ரூ.5,00 லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு
Added : ஆக 23, 2019 01:29
சேலம், ஓய்வூதிய பலனை பெற்றுத்தர, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கருவூல கண்காணிப்பாளருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர், முகமது ஷாலிக், 59; சேலம் அரசு மருத்துவமனை, சித்தா பிரிவில், மருந்தாளுனராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று விட்டார். தன் ஓய்வூதிய பலன், 2.25 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை பெற, சேலம் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் கதிர்வேலு, 46, என்பவரை அணுகியுள்ளார்.
அவர், 500 ரூபாய் லஞ்சம் கேட்க, லஞ்ச ஒழிப்பு போலீசில், முகமது ஷாலிக் புகார் அளித்தார். 2007, பிப்., 19ல், 500 ரூபாயை வாங்கிய கதிர்வேலுவை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கதிர்வேலுக்கு, மூன்றாண்டு சிறை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுகந்தி, நேற்று தீர்ப்பளித்தார்.

No comments:
Post a Comment