Friday, May 25, 2018

கர்நாடகாவை தொடர்ந்து கோவாவிலும் பாஜகவுக்கு சிக்கல்?- அரசுக்கு திடீர் நெருக்கடி

Published : 24 May 2018 20:46 IST

பனாஜி



கோவாவில் பாஜகவின் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் அம்மாநில அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கும் கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 104 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 இடங்களும், இதர கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைத்தன.

  மாநிலத்தில் ஆட்சி அமைக்க 7 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு தேவைப்பட்டது. போதிய பெரும்பான்மை இல்லாத போதும், எடியூரப்பாவிற்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மைய நிருபிக்க போதிய பலம் இல்லாததால் பின்னர் அவர் பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணியின் சார்பில் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றார்.

முன்னதாக, பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆளுநர் அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்பு கோவாவில் இதேபோன்ற சூழல் எழுந்தபோது, ஆளுநர் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை அழைக்காமல், கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைக்க முன்வந்த பாஜகவை அழைத்தார். இதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கோவாவிலும் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் மனு அளித்தது.

இந்நிலையில் கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு தற்போது உண்மையிலேயே ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கோவா அமைச்சருமான விஜய் சர்தேசாய் கூறுகையில் ‘‘கோவாவில் சுரங்கம் தோண்ட தடை விதிக்கப்பட்டதால் பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சி எடுக்க வேண்டும். இல்லயென்றால் மாநில அரசில் இருந்து வெளியேறுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி மற்றும் மஹாராஷ்டிரவாதி கோமந்த்தக் கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது; டி.ஜி.பி.,க்கு தலைமை செயலர் உத்தரவு

Added : மே 25, 2018 02:03 | 


 

எதிர்க்கட்சிகள், இன்று(மே 25) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி.,க்கு, அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:

* துாத்துக்குடியில் நடந்த, போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக, பால், குடிநீர், எரிபொருள் போன்றவை, தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* மருத்துவமனைகள், போக்குவரத்து வாகனங்கள், தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள், ரயில், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

* முக்கிய பகுதிகளில், போலீசார் ரோந்து செல்ல, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீசார் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* எந்த வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும், போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும்.

* போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அனைத்தும், முழு வேகத்தில் இயங்க வேண்டும். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால், சம்பவ இடத்திற்கு, உடனடியாக போலீசாரை அனுப்ப வேண்டும்

* மாவட்ட கலெக்டர்கள், பிற துறைகளின் வாகனங்களை, போலீஸ் எஸ்.பி.,க்கள், சொல்லும் இடங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும். இன்று காலை, 6:00 மணி முதல், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கையை, தலைமை செயலர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

Added : மே 25, 2018 01:14




சென்னை, : துாத்துக்குடி கலவரம் காரணமாக, அண்ணா பல்கலை தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி கலவரத்தால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 5க்கும், நாளை நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 6; 28ல் நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 7க்கும் மாற்றப்பட்டுள்ளது.

ஜூன், 29 முதல் நடக்கவுள்ள தேர்வுகள், திட்டமிட்டபடி நடத்தப்படும் என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
முதுகலை மருத்துவ கவுன்சிலிங் நிராகரிப்பை எதிர்த்து வழக்கு

Added : மே 25, 2018 05:25

மதுரை : முதுகலை மருத்துவப் படிப்பில் மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் நிராகரித்ததைஎதிர்த்து தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

திருச்சி பிரியா ஆர்த்தி தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை மருத்துவ மேற்படிப்பு 'நீட்' தேர்வில் 653 மதிப்பெண் பெற்றேன். அகில இந்தியஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்மார்ச்சில் நடந்ததில் பங்கேற்றேன். ராஜஸ்தான் மருத்துவக்கல்லுாரியில் எம்.டி.,படிப்பில்சேர்ந்தேன். அகில இந்திய ஒதுக்கீடுகவுன்சிலிங் முடிந்ததும், மாநில கவுன்சிலிங்கை மார்ச் 25 நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. மே 20 மாநிலகவுன்சிலிங்கில் அசல் கல்விச் சான்றை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, மருத்துவக் கல்விஇயக்குனரக தேர்வுக்குழு செயலர்நிராகரித்தார்.

