பதிவாளர் தேர்வு இழுபறி நேர்காணல் நடப்பது எப்போது
Added : ஆக 11, 2019 04:52
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தேர்வு பணியில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலை ரெகுலர் பதிவாளர் பதவிக்கு 24 பேர் விண்ணப்பித்தனர்.
Added : ஆக 11, 2019 04:52
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தேர்வு பணியில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலை ரெகுலர் பதிவாளர் பதவிக்கு 24 பேர் விண்ணப்பித்தனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் சந்தோஷ்பாபு, அழகப்பா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஜெயகாந்தன், பாரதியார் பல்கலை ஓய்வு பேராசிரியர் ஜெயக்குமார் தேர்வு குழு விண்ணப்பங்களை பரிசீலித்தது.குற்ற பின்னணியுள்ள இருவர் உட்பட 20 பேரை ஏற்றும், நால்வரின் விண்ணப்பத்தை நிராகரித்தும் ஜூலை 29ல் தேர்வு குழு அறிவித்தது. ஆனால் அதையடுத்து நேர்காணலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
துணைவேந்தர் தலைமையில் அதற்கான குழுவை கூட இன்னும் முடிவு செய்யாமல் இழுபறி நீடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: பதிவாளர் தேர்வில் ஆரம்பத்தில் இருந்தே இழுபறி நீடிக்கிறது. இதன் மர்மம் விளங்கவில்லை. விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின் நேர்காணல் நடத்த இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வழிவகை உண்டு. இதன்படி பார்த்தாலும் ஆக., மூன்றாவது வாரம் நேர்காணல் நடத்த வேண்டும். ஆனால் நேர்காணல் தேர்வு குழு கூட இன்னும் முடிவு செய்யப்படவில்லை
.இதற்கிடையே நேர்காணல் பட்டியலில் இடம்பெற்ற குற்றப் பின்னணியுள்ள இருவர், தங்கள் மீதான வழக்குகளை சரிக்கட்டி நேர்காணலில் பங்கேற்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே யூகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் விரைவில் புதிய பதிவாளரை அறிவிக்க துணைவேந்தர் கிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment