Sunday, May 26, 2019


அமெரிக்க பெண்ணை மணக்கும் பெரம்பலூர் இன்ஜினியர்

Added : மே 26, 2019 02:18

பெரம்பலுார், தமிழ் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய வந்த, அமெரிக்க நாட்டு இளம்பெண், பெரம்பலுார் வாலிபரை திருமணம் செய்ய உள்ளார்.அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், சான்போர்டு நகரைச் சேர்ந்தவர் பிரட்டி, 22. இவர், சில மாதங்களுக்கு முன், தமிழ் கலாசாரத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதற்தாக, பெற்றோருடன் சென்னைக்கு வந்தார்.சென்னையில் தங்கி, ஆய்வு செய்து வரும் பிரட்டி, தமிழ் கலாசாரம் பற்றி தகவல் தெரிந்தவர்கள், பதிவு செய்யுமாறு, 'பேஸ்புக்' பதிவில் தெரிவித்திருந்தார்.பெரம்பலுார் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியபிரகாஷ், 25, தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் மற்றும் படங்கள், வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இந்த பதிவை பார்த்த பிரட்டிக்கு, சூரியபிரகாஷுடன் பழக்கம் ஏற்பட்டது.பேஸ்புக் மூலம் இருவரும் மொபைல் நம்பர்களை பரிமாறி, பழகினர். நாளடைவில், காதலிக்க துவங்கினர். இருவரும், பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில், பிரட்டி -- சூரியபிரகாஷ் நிச்சயதார்த்தம், நேற்று முன்தினம் நடந்தது.இதில், இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக் கொண்டனர். நிகழ்ச்சியில், சூரியபிரகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.பிரட்டி கூறியதாவது:தமிழ் கலாசாரம், உடை, உணவு, அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை, திருமணம் செய்ய முடிவு செய்தேன். அப்போது தான், சூரியபிரகாஷுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.இருவரது மனமும் ஒத்துப் போனதால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தேதி முடிவு செய்யப்பட்டு, விரைவில் திருமணம் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.சூரியபிரகாஷ் கூறியதாவது:நாங்கள் இருவரும், அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். அதன்பின், தமிழ் கலாசாரப்படி, என் சொந்த ஊரில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.நிச்சயதார்த்த விழாவுக்கு, பிரட்டியின் பெற்றோரால் வர இயலவில்லை. அவர்கள் இருவரும், வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளனர்.நாங்கள் இருவரும் அமெரிக்கா செல்வதற்கான விசா வாங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024