Tuesday, May 28, 2019

கோவில்களுக்கு சிறப்பு ரயில்

Added : மே 28, 2019 03:59

சென்னை, : கர்நாடகா மற்றும் கேரள மாநில கோவில்களில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலை இயக்குகிறது.இந்த சிறப்பு ரயில், மதுரையில் இருந்து, ஜூலை, 7ல் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, போத்தனுார் வழியாக செல்லும். இந்த பயணத்தில், கேரளாவில், குருவாயூர் கிருஷ்ணர், சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்லலாம்.ஆலப்புழாவில், படகு சவாரி செய்யலாம்.

கர்நாடகாவில் உடுப்பி கிருஷ்ணர், முருடேஸ்வரர், கொல்லுார் மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், தர்மசாலா மற்றும் குக்கே சுப்ரமணியா கோவில்களுக்கும் சென்று வரலாம். ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 9,925 ரூபாய் கட்டணம்.மேலும் தகவல்களுக்கு, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024