அட்சய திருதியை நாள்: நகைக் கடைகளில் முன்பதிவு தீவிரம்
By நமது நிருபர், சென்னை | Published on : 05th May 2019 05:00 AM |
அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் நகை முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நகைகள் விற்பனை அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3-ஆவது நாளான வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அக்ஷ்யா என்ற சொல்லுக்கு குறைவில்லாதது என்று பொருள். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. அட்சய திருதியை அன்று குண்டுமணி அளவு தங்கநகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்போடு வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. அதன்படி, நிகழாண்டில் மே 7-ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, நகைக் கடைகளில் கடந்த 28-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து வருகின்றனர்.
35,000 நகைக் கடைகள்: தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் தற்போது முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அதிரடியாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு ஏற்றார்போல சலுகைகளை வழங்கியுள்ளனர். கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி, செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடி, அட்சய திருதியை அன்று விலை உயர்ந்தால் பதிவு செய்த விலைக்கே விற்கப்படும் என்று பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதுதவிர, அட்சய திருதியைக்காக நகைக் கடைகளில் பல ஆயிரக்கணக்கான புதிய வடிவமைப்புகளில் தங்க நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. எடை குறைவான தங்க சங்கிலி, பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் என்று பல ஆயிரக்கணக்கான டிசைன்கள் வந்துள்ளன. அட்சய திருதியைக்கு இன்னும் 2 நாள்கள் மட்டும் உள்ளநிலையில், முன்பதிவு மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைந்தது: இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் செல்லானி கூறியது: அட்சய திருதியை முன்னிட்டு, கடந்த 5 நாள்களாக முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவை பொருத்தவரை, கடந்த ஆண்டைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அட்சய திருதியை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் நகைகளை தேர்வு செய்து வாங்குவது என்பது கடினம். இப்போதே முன்பதிவு செய்தால், அந்த நேரத்தில் ஆர்டர் செய்த நகையை உடனடியாக வாங்கி செல்ல முடியும். அதனால் தான் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்கின்றனர். வழக்கமாக காலை 10 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்படும். அட்சய திருதியை அன்று அதிகாலை 3 மணி முதல் நகைக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள் அதிகாலை 2 மணி வரை கடைகள் திறந்து இருக்கும்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, கடந்த 55 நாள்களாக பணப்புழக்கம் குறைந்திருந்தது. இப்போது, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும், தங்கம் விலை குறைந்துள்ளது. இதுவே அட்சய திருதியை முன்பதிவு அதிகரிக்க காரணம். நிகழாண்டில் தங்கம் விற்பனை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
பாதுகாப்பு ஏற்பாடு: சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியது: கடந்த 2 மாதமாக நகை வியாபாரம் மந்தமாக இருந்தது. இப்போது தான் கொஞ்சம் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. அட்சய திருதியை நாளில் வியாபாரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தங்க நகை உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் எல்லாரும் தயாராக இருக்கிறோம். அட்சய திருதியை நாளில் நள்ளிரவு வரை கடைகள் இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க காவல்துறையிடம் பேசியுள்ளோம். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.
விற்பனை எவ்வளவு: தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் 5,000 கிலோவுக்கு அதிகமாக தங்கம் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு அதை விட விற்பனை அதிகரிக்கும் என்று நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment