Monday, August 26, 2019

ஊதிய உயர்வு கோரி 3-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்; அரசு டாக்டர்கள் நாளை வேலைநிறுத்தம்: அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் 


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3-வது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னை யில் 3-வது நாளாக உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் நாளை வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள னர். இதனால், அரசு மருத்துவ மனைகளில் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடி வின்படி கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமனை வளா கத்தில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தை அரசு டாக்டர்கள் கடந்த 23-ம் தேதி தொடங்கினர். அரசு டாக்டர்கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச் சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகிய 6 பேர் இரவு, பகலாக மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள னர். நேற்று மூன்றாவது நாளாக 6 அரசு டாக்டர்களும் உண்ணா விரதத்தைத் தொடர்ந்தனர்.

இவர்களின் உண்ணாவிரதத் துக்கு அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் நேரில் வந்து ஆத ரவு தெரிவித்து வருவதால் மருத்து வமனை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

இதற்கிடையே கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (27-ம் தேதி) தமிழகம் முழு வதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன் கூறிய தாவது: இந்தியாவில் சுகாதா ரத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரு கிறது. இதற்கு அரசு டாக்டர்கள்தான் முக்கிய காரணம். ஆனால், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அரசு டாக்டர்கள் குறைவான ஊதி யம் வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை அரசுக்கு ரூ.2,200 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளோம். ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டிக் கொடுக்கிறோம்.

இவ்வளவும் செய்துக் கொண்டு, மருத்துவக் கல்லூரி கள் மூலம் டாக்டர்களை உரு வாக்கி அனுப்பி வருகிறோம். ஆனால், எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு மறுக்கிறது.

எங்களுக்கு போதுமான ஊதி யத்தை வழங்கினால், நாங்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லப்போகிறோம்? அரசு டாக் டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். டாக்டர்களின் எண்ணிக் கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக் கூடாது.

அரசு மருத்துவர்களுக்கு முது நிலை மற்றும் உயர்சிறப்பு மருத் துவக் கல்வியில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மக்களின் நலன்கருதி மீண் டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (27-ம் தேதி) தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...