Tuesday, August 27, 2019

பாரதிதாசன் பல்கலைக்கு தேசிய விருது

Added : ஆக 27, 2019 01:17

திருச்சி:நாட்டு நலப்பணி திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியதற்காக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலையின், என்.எஸ்.எஸ்., என்ற, நாட்டு நலப்பணி திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 79 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து, 32 ஆயிரத்து, 502 யூனிட் ரத்த தானம் பெற்று, மருத்துமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 972 மருத்துவ முகாம்களும், பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.'துாய்மை இந்தியா' திட்டத்தில், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் உள்பட, 421 பொது இடங்கள் துாய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நலப்பணி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை சார்பில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.செப்., 24ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில், இந்த விருது வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இருந்து, பாரதிதாசன் பல்கலை உட்பட, இரண்டு பல்கலைகள் மட்டுமே, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

‘UGC will debar univs that are found violating PhD quality standards’ TALKING TO TOI

‘UGC will debar univs that are found violating PhD quality standards’ TALKING TO TOI  The University Grants Commission (UGC) is rolling out ...