Sunday, May 26, 2019

பிசியோதெரபி' 29ல் கவுன்சிலிங்

Added : மே 25, 2019 19:58

சென்னை, : முதுநிலை, 'பிசியோதெரபி' படிப்புக்கு, 74 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதற்கு, வரும், 29ம் தேதி, கவுன்சிலிங் நடைபெற உள்ளது.தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 800 முதுநிலை இயன்முறை மருத்துவ படிப்பு எனப்படும், பிசியோதெரபி இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 2019 - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கு, இளநிலை இயன்முறை மருத்துவம் படித்த, 74 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. வரும், 29ம் தேதி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில், கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024