந்த குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று இப்போது நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாமே ஆரோக்கியக் கேட்டை உண்டாக்குபவையாகவே இருக்கின்றன.

தேவைக்கு அதிகமான உப்புச்சத்தும், இனிப்புச்சத்தும் சேர்க்கப்பட்டே இந்த தின்பண்டங்கள் தயாராகின்றன. மேலும் இந்த தின்பண்டங்கள் கண்ணைக் கவரும் வகையில் இருப்பதற்காக ரசாயன சேர்க்கையும், கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்திகளும் சேர்க்கப்பட்டே தயாராகின்றன. குறிப்பாக, இந்த தின்பண்டங்களின் ஆபத்தை உணராமல் குழந்தைகள் பெரிதும் விரும்பி உண்கிறார்கள்.

ஆரோக்கியமான குழந்தையே, ஆரோக்கியமான சமுதாயம். அப்படிப்பட்ட எதிர்கால சமுதாயத்துக்கு தங்களின் அறியாமையால் பெற்றோரே கேடுவிளைவிக்கும் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துகிறார்கள். தாங்கள் உணர்ந்திருந்தாலும் குழந்தை விரும்புகிறதே என்று அவர்களின் பிடிவாதத்தை சமாளிக்க முடியாமலும் வாங்கித் தருகிறார்கள்.

இந்நிலையை மாற்ற நொறுக்குத்தீனிகளை ஆரோக்கியமானதாக்க முயற்சி செய்ய வேண்டும். சத்தான காய்கறிகள், பழங்கள், கடலைமிட்டாய், சுண்டல் போன்றவற்றை அவர்களுக்குப் பிடித்த விதத்தில் தயார் செய்து கொடுத்துப் பழக்கப்படுத்தினால் இந்த மாற்றம் சாத்தியமாகும். இதன்மூலம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்க்க முடியும். குழந்தைகளின் எதிர்காலத்தை பல வகையான நோய் அபாயங்களிலிருந்தும் காக்க முடியும்’’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் தேவி, வீட்டிலேயே தயார் செய்து கொள்ளும் வகையில் நான்கு ரெசிபிகளை இங்கே விளக்குகிறார்.

எனர்ஜி பேக்டு பார் (Energy Packed Bar)

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்,
பாதாம் கொட்டை - 100 கிராம்,
பிஸ்தா கொட்டை - 100 கிராம்,
அக்ரூட் கொட்டை - 100 கிராம்,
விதையில்லாத பேரீச்சம்பழம் - 50 கிராம்,
அத்திப்பழம் - 50 கிராம்,
தேன் - 2 தேக்கரண்டி.

செய்முறை

சூடான கடாயில் வேர்க்கடலை, பாதம், பிஸ்தா, அக்ரூட் கொட்டைகளை நன்கு வறுத்து உலர்ந்தபிறகு, மிக்ஸ் ஜாரில் பொடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சேர்த்து 2 நிமிடங்கள் அரைக்கவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 2 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு தட்டில் நன்கு அழுத்தி 30 - 45 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை சிறிய துண்டுகளாக  குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதை குழந்தைகளுக்கு காலை நேரத்தி–்லும் மாலை நேரத்திலும் உணவுக்குப் பின் கொடுக்கலாம்.

இதில் எனர்ஜி - 464 Kcal, புரதம்- 15 கிராம், மாவுச்சத்து - 39 கிராம், கொழுப்புச்சத்து - 37 கிராம் அடங்கியுள்ளது. இதில் உள்ள கொட்டை வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் அவை குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.

ஸ்ப்ரௌட்ஸ் பனீர் டிக்கி (Sprouts Paneer Tikki)

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய பச்சைப்பயறு(வேகவைத்தது) - 100 கிராம்,
ஃப்ரெஷ் பனீர் - 50 கிராம்,
வேகவைத்த உருளைக்கிழங்கு - 50 கிராம்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 25 கிராம்,
நறுக்கிய வெங்காயம் - ¼ கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு,
கரம் மசாலா - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பச்சைப்பயறு, பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கை ஒன்று சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். இந்த மசித்த பொருளில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு சேர்த்து கடைசியாக பனீர் கலந்து சிறிய வட்டங்களாகத் தட்டி, சூடான தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தயார் செய்த பனீர் டிக்கியை சுட்டு எடுத்து புதினா டிப்பு உடன் சாப்பிடலாம்.

