Monday, August 26, 2019

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல அரசு பேருந்து முன்பதிவு நாளை தொடக்கம்

சென்னை 

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் 2 வாரங் களில் ஆலோசனை நடத்த வுள்ளனர்.


இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ம் தேதி ஞாயிறுக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெளியூர்களில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்றே அதா வது, அக்டோபர் 25-ம் தேதியே சொந்த ஊருக்குச் செல்ல திட்ட மிட்டுள்ளனர். தென் மாவட்டங் களுக்கு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது.

இதற்கிடையே தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடுவதால், பெரும்பாலான மக்கள் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை நம்பி இருக்கின்றனர்.

தமிழகத்தில் 300 கி.மீ.க்கு அதிகமான தொலைவுள்ள இடங் களுக்கு அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் சார்பில் சொகுசு, ஏசி பேருந்துகள் இயக்கப்படு கின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின் றனர். அரசு விரைவுப் பேருந்து களில் 60 நாட்களுக்கு முன்பு டிக் கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், அக் டோபர் 25-ம் தேதிக்கான முன்பதிவு நாளை (27-ம் தேதி) தொடங்குகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். விரைவுப் போக்குவரத்து கழகத்தில் படுகை வசதி, ஏசி வசதி மற்றும் சொகுசு விரைவு பேருந்துகள் அதிக அளவில் இணைக்கப்பட் டுள்ளதால், பொதுமக்கள் விரும்பி பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

பொதுமக்கள் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com ஆகிய இணையதளங்கள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அடுத்த 2 வாரங்களில் நடக்க உள்ளது. அதன்பின்னரே, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அரசு அறிவிக்கும்.

பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால், நெரிசலை குறைக்கும் வகையில் திட்டமிட்டு பேருந்துகளை இயக்குவது குறித்து போலீஸாருடனும் ஆலோசனை நடத்த உள்ளோம். தீபாவளிக்கு போதிய அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...