Sunday, March 18, 2018

சிங்கப்பூரில் விற்கப்படும் போத்தல் தண்ணீர் பாதுகாப்பானது'
17/3/2018 10:12

சிங்கப்பூரில் போத்தல்களில் விற்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது என்று வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவற்றின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும், அவை பாதுகாப்புத் தரநிலைகளை எட்டியதாகவும் ஆணையம் சொன்னது.

உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளைச் சோதிக்க, ஆணையம் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்வது வழக்கம்.

பொருட்கள் தரநிலைகளை எட்டத் தவறினால், அவற்றை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்படும்.

இதுவரை போத்தல் தண்ணீரைச் சோதனை செய்ததில் சந்தேகத்துக்குரிய ஏதும் தென்படவில்லை என்று ஆணையம் தெரிவித்தது.

உலகின் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் போத்தல் தண்ணீர் சிலவற்றில் ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பதாய் அண்மையில் தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து சேனல் நியூஸ் ஏஷியா ஆணையத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024