இதில் எனர்ஜி - 141 Kcal, புரதம் - 9.4 கிராம், மாவுச்சத்து - 21 கிராம், கொழுப்புச்சத்து - 3 கிராம் அளவிலும் அமைந்துள்ளது. புரதச்சத்து நிறைந்த பனீர் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. முளைக்கட்டிய  பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணியில் உள்ள வைட்டமின் C  குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிவப்பு அவல் பர்ஃபி (Red Rice Flakes Burfi)

தேவையான பொருட்கள்

சிவப்பு அவல் - 150 கிராம்,
வெல்லம் - 50 கிராம்,
தேங்காய்த் துருவல் - 50 கிராம்,
பால் - 50 மி.லி,
பாதாம், அக்ரூட், பிஸ்தா (நறுக்கியது) - 25 கிராம்,
ஏலக்காய் - 1.

செய்முறை

நறுக்கிய வெல்லத்தை ½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய பிறகு, பாகு பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய், கழுவிய சிவப்பு அவல், துருவிய தேங்காய், ஏலக்காய், நறுக்கிய பாதாம், அக்ரூட், பிஸ்தா சேர்ந்து கிளறவும்.

கடைசியாக 50 மி.லி பால் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து,கடாயை இறக்கியவுடன் ஒரு தட்டில் வெண்ணெய் தடவி பர்ஃபி கலவையை போட்டு½ மணிநேரம் கழித்து துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு மாலை வேளையில் கொடுக்கலாம். இதில் எனர்ஜி - 140 Kcal, புரதம் - 2.2 கிராம், மாவுச்சத்து - 22 கிராம், கொழுப்புச்சத்து - 4.9 கிராம் அடங்கியுள்ளது.

வெஜிடபிள் லாலிபாப் (Vegetable Lollipop)

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1 கப்,
கேரட் - ½ கப்,
பீட்ரூட் - ½ கப்,
முட்டைக்கோஸ் - ½ கப்,
பச்சைப்பட்டாணி - ½ கப்
பனீர் - 4 சிறிய துண்டுகள்,
கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
(மேற்கண்ட காய்கறிகளை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த காய்கறிகள் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.
அதை சிறிய வட்டமாகத் தட்டி அதன் உள்ளே ஒரு பனீர் துண்டு வைத்து பந்தைப்போல் உருட்டி, அதில் லாலிபாப் ஸ்டிக் வைத்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் வெஜிடபிள் லாலிபாப் தயார்.
இதில் எனர்ஜி - 137 Kcal, புரதம் - 1.8 கிராம், மாவுச்சத்து - 10.6 கிராம், கொழுப்புச்சத்து - 12 கிராம் அளவில் அடங்கியுள்ளது.

- க.இளஞ்சேரன்

நெய் நிஜமாகவே ஆபத்தானதா?!

2018-03-16@ 12:21:15
 
 

நன்றி குங்குமம் டாக்டர்

அலசல்


நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும், அஜீரணம் ஏற்படும், ஜீரணமாக காலதாமதம் ஆகும் என்று இக்கால இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மூலமாக நெய் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இது உண்மையா? இதற்கு காரணம் என்ன? இதற்கு ஓரு சரியான தீர்வு சொல்லும்படி ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்...

‘‘அடுக்கடுக்காக இப்படி நெய் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ளும் முன்னர், அதன் மருத்துவ சிறப்புகளை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். எத்தனை வகை எண்ணெய் வஸ்துக்கள் இருந்தாலும் அவற்றில் மிகச் சிறந்தது பசு நெய்யே. அச்சு வெல்லம், கருப்பட்டி போன்றவையே அதிக இனிப்புச் சுவையுடையது  சர்க்கரை என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்விட இவ்வுலகிலேயே மிகச் சிறந்த இனிப்புச் சுவையுடையது பசு நெய்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் என்று குறிப்பிடுவது இந்த பசு நெய்யைத்தான். பசு நெய் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அப்பொருளின் சுவை மற்றும் செயல்படும் திறனை அதிகரிக்கும்  தன்மையுடையது. கொடுக்கப்படுகிற உணவு அல்லது மருந்தினை நெய்யுடன் கலந்து கொடுக்கும்போது, அது மிக விரைவாக மூளையைச் சென்றடைகிறது. இதன் மூலம் சிந்தனைத்திறன், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடலில் வனப்பை உண்டாக்குகிறது.

உடல் பித்தத்தைக் குறைப்பதற்கு இந்த உலகில் உள்ள மிகச் சிறந்த பொருள் பசு நெய்தான். காலை, மதியம், மாலை மற்றும் இரவு போன்ற நேரங்களில் மதிய நேரமே உடலில் பித்தம் அதிகரித்து இருக்கும் என்பதால், மதிய உணவில் முறையாக தயாரிக்கப்பட்ட பசு நெய்யை சேர்த்துக்கொள்வது நல்லது. அது நஞ்சை முறிக்க, கண் பார்வைத்திறன் அதிகரிக்க பெரிதும் உதவுவதோடு விந்தணுக்கள் அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இப்படி பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் உகந்த பசு நெய்யை கீழ்க்கண்ட முறையில் தயாரித்தால்தான் மேற்கண்ட பலன்களை நாம் பெற முடியும். பசு மாட்டுக்கு இயற்கைமுறை உணவுகளான புல், தாவரங்கள், மரங்களின்  இலைதழைகள் மற்றும் புண்ணாக்கு, வைக்கோல், கஞ்சி போன்றவற்றையே கொடுக்க வேண்டும். இதுபோன்ற நம் பாரம்பரிய முறையில் வளர்கிற பசுவிடமிருந்து கிடைத்த பாலை தயிராக மாற்ற வேண்டும்.

