Saturday, May 25, 2019

வீட்டில் ஒன்பது பேர் : கிடைத்ததோ 5 ஓட்டு

Updated : மே 25, 2019 01:36 | Added : மே 24, 2019 21:52 | 





புதுடில்லி, ''என் குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேர்; ஆனால், எனக்கு விழுந்ததோ ஐந்து ஓட்டுகள்தான்,'' என, பஞ்சாபைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் கதறி அழுதது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.பஞ்சாபில், முதல்வர், அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஜலந்தர் லோக்சபா தொகுதியில், நீத்து ஷட்டர்ன் வாலா என்பவர், சுயேச்சையாகபோட்டியிட்டார்.இவருக்கு, ஐந்து ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த நீத்து, மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''என் வீட்டில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்; அனைவருமே எனக்கு ஓட்டளித்ததாக கூறினர்.''ஆனால், எனக்கு ஐந்து ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளன; என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, எனக்கு துரோகம் செய்து விட்டனர். இனி, தேர்தலில் போட்டியிட மாட்டேன்,'' எனக் கூறி கதறி அழுதார்.இந்த, 'வீடியோ' சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024