Tuesday, May 28, 2019

ஓய்வூதியரின் சிகிச்சை செலவு

Added : மே 28, 2019 03:56

மதுரை : ஓய்வூதியருக்கு அறுவை சிகிச்சை செலவு தொகையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அரசு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது. துாத்துக்குடியைச் சேர்ந்தவர், முத்துமாலை. ஓய்வூதியரான இவரிடம் இருந்து, தமிழக அரசின் புதிய காப்பீடு திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. முத்துமாலைக்கு, மதுரை தனியார் மருத்துவமனையில், சமீபத்தில் முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்குரிய செலவு தொகை, 4 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாயை வழங்கக் கோரி, துாத்துக்குடி கலெக்டருக்கு விண்ணப்பித்தார். 

'காப்பீடு திட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை' எனக் கூறி, கலெக்டர் நிராகரித்தார்.அதை ரத்து செய்து, தொகையை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில், முத்து மாலை மனு தாக்கல் செய்தார்.நீதிபதி, ஆர்.மகாதேவன் உத்தரவு:மனுதாரருக்கு, முக்கிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; அவருக்கு தொகையை வழங்க முடியாது என மறுக்க முடியாது.நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை, கலெக்டர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.தமிழக அரசு, இன்சூரன்ஸ் கம்பெனி இடையே செய்த ஒப்பந்தப்படி, மனுதாரருக்கு தொகையை வழங்கும் சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்ய வேண்டும். முதலில் கூறிய அதே காரணத்தைக் கூறி, மீண்டும் நிராகரிக்கக் கூடாது.இவ்வாறு, உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024