Saturday, April 20, 2019

'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்'

Updated : ஏப் 20, 2019 06:39 | Added : ஏப் 20, 2019 01:12


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், ப்ளஸ் 2 தேர்வில், 91.05 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி, கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 15 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற, பிளஸ் 2 பொதுத் தேர்வில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, 217 பள்ளிகளைச் சேர்ந்த, 12,661 மாணவர்களும், 16,203 மாணவியரும் என, மொத்தம், 28,864 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 11,083 மாணவர்களும், 15,199 மாணவியரும் என, 26,282 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் 91.05 சதவீதம் பெற்று, 17வது இடத்தில் உள்ளது. இதில், 16 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

கஜா புயல்: இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஒரத்தநாடு கல்வி வட்டாரத்தில் உள்ள, 30 அரசு பள்ளிகளில், ஒன்பது பள்ளிகளும், பட்டுக்கோட்டை கல்வி வட்டாரத்தில், 26 பள்ளிகளில், நாண்கு பள்ளிகளும், பேராவூரணியில், ஏழு பள்ளிகளில், இரண்டு பள்ளிகளும் என, 15 பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024