விதிகள்படி அசல் சான்றுகள் அவசியமில்லை.என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்னைநிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில்அரசு மருத்துவக் கல்லுாரியில்இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். புதுக்கோட்டை நந்தினிதேவியும் மனு செய்தார்.நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஜூன் 12 க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
அடுத்தடுத்து போராட்டத்தால் திணறியது சென்னை

dinamalar 25.05.2018

சென்னை:சென்னையில் நேற்று, தி.மு.க., மற்றும் சில அமைப்பினர், அடுத்தடுத்த இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்து, மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.




''துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, மனு அளிக்க முயன்ற போது, முதல்வர், தங்களை சந்திக்க மறுத்து விட்டார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டி னார். அவரது தலைமையில், எம்.எல்.ஏ.,க் கள், தலைமைச் செயலக வளாகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன், கூடுதல் கமிஷனர், ஜெயராம் தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர், காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலைகளில் அமர்ந்து,

போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிமுனையில் இருந்து, அடையாறு வரை, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

அதேபோல், பாரிமுனையில் இருந்து, கோயம்பேடு வரை,பல மணி நேரம், வாகனங்கள் காத்துக் கிடந்தன. அதில், சென்ட்ரல் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய, ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கின.அதேபோல், தாம்பரம், சிட்லபாக்கம், பெருங்களத்துார் என, புறநகர் பகுதிகளிலும், தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியூர்களில் இருந்து, கோயம்பேடு நோக்கி வந்த பேருந்துகள், பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.

கோயம்பேட்டில் இருந்து, பெருங்களத்துார் வரை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆவடி, அம்பத்துார், கொளத்துார், பெரம்பூர், ராயபுரம், தங்கசாலை என, பல இடங்களிலும், சாலைமறியல் போராட்டங்கள்நடத்தப்பட்டன. இதனால், வட சென்னை முழுவதிலும் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.திருநின்றவூரில், காங்., கட்சியினரும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை சந்திப்பு, அசோக்நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங் களில், சாலை மறியல் போராட்டம் நடந்ததால்,

தி.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மாலையில், வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கில் இருந்து, மெரினா கடற்கரை நோக்கி, தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியினர், பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அவர்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் இருந்து, கிண்டி வரை போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தி.மு.க., மற்றும் சில அமைப்பினர், அடுத்தடுத்த இடங்களில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், சென்னை மாநகரம்,திணறியது.
வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'

Added : மே 25, 2018 02:40



சென்னை : ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, வரும், 28ல், நடக்கும் பேச்சுவார்த்தையில், தீர்வு எட்டப்படவில்லை எனில், வரும் 30, 31ம் தேதியில் நாடு முழுவதும், இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, அனைத்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளின், 10 லட்சம் ஊழியர்கள், இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ இடத்தை கைவிட்டால் ரூ.15 லட்சம் அபராதம்

Added : மே 25, 2018 02:11

சென்னை : 'கவுன்சிலிங்கில் பங்கேற்று, முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களை பெற்றவர்கள், அவற்றை கைவிட்டால், 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதுநிலை மருத்துவ படிப்பில், தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்காக மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், மே, 19 முதல், 23ம் தேதி வரை நடந்தது. கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை பெற்ற மாணவர்கள், அதில் சேராவிட்டால், இன்றைக்குள், இடத்தை திருப்பிஒப்படைக்க வேண்டும்.

அதைவிடுத்து, எம்.எஸ்., - எம்.டி., போன்ற, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை கைவிடுவோர், 15 லட்சம் ரூபாய்; எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமா இடங்களை கைவிடுவோர், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இடங்களை கைவிடுவோர், அடுத்த கட்ட கவுன்சிலிங்கில்பங்கேற்க முடியாது.

மாநில ஒதுக்கீட்டில் இடம் பெற்று, கல்லுாரியில் சேர்ந்தோர், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தால், அவர்கள் ஏற்கனவே பெற்ற, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தானாகவே ரத்தாகி விடும். அந்த இடம், மீண்டும் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 27.07.2026