Saturday, May 25, 2019

மாட்டின் மீது மோதிய ரயில் இன்ஜின் பழுதால் தாமதம்

Added : மே 25, 2019 00:04

ராமநாதபுரம், ராமேஸ்வரம்-சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் அருகே மாடு மீது மோதியதில் இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் 3 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில், ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை ரயில்வே கேட் அருகே சென்ற மாடு ரயிலில் அடிப்பட்டு இறந்தது. இதனால் ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து பழுதை சரி செய்து 3:00 மணிநேரம் தாமதமாக இரவு 12:45 மணிக்கு ரயில் ராமநாதபுரம் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது.மூன்று மணிநேரம் தாமதத்தால் பயணிகள் அவதியுற்றனர். தண்டவாளத்தில் மாடு அடிபட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...