தயிர் சரியான பக்குவம் அடைந்தவுடன் அதை  முறையாகக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்த பின்பு அந்த வெண்ணெயை உருக்கி நெய்யாக்க வேண்டும். இப்படி தயாரிக்கப்பட்ட பசு நெய்யின் சுவை, நிறம், திடம் மற்றும் பயன்படுத்தப்படும் அளவு போன்ற எந்த காரணத்திற்காகவும் அதில் எவ்வித மாறுதல்களையும் செய்யக்கூடாது. அதுவே சுத்தமான நெய்யாகவும் இருக்கும்.

கலப்பின பசுக்களிடமிருந்து கிடைத்த பால் அல்லது மாட்டுக்கு முறையான உணவுப் பொருட்கள் கொடுக்காமல் கிடைத்த பாலில் பல்வேறு வேதிப் பொருட்கள் கலந்து, அது தயிர்தானா என்கிற அளவுக்கு தயிராக்கி அதிலிருந்து தயார் செய்யப்படுகிற நெய் சுத்தமானதாகவும், மேலே சொன்ன உடல் ஆரோக்கிய நலன்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வாய்ப்பே இல்லை’’ என்றவரிடம் நெய்யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்...
‘‘நெய் பயன்படுத்தும்போது உணவு சூடாக இருக்க வேண்டும். காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் நெய் பயன்படுத்துதல் சரியானதல்ல. ஆனால், நாம் காலையில் நெய் கலந்த பொங்கல், தோசை என்றும் மாலை நெய் சார்ந்த இனிப்பு, பலகாரம் என்றும் இரவில் நெய் ரோஸ்ட் என்றும் சாப்பிடுகிறோம்.

இவை எல்லாம் முற்றிலும் தவறான உணவுப் பழக்கவழக்க முறை என்பதை நாம் புரிந்து கொள்வதோடு, சரியான உணவுப் பழக்கவழக்க முறைகளை அறிந்து, அதை பின்பற்றுவதே நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. நெய்யை அதிகமாக விரும்பி சாப்பிடுவோர்க்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். இதனால் ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்கள் அதை தவிர்க்க வேண்டும். பசு நெய்யை தகுதியானவர்கள், தகுதியான நேரத்தில், சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல்பருமன் ஏற்படாது. உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

அதனால், பாரம்பரிய உணவுகள் மேல் குற்றம் சொல்லாதீர்கள்.அவை யாவும் என்றைக்கும் நம் உடலுக்கு நன்மை அளிப்பவையே. நெய் உற்பத்தி செய்வது, அவரவர் உடல்நிலை அறிந்து உண்பது, எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களிலும் தவறு செய்வது நாம்தான். இப்படி அதை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் பல்வேறு முரண்பாடுகள் நம்மிடையே நிலவி வருகிறது.

முள்ளின் மீது நாம்போய் மிதித்துவிட்டு, முள் குத்திவிட்டது என்று அதன் மீது குற்றம் சுமத்திப் பேசுவது போலவே, தற்போது நெய்யின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை சரியான முறையில் தயாரித்து, சரியாக பயன்படுத்தாத நம் மேல்தான் தவறு. நெய்யின் மேல் எந்தத் தவறும் இல்லை’’ என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதன் பயன்கள் பற்றிய முக்கியமான 10 தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி.

1. நெய்யில் Medium Chain  Fatty Acid அதிகம் உள்ளது. இதை நம் உடலிலுள்ள ஈரல் நேரடியாக எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் உகந்தது.

2.இதில் நீரில் கரையும் வைட்டமின்களான A மற்றும் E உள்ளது. வைட்டமின் A கண்களுக்கு இன்றியமையாதது. வைட்டமின் E உடலிலுள்ள இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட உதவுகிறது.

3.இதில் வைட்டமின் K 2 மற்றும் Conjugated Linoleic Acid (CLA) என்கிற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. புல் மட்டுமே சாப்பிடும் மாட்டினுடைய பாலில் இச்சத்து அதிகம் உள்ளது. இது அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியது.

4.நெய் உடலில் பசியைத் தூண்டுகிறது.

5.இதிலுள்ள Butyric Acid உடல் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

6.இது குடலில் ஏற்படக்கூடிய புண்கள், வீக்கம் மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.

