Friday, May 25, 2018

கர்நாடகாவை தொடர்ந்து கோவாவிலும் பாஜகவுக்கு சிக்கல்?- அரசுக்கு திடீர் நெருக்கடி

Published : 24 May 2018 20:46 IST

பனாஜி



கோவாவில் பாஜகவின் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் அம்மாநில அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கும் கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 104 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 இடங்களும், இதர கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைத்தன.

  மாநிலத்தில் ஆட்சி அமைக்க 7 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு தேவைப்பட்டது. போதிய பெரும்பான்மை இல்லாத போதும், எடியூரப்பாவிற்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மைய நிருபிக்க போதிய பலம் இல்லாததால் பின்னர் அவர் பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணியின் சார்பில் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றார்.

முன்னதாக, பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆளுநர் அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்பு கோவாவில் இதேபோன்ற சூழல் எழுந்தபோது, ஆளுநர் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை அழைக்காமல், கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைக்க முன்வந்த பாஜகவை அழைத்தார். இதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கோவாவிலும் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் மனு அளித்தது.

இந்நிலையில் கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு தற்போது உண்மையிலேயே ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கோவா அமைச்சருமான விஜய் சர்தேசாய் கூறுகையில் ‘‘கோவாவில் சுரங்கம் தோண்ட தடை விதிக்கப்பட்டதால் பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சி எடுக்க வேண்டும். இல்லயென்றால் மாநில அரசில் இருந்து வெளியேறுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி மற்றும் மஹாராஷ்டிரவாதி கோமந்த்தக் கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...