Friday, May 25, 2018

இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது; டி.ஜி.பி.,க்கு தலைமை செயலர் உத்தரவு

Added : மே 25, 2018 02:03 | 


 

எதிர்க்கட்சிகள், இன்று(மே 25) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி.,க்கு, அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:

* துாத்துக்குடியில் நடந்த, போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக, பால், குடிநீர், எரிபொருள் போன்றவை, தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* மருத்துவமனைகள், போக்குவரத்து வாகனங்கள், தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள், ரயில், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

* முக்கிய பகுதிகளில், போலீசார் ரோந்து செல்ல, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீசார் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* எந்த வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும், போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும்.

* போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அனைத்தும், முழு வேகத்தில் இயங்க வேண்டும். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால், சம்பவ இடத்திற்கு, உடனடியாக போலீசாரை அனுப்ப வேண்டும்

* மாவட்ட கலெக்டர்கள், பிற துறைகளின் வாகனங்களை, போலீஸ் எஸ்.பி.,க்கள், சொல்லும் இடங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும். இன்று காலை, 6:00 மணி முதல், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கையை, தலைமை செயலர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...