Thursday, May 30, 2019

தீயில் கருகியது 10 ஏக்கர் கரும்பு

Added : மே 29, 2019 23:17

ராஜபாளையம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுாரில் திடீர் தீ விபத்தில் 10 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு கருகியது.தெற்கு வெங்காநல்லுார் ரோட்டில் நக்கனேரி செல்லும் வழியில் பெரியகுளம் கண்மாய் மற்றும் அலப்பசேரி கண்மாய் பாசன நிலங்களில் பல ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேற்று இப்பகுதியில் திடீரென தீ பற்றியதில் 10 ஏக்கர் கரும்பு சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள நெல்லித் தோப்பில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். விபத்திற்கான காரணம் குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாயி ரமேஷ் கூறுகையில், ''ஓர் ஆண்டு பாடுபட்டு விளைவித்த கரும்பு ஆலைக்கு அனுப்ப தயாரான நிலையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை, வெயில் போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், இந்த இழப்பும் சேர்ந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024