Sunday, May 26, 2019

பிரமிக்க வைக்கும் வாய்ப்புகள் கொண்ட பி.காம்., (ஹானர்ஸ்) ஏசிசிஏ

Added : மே 26, 2019 08:38


இந்தியாவில் 10 ஆண்டுகளில் கல்விமுறையில் மாற்றம் வந்துள்ளது. இதில் கற்கும் முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம். இருப்பினும் அதன் தாக்கத்தை நாம் முழுமையாக உணரவில்லை.

ACCA படிப்பு எதற்காக?

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு உள்ள வர்த்தக படிப்பைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்த நிலையில் மாணவர்கள் பெற்றிருக்கும் வேலைத் திறனுக்கும், தொழில்சார் துறையின் எதிர்பார்ப்பிற்கும் நிறைய இடைவெளி உள்ளது.
இதை ஈடுகட்டும் வகையில் பட்டப்படிப்பு படிக்கும்போதே தொழில்சார் தகுதிகளை அதிகரிக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் நிறுவனங்களின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.
தகுதியற்ற திறன் காரணமாக வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்தமாணவர்களுக்கு ACCA (Association of Chartered Certified Accountants)போன்ற தொழில்சார் படிப்புகள் புதிய திருப்பத்தை உருவாக்கி உள்ளன.

ACCA என்றால் என்ன?

உலகளாவிய தொழில்சார் கணக்காளர்களைக் கொண்ட அமைப்பு இது. உலக அளவில் வணிகவியல், நிதி, நிர்வாக இயலில் வேலைவாய்ப்பு தேடும் திறமை உள்ள மாணவர்களுக்கு முதல் தர தகுதியை வழங்குகிறது.
1904ம் ஆண்டு லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த அமைப்பின் தகுதிகள் இந்தியா உட்பட 180 நாடுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்குமா?

இந்தியாவில் பல கல்லூரிகளில் பி.காம்., பாடத்திட்டத்தில் ACCA பாடங்களைச் சேர்த்துள்ளன. இதன் மூலம் வழக்கமான பட்டப்படிப்புடன் சேர்த்து, உலக அளவிலான தகுதியையும் மாணவர்கள் பெறுகின்றனர். Accounting and Business ல் Advanced Diploma பெறவும், லண்டன் ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலை ஹானர்ஸ் பட்டம் பெறவும், IFRS (International Financial Reporting Standards) சான்றிதழ் பெறவும் ACCA வழி வகுக்கிறது.
இந்தியாவில் இந்த படிப்பு இருக்கிறதா?

பிரிட்டனில் உள்ள ISDC (International Skill Development Corporation) என்ற நிறுவனம், இந்தியாவில் ACCA யின் அங்கீகரிக்கப்பட்ட கற்பிக்கும் அமைப்பாக உள்ளது. நிதி, வணிகஇயல் துறையில் உள்ள திறன் இடைவெளியை நிரப்புவதை நோக்கமாக கொண்டு, தொழில்சார் பயிற்சி அளிக்கும் பெரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. நாடு முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட பல்கலை, கல்லுாரிகளில் ISDC தன் பணியைச் செய்து வருகிறது.
மாணவர்கள் விரும்ப என்ன காரணம்?

உலகப் பொருளாதாரம் வேகமாக மாறி வரும் சூழ்நிலையில் சரியான திறனை நாட்டிற்கு வழங்குவதும், அதன் மூலம் நாட்டைக் கட்டமைப்பதும் முக்கிய பணி. பெண்களுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ள போதும் முறையான வேலைவாய்ப்பு இன்னமும் 9 சதவீதமாகவே உள்ளது. உலகிலேயே 25 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் இந்தியாவில் அதிகம். பெரும்பான்மையான மாணவர்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த இரு காரணங்களே வாய்ப்புகளை முன் வைக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் நிலையான, திறமைமிக்க, திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை அவசரமாக முறைப்படுத்த வேண்டிய தருணம் இது.மதுரையில் எந்த கல்லுாரியில் இதைப் படிக்கலாம்?மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (SLCS) மட்டுமே இந்த படிப்பு உள்ளது.

SLCS கல்லூரியில் என்ன சிறப்பு?

விடுதியில் தங்கித்தான் படிக்க வேண்டும். காலையில் பி.காம்., ( Hon) படிப்பும், பிற்பகலில் Spoken English, Hindi, Accountancy போன்றவைக் கற்றுத்தரப்படும். படிப்பை முடித்தவுடன் வெளிநாடுகளில் கூட வேலைவாய்ப்பு கிடைக்கும் உத்தரவாதம் உள்ளது.

தொடர்பு கொள்ள:

bcom@rlinstitutes.in
‪95006 65563‬, ‪95006 95086‬

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024