7.இதில் உள்ள Omega 3 Fatty acid, Omega 6 Fatty acid போன்றவை தாயின் கருவிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

8.சில குழந்தைகளுக்கு Lactose intolerance அல்லது Casein intolerance பிரச்னை இருக்கும். இப்பிரச்னையுடைய குழந்தையின் உடல் இச்சத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும். இதனால் அவர்களால் பால் சாப்பிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு நெய் சாப்பிட கொடுக்கலாம்.

9.மற்ற எண்ணெய் வகைகளை சூடாக்கும்போது அதிக வெப்பநிலையில் அதன் தன்மை மாறி உடல்நலனுக்கு ஒவ்வாததாக மாறுகிறது. ஆனால் நெய்யை 250 டிகிரி செல்சியஸ் அல்லது 482 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் சூடாக்கினாலும் அதன் தன்மையும் மாறாது, கெட்டும் போகாது.

10.நெய்யை எந்தவித குளிர்பதன பெட்டிகளிலும் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. அதை எல்லா விதமான வெளிப்புற வெப்பநிலையிலும், சாதாரணமாக ஒரு டப்பா அல்லது பாத்திரத்தில் பாதுகாத்துவைத்து ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தவும் முடியும், அதன் பயன்களையும் முழுமையாகப் பெற முடியும்.

- க.கதிரவன்
படங்கள்: ஆர்.கோபால் |  மாடல்: பூஜா
ஆன்லைன் மயத்திற்கு பின்னர் தொடரும் அவலம் சர்வர் கோளாறால் முடங்கும் அஞ்சல் துறை: நாள் முழுவதும் தபால் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் அவலம்


2018-03-18@ 01:26:48


நாகர்கோவில்: அஞ்சல் துறை முற்றிலும் ஆன்லைன்மயமாக்கப்பட்டுள்ள நிலையில் சர்வர் கோளாறு காரணமாக அடிக்கடி முடங்கி வருகிறது. இந்திய அஞ்சல்துறை முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. கோர் பேங்கிங் முறையில் தபால் நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால் எந்த ஒரு தபால் நிலையத்திலும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளது. அந்த வகையில் கணக்கு எண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும். ‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவாடா விவரத்தை அறியும் வசதி உள்ளது. செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி, மின்னணு அஞ்சல், இணைய வழி பில் தொகை செலுத்துதல், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொது சேமநல நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், வங்கி சேமிப்புக் கணக்கு, மாத வருவாய்த் திட்டம், வைப்புத் தொகைத் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டச் சேவைகள் எல்லாம் ஆன்லைன் சார்ந்ததாக உள்ளது. இதனால் தபால் நிலையங்களை தினமும் நாடுவோர் அதிகரித்து வருகின்றனர்.

இந்தநிலையில்தான் சர்வர் கோளாறு காரணமாக அஞ்சல்துறையின் செயல்பாடுகள் அவ்வப்போது முடங்குகிறது. ஆன்லைன் வசதி வந்த பிறகு பாஸ் புத்தகங்களில் சாதாரணமாக பதிவு செய்து தொகைகளை பெறுவது இல்லை. ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்காக முகவர்கள் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்கு முன்னதாகவும் அல்லது 30, 31ம் தேதிக்கு முன்னதாகவும் பணம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் சர்வர் கோளாறு காரணமாக அடிக்கடி கணினிகள் முடங்குவதால் பணம் செலுத்த முடியாமல் முகவர்கள் தவிக்கின்றனர்.

வங்கிகளை போன்றே தபால் சேவைகளில் தாமதம் ஏற்பட்டால் சேவைக்கு ஏற்ப அபராத தொகை செலுத்த வேண்டிய நிலை உண்டு. குறித்த காலத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால் திட்டத்தின் அடிப்படையில் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் ₹100க்கு ₹1 அபராதம் செலுத்த வேண்டி வரும். சர்வர் கோளாறு என்றாலும் அதற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுவது இல்லை. இதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாய் தபால்துறைக்கு அபராதமாகவும் கிடைக்கிறது. ஆன்லைன் மயமாக்கப்பட்ட நிலையில் அதற்கேற்ப சர்வர் வசதிகளை மேம்படுத்தவும், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும் தபால்துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் பணி பளு அதிகரிக்கும் வேளையில் சர்வர் கோளாறு உருவாகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே வங்கிகளுக்கு இணையான சேவைகளை தொடங்கியுள்ள அஞ்சல்துறை தனது தொழில்நுட்ப சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும். ஆன்லைன் பேங்கிங், மொபைல் போன் சார்ந்த நெட்பேங்கிங் பரிவர்த்தனைகளை மேலும் பரவலாக்க வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் விருப்பம் ஆகும்.

* நாடு முழுவதும் 1 லட்சத்து 54 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.
* தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்து 263க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கங்கள் உள்ளன.

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...