Friday, May 25, 2018

மருத்துவ இடத்தை கைவிட்டால் ரூ.15 லட்சம் அபராதம்

Added : மே 25, 2018 02:11

சென்னை : 'கவுன்சிலிங்கில் பங்கேற்று, முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களை பெற்றவர்கள், அவற்றை கைவிட்டால், 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதுநிலை மருத்துவ படிப்பில், தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்காக மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், மே, 19 முதல், 23ம் தேதி வரை நடந்தது. கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை பெற்ற மாணவர்கள், அதில் சேராவிட்டால், இன்றைக்குள், இடத்தை திருப்பிஒப்படைக்க வேண்டும்.

அதைவிடுத்து, எம்.எஸ்., - எம்.டி., போன்ற, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை கைவிடுவோர், 15 லட்சம் ரூபாய்; எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமா இடங்களை கைவிடுவோர், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இடங்களை கைவிடுவோர், அடுத்த கட்ட கவுன்சிலிங்கில்பங்கேற்க முடியாது.

மாநில ஒதுக்கீட்டில் இடம் பெற்று, கல்லுாரியில் சேர்ந்தோர், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தால், அவர்கள் ஏற்கனவே பெற்ற, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தானாகவே ரத்தாகி விடும். அந்த இடம், மீண்டும் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024