Friday, May 25, 2018

அடுத்தடுத்து போராட்டத்தால் திணறியது சென்னை

dinamalar 25.05.2018

சென்னை:சென்னையில் நேற்று, தி.மு.க., மற்றும் சில அமைப்பினர், அடுத்தடுத்த இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்து, மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.




''துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, மனு அளிக்க முயன்ற போது, முதல்வர், தங்களை சந்திக்க மறுத்து விட்டார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டி னார். அவரது தலைமையில், எம்.எல்.ஏ.,க் கள், தலைமைச் செயலக வளாகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன், கூடுதல் கமிஷனர், ஜெயராம் தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர், காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலைகளில் அமர்ந்து,

போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிமுனையில் இருந்து, அடையாறு வரை, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

அதேபோல், பாரிமுனையில் இருந்து, கோயம்பேடு வரை,பல மணி நேரம், வாகனங்கள் காத்துக் கிடந்தன. அதில், சென்ட்ரல் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய, ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கின.அதேபோல், தாம்பரம், சிட்லபாக்கம், பெருங்களத்துார் என, புறநகர் பகுதிகளிலும், தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியூர்களில் இருந்து, கோயம்பேடு நோக்கி வந்த பேருந்துகள், பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.

கோயம்பேட்டில் இருந்து, பெருங்களத்துார் வரை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆவடி, அம்பத்துார், கொளத்துார், பெரம்பூர், ராயபுரம், தங்கசாலை என, பல இடங்களிலும், சாலைமறியல் போராட்டங்கள்நடத்தப்பட்டன. இதனால், வட சென்னை முழுவதிலும் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.திருநின்றவூரில், காங்., கட்சியினரும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை சந்திப்பு, அசோக்நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங் களில், சாலை மறியல் போராட்டம் நடந்ததால்,

தி.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மாலையில், வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கில் இருந்து, மெரினா கடற்கரை நோக்கி, தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியினர், பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அவர்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் இருந்து, கிண்டி வரை போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தி.மு.க., மற்றும் சில அமைப்பினர், அடுத்தடுத்த இடங்களில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், சென்னை மாநகரம்,திணறியது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...